»   »  சிக்கலோ சிக்கலில் இம்சை! வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் பெரிதாகிக்கொண்டே போகிறது. பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்குக் கூட கொண்டு போய்விடுவார்கள் போலிருக்கிறது. ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு இரட்டை வேடத்தில் அசத்தியிருக்கும் முழு நீளகாமெடிப் படமான இம்சை அரசன் பெரும் சிக்கலில் தொக்கி நிற்கிறது. இப்படத்தில்ஏகப்பட்ட குதிரைகள், யானைகளை பயன்படுத்தி படத்தை எடுத்துள்ளார்கள்.இப்படி விலங்குகளைப் போட்டு படம் எடுத்தால், விலங்குகள் வாரியத்தின் முன்அனுமதியைப் பெற்றிருக்க வேண்டுமாம். இதைச் செய்யத் தவறியதால் தணிக்கைவாரியம் சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டது.இதனால் கடுப்பாகிப் போன ஷங்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்தவழக்கு நிலுவையில் உள்ளது. இந்தப் படத்திற்கு விலங்குகள் நல வாரியத்தின்ஆட்சேபனை இல்லை சான்றிதழ் கிடைக்காவிட்டால் தணிக்கை வாரியம் சான்றிதழ்வராது.தணிக்கை வாரியத்தின் வழக்கறிஞர் சந்தானம் கூறுகையில்,இம்சை அரசனில் ஏகப்பட்ட விலங்குகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மும்பைஉயர்நீதிமன்றம், விலங்குகளைப் பயன்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்குவிலங்குகள் நல வாரியத்தின் அனுமதியும்,ஆட்சேபனை இல்லை சான்றிதழும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தெளிவாககூறியுள்ளது. எனவே இதில் தணிக்கை வாரியம் எதுவும் செய்ய முடியாது என்றார்.விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரனோ,இதுவரை எந்தப் படத்திற்கும் இப்படி ஒரு சான்றிதழை நாங்கள் கொடுத்ததில்லை.இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் அமலில் இல்லை. தணிக்கை வாரியம் இப்படிக்கூறுவது தவறானது என்கிறார்.இப்படி இரு தரப்பினரும் குழப்பிக் கொண்டிருப்பதால் இம்சை அரசின் சிக்கிசின்னாபின்னாமாகி வருகிறார். தெளிவில்லாத சட்டங்களால் குழப்பம் கூடியுள்ளதால்,இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசைக்கேட்டுக் கொண்டுள்ளது.ஆனால் இதுவரை மத்திய அரசும் எந்தப் பதிலும் தராமல் உள்ளது.இந்த வழக்கில் பிரதிவாதியாக இதுவரை மத்திய அரசு சேர்க்கப்படவில்லை.இதனால்தான் மத்திய அரசு பதில் அளிப்பதில் தாமதம் செய்வதாக நினைத்த படத்தின்இயக்குனர் சிம்புதேவனின் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, மத்திய அரசையும் இதில்ஒரு பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனுசெய்துள்ளார்.இதையடுத்து அடுத்த திங்கள்கிழமைக்குள் பதில் தருமாறு மத்திய அரசுக்குஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போதாவது இந்த சிக்கலுக்கு ஏதாவதுவிமோச்சனம் கிடைக்குமா என்று இம்சை அரசன் யூனிட் பெரும் எதிர்பார்ப்போடுகாத்துள்ளது.

சிக்கலோ சிக்கலில் இம்சை! வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் பெரிதாகிக்கொண்டே போகிறது. பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்குக் கூட கொண்டு போய்விடுவார்கள் போலிருக்கிறது. ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு இரட்டை வேடத்தில் அசத்தியிருக்கும் முழு நீளகாமெடிப் படமான இம்சை அரசன் பெரும் சிக்கலில் தொக்கி நிற்கிறது. இப்படத்தில்ஏகப்பட்ட குதிரைகள், யானைகளை பயன்படுத்தி படத்தை எடுத்துள்ளார்கள்.இப்படி விலங்குகளைப் போட்டு படம் எடுத்தால், விலங்குகள் வாரியத்தின் முன்அனுமதியைப் பெற்றிருக்க வேண்டுமாம். இதைச் செய்யத் தவறியதால் தணிக்கைவாரியம் சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டது.இதனால் கடுப்பாகிப் போன ஷங்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்தவழக்கு நிலுவையில் உள்ளது. இந்தப் படத்திற்கு விலங்குகள் நல வாரியத்தின்ஆட்சேபனை இல்லை சான்றிதழ் கிடைக்காவிட்டால் தணிக்கை வாரியம் சான்றிதழ்வராது.தணிக்கை வாரியத்தின் வழக்கறிஞர் சந்தானம் கூறுகையில்,இம்சை அரசனில் ஏகப்பட்ட விலங்குகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மும்பைஉயர்நீதிமன்றம், விலங்குகளைப் பயன்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்குவிலங்குகள் நல வாரியத்தின் அனுமதியும்,ஆட்சேபனை இல்லை சான்றிதழும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தெளிவாககூறியுள்ளது. எனவே இதில் தணிக்கை வாரியம் எதுவும் செய்ய முடியாது என்றார்.விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரனோ,இதுவரை எந்தப் படத்திற்கும் இப்படி ஒரு சான்றிதழை நாங்கள் கொடுத்ததில்லை.இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் அமலில் இல்லை. தணிக்கை வாரியம் இப்படிக்கூறுவது தவறானது என்கிறார்.இப்படி இரு தரப்பினரும் குழப்பிக் கொண்டிருப்பதால் இம்சை அரசின் சிக்கிசின்னாபின்னாமாகி வருகிறார். தெளிவில்லாத சட்டங்களால் குழப்பம் கூடியுள்ளதால்,இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசைக்கேட்டுக் கொண்டுள்ளது.ஆனால் இதுவரை மத்திய அரசும் எந்தப் பதிலும் தராமல் உள்ளது.இந்த வழக்கில் பிரதிவாதியாக இதுவரை மத்திய அரசு சேர்க்கப்படவில்லை.இதனால்தான் மத்திய அரசு பதில் அளிப்பதில் தாமதம் செய்வதாக நினைத்த படத்தின்இயக்குனர் சிம்புதேவனின் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, மத்திய அரசையும் இதில்ஒரு பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனுசெய்துள்ளார்.இதையடுத்து அடுத்த திங்கள்கிழமைக்குள் பதில் தருமாறு மத்திய அரசுக்குஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போதாவது இந்த சிக்கலுக்கு ஏதாவதுவிமோச்சனம் கிடைக்குமா என்று இம்சை அரசன் யூனிட் பெரும் எதிர்பார்ப்போடுகாத்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

வடிவேலுவின் இம்சை அரசன் 23ம் புலிகேசிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் பெரிதாகிக்கொண்டே போகிறது. பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்குக் கூட கொண்டு போய்விடுவார்கள் போலிருக்கிறது.

ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு இரட்டை வேடத்தில் அசத்தியிருக்கும் முழு நீளகாமெடிப் படமான இம்சை அரசன் பெரும் சிக்கலில் தொக்கி நிற்கிறது. இப்படத்தில்ஏகப்பட்ட குதிரைகள், யானைகளை பயன்படுத்தி படத்தை எடுத்துள்ளார்கள்.

இப்படி விலங்குகளைப் போட்டு படம் எடுத்தால், விலங்குகள் வாரியத்தின் முன்அனுமதியைப் பெற்றிருக்க வேண்டுமாம். இதைச் செய்யத் தவறியதால் தணிக்கைவாரியம் சான்றிதழ் கொடுக்க மறுத்து விட்டது.

இதனால் கடுப்பாகிப் போன ஷங்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்தவழக்கு நிலுவையில் உள்ளது. இந்தப் படத்திற்கு விலங்குகள் நல வாரியத்தின்ஆட்சேபனை இல்லை சான்றிதழ் கிடைக்காவிட்டால் தணிக்கை வாரியம் சான்றிதழ்வராது.

தணிக்கை வாரியத்தின் வழக்கறிஞர் சந்தானம் கூறுகையில்,

இம்சை அரசனில் ஏகப்பட்ட விலங்குகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மும்பைஉயர்நீதிமன்றம், விலங்குகளைப் பயன்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்குவிலங்குகள் நல வாரியத்தின் அனுமதியும்,

ஆட்சேபனை இல்லை சான்றிதழும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தெளிவாககூறியுள்ளது. எனவே இதில் தணிக்கை வாரியம் எதுவும் செய்ய முடியாது என்றார்.

விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரனோ,இதுவரை எந்தப் படத்திற்கும் இப்படி ஒரு சான்றிதழை நாங்கள் கொடுத்ததில்லை.இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் அமலில் இல்லை. தணிக்கை வாரியம் இப்படிக்கூறுவது தவறானது என்கிறார்.

இப்படி இரு தரப்பினரும் குழப்பிக் கொண்டிருப்பதால் இம்சை அரசின் சிக்கிசின்னாபின்னாமாகி வருகிறார். தெளிவில்லாத சட்டங்களால் குழப்பம் கூடியுள்ளதால்,இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசைக்கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் இதுவரை மத்திய அரசும் எந்தப் பதிலும் தராமல் உள்ளது.

இந்த வழக்கில் பிரதிவாதியாக இதுவரை மத்திய அரசு சேர்க்கப்படவில்லை.இதனால்தான் மத்திய அரசு பதில் அளிப்பதில் தாமதம் செய்வதாக நினைத்த படத்தின்இயக்குனர் சிம்புதேவனின் வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி, மத்திய அரசையும் இதில்ஒரு பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனுசெய்துள்ளார்.

இதையடுத்து அடுத்த திங்கள்கிழமைக்குள் பதில் தருமாறு மத்திய அரசுக்குஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போதாவது இந்த சிக்கலுக்கு ஏதாவதுவிமோச்சனம் கிடைக்குமா என்று இம்சை அரசன் யூனிட் பெரும் எதிர்பார்ப்போடுகாத்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil