»   »  இலியை தூக்கிய த்ரி

இலியை தூக்கிய த்ரி

Subscribe to Oneindia Tamil

டோலிவுட்டில் இலியானாவுக்கும், த்ரிஷாவுக்கும் இடையிலான போட்டி கடுமையாகமாறி களேபரமாகி வருகிறதாம்.

போட்டியில்லாத நாயகியாக த்ரிஷா தெலுங்கு திரையுலகை கலக்கி வந்தார். அவருக்குஆப்பு வைப்பது போல வந்து சேர்ந்தார் இலியானா.

தெலுங்குப் பட நாயகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக மாறியுள்ளார் இலியானா.அங்குள்ள பெரும்பாலான ஹீரோக்கள், குறிப்பாக ஜூனியர் ஹீரோக்கள்இலியானான்னா கால்ஷீட் தரேண்ணா என்று தயாரிப்பாளர்களிடம் மறுகுகிறார்களாம்.அந்த அளவுக்கு இலியானா உருக்க ஆரம்பித்திருக்கிறார்.

இத்தனைக்கும் இலியானா நடித்த போக்கிரி என்ற ஒரே ஒரு படம்தான் அங்குசெமையாக ஓடியுள்ளது. அந்த ஒத்தப் படத்திற்கே இம்புட்டு மார்க்கெட்ஏற்பட்டிருப்பதால் இலியானாவும் ஒசந்த சம்பளத்தைக் கோரி, தர ஒப்புக்கொள்கிறவர்களிடம் கால்ஷீட் கொடுத்து வருகிறாராம்.

இதனால் த்ரிஷாவின் நிலை திரிசங்கு சொர்க்கம் போல மாறியுள்ளது. இலியானாவின்வருகைக்கு முன்பு வரை த்ரிஷாதான் அங்கு கிராக்கியான நடிகையாக இருந்தார்.ஆனால் இலியானா வந்த பின்னர் த்ரிஷாவின் மார்க்கெட் சறுக்க ஆரம்பித்துள்ளதாம்.

ஆனால் இப்போது ஸ்டாலின் புண்ணியத்தால் சரிவு தடுக்கப்பட்டு மீண்டும்ஸ்டெடியாகியுள்ளார் த்ரிஷா. இதனால் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு வந்துள்ளதாம்அம்மணியிடம்.

ஸ்டாலின் தெலுங்கில் மெகா மஹா ஹிட் படமாகி விட்டதால், த்ரிஷாவுக்கு மீண்டும்கிராக்கி அதிகரிக்க ஆரம்பித்துள்ளதாம். அதன் உச்சகட்டமாக இலியானா புக்ஆகியிருந்த டான் என்ற படத்தில் தற்போது இலியானாவுக்குப் பதில் த்ரிஷா நடிப்பார்என அறிவித்துள்ளனர்.

டான்ஸ் மாஸ்டர் லாரன்ஸ் ராகவேந்திரா இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிறது.நாகார்ஜூனா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இலியானாவை ஒப்பந்தம்செய்திருந்தனர். ஆனால் அவர் ஏகப்பட்ட டிமாண்டுகளைப் போட்டதால் என்னசெய்யலாம் என்ற குழப்பம் யூனிட்டுக்கு ஏற்பட்டது.

இதை அறிந்த த்ரிஷா தரப்பு உள்ளே புகுந்து சில சலுகைகளை சொல்லி வாய்ப்புகேட்டது. அதுக்கு இது பெஸ்ட்டா இருக்கே என்று யோசித்த நாகார்ஜுனாவும்,லாரன்ஸும் த்ரிஷாவை புக் செய்து விட்டனராம்.

இந்த வெற்றியைப் பெற த்ரிஷா ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட்களைசெய்துள்ளாராம். 1 கோடியாக உயர்த்திய தனது சம்பளத்தை வெகுவாககுறைத்துள்ளாராம். எக்ஸ்ட்ரா கிளாமர் காட்சிகளுக்கு ஓ.கே. சொல்லியுள்ளாராம்.மொத்தமாக கால்ஷீட் கொடுக்கவும் சம்மதித்துள்ளாராம்.

த்ரிஷா, இலியானாவுக்கு ஆப்பு வைத்தால், இலியானா மலையாள த்ரிடிகை மம்தாமோகன்தாஸுக்கு இன்னொரு பக்கம் இடியாப்பு வைத்துள்ளார்.

எம்.எஸ்.ராஜு என்பவர் தான் இயக்கவுள்ள அட என்ற படத்தில் (ஹீரோ பாய்ஸ்சித்தார்த்) மம்தாவை ஹீரோயினாக போட முடிவு செய்திருந்தார். அத்தோடுமம்தாவை பாட வைக்கவும் தீர்மானித்திருந்தார். இதனால் மம்தா டபுள் சந்தோஷத்தில்இருந்தார்.

ஆனால் இப்போது அத்தனைக்கும் ஆப்பு வைத்து விட்டார் இலியானா. ராஜுவைஅணுகிய அவர் தன்னை ஹீரோயினாக போடுமாறும், சகலவிதமான ஒத்துழைப்பும்சகாயமாக கிடைக்கும் எனவும் ஓலை விட, ரொங்கிப் போன ராஜு, மம்தாவை கழற்றிவிட்டு விட்டு இலியானானை இழுத்துப் போட்டுள்ளாராம்.

இதனால் மம்தா சோகத்தில் மூழ்க ஹீரோ சித்தார்த் படு குஷியாகி இருக்கிறாராம்.

நல்ல பொழப்பு...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil