»   »  வடிவேலுவின் மைல் கல் இம்சை: ரஜினி சிவாஜிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் போல, நாகேஷுக்கு திருவிளையாடல் போல, வடிவேலுவுக்கு இம்சைஅரசன் 23ம் புலிகேசி திருப்புமுனை படமாகும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு முதல் முறையாக வரலாற்று கதையின் நாயகனாகஇரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி சக்கை போடு போட்ட இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது.கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வடிவேலுஉள்ளிட்ட கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருது வழங்கினார். நிகழ்ச்சியில் ரஜினி பேசுகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதிசபதம் என்ற படம் வெளியானது. அதில் கல்வி, வீரம், செல்வம் ஆகியவற்றில் சிறந்தது என்று போட்டி வரும்.கடைசியில் ஒரு மனிதனுக்கு இது மூன்றுமே முக்கியம் என்ற கருத்துடன் படம் முடியும்.அதேபோல இம்சை அரசனைப் பொருத்தவரை கதை, எழுதி படத்தை இயக்கிய சிம்புதேவன் கல்வியையும்,பணம் போட்ட ஷங்கர் செல்வத்தையும், நடிப்பாற்றலை வெளிப்படுத்திய வடிவேலு வீரத்தையும்,நினைவுபடுத்தியுள்ளனர்.இந்த மூன்றுமே சரியாக அமைந்ததால் படம் பெறும் வெற்றியைப் பெற்றுள்ளது. என்னைப் பொருத்தவரை முதல்பாராட்டு செல்வத்தை வழங்கிய ஷங்கருக்குத்தான். ஏனெனின் சிம்பு தேவன் சொன்ன மூன்று கதைகளை கேட்டுவிட்டு இக்கதையை தேர்ந்தெடுத்து அதை நம்பி பணம் போட்டதற்காக அவருக்கு முதல் பாராட்டு.ஷங்கர் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, நல்ல தயாரிப்பாளரும் கூட. படம் தயாரான பின்னரும் வெளியாக பலசிரமங்கள் ஏற்பட்டது. அதற்காக அவருடைய வீட்டைக் கூட அடமானம் வைத்தார் என்றால் பார்த்துக்கொள்ளங்கள். ரூ. 6 கோடி செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்.நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சிரமம் என்றால் துண்டை அடகு வைக்கலாம். ஆனால்வேட்டியை மட்டும் அடமானம் வைத்து விடக் கூடாது. எனவே படம் தயாரிப்பவர்கள் சொத்துக்களை அடமானம்வைத்து படம் எடுக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.அந்தக் காலத்தில் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர் படங்கள் எல்லாம் உடனடியாக விற்று விடும். ஆனால் சின்னவயதிலேயே ஷங்கர் படங்கள் தமிழகத்தைத் தாண்டி நாடு முழுவதும் உடனடியாக வியாபாரம் ஆகிறது. சிவாஜிபடத்தைப் பாருங்கள் உங்களுக்கே தெரியும்.ஷங்கரை நல்ல சிந்தனையாளர், சிறந்த இயக்குநர் என்கிறார்கள். அது தப்பு. அவருக்குள் 16 வயது இளைஞன்இருக்கிறான். அவனது தாகத்தைத் தணிப்பதும், உணவு போடுவதும் தான் ஷங்கரின் வேலை. அதற்கு அவருக்குப் பின்னால் கடுமையான உழைப்பும், நேரத்தை அவர் பயன்படுத்தும் விதம் உள்ளது.அவரைப் பற்றி நிறையப் பேசலாம். சிவாஜி வெற்றி விழாவில் விரிவாகப் பேசுகிறேன்.அப்புறம் சிம்புதேவன். இந்தக் காலத்தில் சரித்திரப் பின்னணியோடு கூடிய ஒரு கதையைத் தேர்வு செய்து, அதற்குசரியான நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார். இந்த ஒரு படத்திலேயே 100 படங்களை இயக்கியஅனுபவம் தெரிகிறது.இது வெறும் காமெடிப் படம் மட்டுமல்ல. சமூகத்துக்குத் தேவையான பல நல்ல கருத்துக்களையும் வைத்துள்ளனர்.குறிப்பாக படத்தின் இறுதியில் 10 கட்டளைகளைச் சொல்லலாம்.என்னைக் கேட்டால், இப்படத்தின் 2ம் பாகத்தை இதே கூட்டணி மீண்டும் தயாரித்து மக்களை மகிழ்ச்சிக் கடலில்ஆழ்த்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.இப்படத்தின் ஆணிவேராக இருப்பவர் வடிவேலு. சிவாஜியின் நடிப்பைப் பார்த்துத்தான் வீரபாண்டியகட்டபொம்மன், சரஸ்வதி சபதம், திருவிளையாடல் போன்ற படங்களில் நடிக்க அழைத்தார்கள். அதேபோலநாகேஷின் நடிப்பைப் பார்த்துத் தான் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் ஆகிய படங்கள் அமைந்தன.அதேபோல, வடிவேலுவுக்கு இம்சை அரசன் திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. காலத்திற்கு ஏற்றபடிதன்னுடைய நடிப்பை மெருகேற்றிக் கொண்டு படிப்படியாக முன்னேறியவர் வடிவேலு. தொழிலில்அர்ப்பணிப்பும், மற்றவர்களிடம் மரியாதையும் காட்டுபவர்.வள்ளி படத்தில் நடித்தபோதிருந்தே அவரை நான் கவனித்து வருகிறேன். அவர் முன்பு நடித்து நடிப்பு வேறு,இப்போது இருக்கிற வடிவேலுவே வேறு. நல்ல வேளை அவர் கருப்பாக இருக்கிறார். நல்ல நிறமாக, அழகாகஇருந்திருந்தால், இன்நேரம் ரஜினி, கமல், விஜய், அஜீத் எல்லாம் அவருக்குப் பின்னால்தான் இருந்திருப்போம்என்றார் ரஜினி.நிகழ்ச்சியில் நடிகர் பிரபு பேச்சு அனைவரையும் சலசலப்பில் ஆழ்த்தியது. காரணம் அவர் அரசியல்பேசியதுதான். பிரபு பேசுகையில், நான் அரசியலில் ஈடுபடப் போவதாக எனது அண்ணன் ராம்குமார்தெரிவித்தார். அவருக்கு சில மன வருத்தங்கள். அதனால்தான் அப்படிப் பேசி விட்டார்.இதை வைத்து நான் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளியாகி விட்டன. சூப்பர் ஸ்டார் ரஜினிஅண்ணனும் அரசியலில் இறங்கப் போவதாக முன்பு கூறினார்கள். அவர் குதித்திருந்தால் நானும் வந்திருப்பேன்.ஆனால் அவர் அரசியல் தேவை இல்லை என்றிருக்கிறார். எனவே எனக்கும் அரசியல் தேவையில்லை என்றார்பிரபு.நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய், வடிவேலு, சத்யராஜ், விவேக், நாசர், ராஜேஷ், நடிகைகள் மனோரமா, மோனிகா,தேஜாஸ்ரீ, இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், லிங்குச்சாமி, பாடலாசிரியர் புலமைப்பித்தன் உள்ளிட்டோரும்பங்கேற்றனர்.

வடிவேலுவின் மைல் கல் இம்சை: ரஜினி சிவாஜிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் போல, நாகேஷுக்கு திருவிளையாடல் போல, வடிவேலுவுக்கு இம்சைஅரசன் 23ம் புலிகேசி திருப்புமுனை படமாகும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு முதல் முறையாக வரலாற்று கதையின் நாயகனாகஇரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி சக்கை போடு போட்ட இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது.கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வடிவேலுஉள்ளிட்ட கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருது வழங்கினார். நிகழ்ச்சியில் ரஜினி பேசுகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதிசபதம் என்ற படம் வெளியானது. அதில் கல்வி, வீரம், செல்வம் ஆகியவற்றில் சிறந்தது என்று போட்டி வரும்.கடைசியில் ஒரு மனிதனுக்கு இது மூன்றுமே முக்கியம் என்ற கருத்துடன் படம் முடியும்.அதேபோல இம்சை அரசனைப் பொருத்தவரை கதை, எழுதி படத்தை இயக்கிய சிம்புதேவன் கல்வியையும்,பணம் போட்ட ஷங்கர் செல்வத்தையும், நடிப்பாற்றலை வெளிப்படுத்திய வடிவேலு வீரத்தையும்,நினைவுபடுத்தியுள்ளனர்.இந்த மூன்றுமே சரியாக அமைந்ததால் படம் பெறும் வெற்றியைப் பெற்றுள்ளது. என்னைப் பொருத்தவரை முதல்பாராட்டு செல்வத்தை வழங்கிய ஷங்கருக்குத்தான். ஏனெனின் சிம்பு தேவன் சொன்ன மூன்று கதைகளை கேட்டுவிட்டு இக்கதையை தேர்ந்தெடுத்து அதை நம்பி பணம் போட்டதற்காக அவருக்கு முதல் பாராட்டு.ஷங்கர் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, நல்ல தயாரிப்பாளரும் கூட. படம் தயாரான பின்னரும் வெளியாக பலசிரமங்கள் ஏற்பட்டது. அதற்காக அவருடைய வீட்டைக் கூட அடமானம் வைத்தார் என்றால் பார்த்துக்கொள்ளங்கள். ரூ. 6 கோடி செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்.நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சிரமம் என்றால் துண்டை அடகு வைக்கலாம். ஆனால்வேட்டியை மட்டும் அடமானம் வைத்து விடக் கூடாது. எனவே படம் தயாரிப்பவர்கள் சொத்துக்களை அடமானம்வைத்து படம் எடுக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.அந்தக் காலத்தில் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர் படங்கள் எல்லாம் உடனடியாக விற்று விடும். ஆனால் சின்னவயதிலேயே ஷங்கர் படங்கள் தமிழகத்தைத் தாண்டி நாடு முழுவதும் உடனடியாக வியாபாரம் ஆகிறது. சிவாஜிபடத்தைப் பாருங்கள் உங்களுக்கே தெரியும்.ஷங்கரை நல்ல சிந்தனையாளர், சிறந்த இயக்குநர் என்கிறார்கள். அது தப்பு. அவருக்குள் 16 வயது இளைஞன்இருக்கிறான். அவனது தாகத்தைத் தணிப்பதும், உணவு போடுவதும் தான் ஷங்கரின் வேலை. அதற்கு அவருக்குப் பின்னால் கடுமையான உழைப்பும், நேரத்தை அவர் பயன்படுத்தும் விதம் உள்ளது.அவரைப் பற்றி நிறையப் பேசலாம். சிவாஜி வெற்றி விழாவில் விரிவாகப் பேசுகிறேன்.அப்புறம் சிம்புதேவன். இந்தக் காலத்தில் சரித்திரப் பின்னணியோடு கூடிய ஒரு கதையைத் தேர்வு செய்து, அதற்குசரியான நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார். இந்த ஒரு படத்திலேயே 100 படங்களை இயக்கியஅனுபவம் தெரிகிறது.இது வெறும் காமெடிப் படம் மட்டுமல்ல. சமூகத்துக்குத் தேவையான பல நல்ல கருத்துக்களையும் வைத்துள்ளனர்.குறிப்பாக படத்தின் இறுதியில் 10 கட்டளைகளைச் சொல்லலாம்.என்னைக் கேட்டால், இப்படத்தின் 2ம் பாகத்தை இதே கூட்டணி மீண்டும் தயாரித்து மக்களை மகிழ்ச்சிக் கடலில்ஆழ்த்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.இப்படத்தின் ஆணிவேராக இருப்பவர் வடிவேலு. சிவாஜியின் நடிப்பைப் பார்த்துத்தான் வீரபாண்டியகட்டபொம்மன், சரஸ்வதி சபதம், திருவிளையாடல் போன்ற படங்களில் நடிக்க அழைத்தார்கள். அதேபோலநாகேஷின் நடிப்பைப் பார்த்துத் தான் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் ஆகிய படங்கள் அமைந்தன.அதேபோல, வடிவேலுவுக்கு இம்சை அரசன் திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. காலத்திற்கு ஏற்றபடிதன்னுடைய நடிப்பை மெருகேற்றிக் கொண்டு படிப்படியாக முன்னேறியவர் வடிவேலு. தொழிலில்அர்ப்பணிப்பும், மற்றவர்களிடம் மரியாதையும் காட்டுபவர்.வள்ளி படத்தில் நடித்தபோதிருந்தே அவரை நான் கவனித்து வருகிறேன். அவர் முன்பு நடித்து நடிப்பு வேறு,இப்போது இருக்கிற வடிவேலுவே வேறு. நல்ல வேளை அவர் கருப்பாக இருக்கிறார். நல்ல நிறமாக, அழகாகஇருந்திருந்தால், இன்நேரம் ரஜினி, கமல், விஜய், அஜீத் எல்லாம் அவருக்குப் பின்னால்தான் இருந்திருப்போம்என்றார் ரஜினி.நிகழ்ச்சியில் நடிகர் பிரபு பேச்சு அனைவரையும் சலசலப்பில் ஆழ்த்தியது. காரணம் அவர் அரசியல்பேசியதுதான். பிரபு பேசுகையில், நான் அரசியலில் ஈடுபடப் போவதாக எனது அண்ணன் ராம்குமார்தெரிவித்தார். அவருக்கு சில மன வருத்தங்கள். அதனால்தான் அப்படிப் பேசி விட்டார்.இதை வைத்து நான் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளியாகி விட்டன. சூப்பர் ஸ்டார் ரஜினிஅண்ணனும் அரசியலில் இறங்கப் போவதாக முன்பு கூறினார்கள். அவர் குதித்திருந்தால் நானும் வந்திருப்பேன்.ஆனால் அவர் அரசியல் தேவை இல்லை என்றிருக்கிறார். எனவே எனக்கும் அரசியல் தேவையில்லை என்றார்பிரபு.நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய், வடிவேலு, சத்யராஜ், விவேக், நாசர், ராஜேஷ், நடிகைகள் மனோரமா, மோனிகா,தேஜாஸ்ரீ, இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், லிங்குச்சாமி, பாடலாசிரியர் புலமைப்பித்தன் உள்ளிட்டோரும்பங்கேற்றனர்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிவாஜிக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் போல, நாகேஷுக்கு திருவிளையாடல் போல, வடிவேலுவுக்கு இம்சைஅரசன் 23ம் புலிகேசி திருப்புமுனை படமாகும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு முதல் முறையாக வரலாற்று கதையின் நாயகனாகஇரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி சக்கை போடு போட்ட இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது.

கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வடிவேலுஉள்ளிட்ட கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருது வழங்கினார்.

நிகழ்ச்சியில் ரஜினி பேசுகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க பல ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதிசபதம் என்ற படம் வெளியானது. அதில் கல்வி, வீரம், செல்வம் ஆகியவற்றில் சிறந்தது என்று போட்டி வரும்.கடைசியில் ஒரு மனிதனுக்கு இது மூன்றுமே முக்கியம் என்ற கருத்துடன் படம் முடியும்.

அதேபோல இம்சை அரசனைப் பொருத்தவரை கதை, எழுதி படத்தை இயக்கிய சிம்புதேவன் கல்வியையும்,பணம் போட்ட ஷங்கர் செல்வத்தையும், நடிப்பாற்றலை வெளிப்படுத்திய வடிவேலு வீரத்தையும்,நினைவுபடுத்தியுள்ளனர்.

இந்த மூன்றுமே சரியாக அமைந்ததால் படம் பெறும் வெற்றியைப் பெற்றுள்ளது. என்னைப் பொருத்தவரை முதல்பாராட்டு செல்வத்தை வழங்கிய ஷங்கருக்குத்தான். ஏனெனின் சிம்பு தேவன் சொன்ன மூன்று கதைகளை கேட்டுவிட்டு இக்கதையை தேர்ந்தெடுத்து அதை நம்பி பணம் போட்டதற்காக அவருக்கு முதல் பாராட்டு.

ஷங்கர் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, நல்ல தயாரிப்பாளரும் கூட. படம் தயாரான பின்னரும் வெளியாக பலசிரமங்கள் ஏற்பட்டது. அதற்காக அவருடைய வீட்டைக் கூட அடமானம் வைத்தார் என்றால் பார்த்துக்கொள்ளங்கள். ரூ. 6 கோடி செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சிரமம் என்றால் துண்டை அடகு வைக்கலாம். ஆனால்வேட்டியை மட்டும் அடமானம் வைத்து விடக் கூடாது. எனவே படம் தயாரிப்பவர்கள் சொத்துக்களை அடமானம்வைத்து படம் எடுக்க வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்.

அந்தக் காலத்தில் ஸ்ரீதர், கே.பாலச்சந்தர் படங்கள் எல்லாம் உடனடியாக விற்று விடும். ஆனால் சின்னவயதிலேயே ஷங்கர் படங்கள் தமிழகத்தைத் தாண்டி நாடு முழுவதும் உடனடியாக வியாபாரம் ஆகிறது. சிவாஜிபடத்தைப் பாருங்கள் உங்களுக்கே தெரியும்.

ஷங்கரை நல்ல சிந்தனையாளர், சிறந்த இயக்குநர் என்கிறார்கள். அது தப்பு. அவருக்குள் 16 வயது இளைஞன்இருக்கிறான். அவனது தாகத்தைத் தணிப்பதும், உணவு போடுவதும் தான் ஷங்கரின் வேலை.

அதற்கு அவருக்குப் பின்னால் கடுமையான உழைப்பும், நேரத்தை அவர் பயன்படுத்தும் விதம் உள்ளது.அவரைப் பற்றி நிறையப் பேசலாம். சிவாஜி வெற்றி விழாவில் விரிவாகப் பேசுகிறேன்.

அப்புறம் சிம்புதேவன். இந்தக் காலத்தில் சரித்திரப் பின்னணியோடு கூடிய ஒரு கதையைத் தேர்வு செய்து, அதற்குசரியான நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார். இந்த ஒரு படத்திலேயே 100 படங்களை இயக்கியஅனுபவம் தெரிகிறது.

இது வெறும் காமெடிப் படம் மட்டுமல்ல. சமூகத்துக்குத் தேவையான பல நல்ல கருத்துக்களையும் வைத்துள்ளனர்.குறிப்பாக படத்தின் இறுதியில் 10 கட்டளைகளைச் சொல்லலாம்.

என்னைக் கேட்டால், இப்படத்தின் 2ம் பாகத்தை இதே கூட்டணி மீண்டும் தயாரித்து மக்களை மகிழ்ச்சிக் கடலில்ஆழ்த்த வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.

இப்படத்தின் ஆணிவேராக இருப்பவர் வடிவேலு. சிவாஜியின் நடிப்பைப் பார்த்துத்தான் வீரபாண்டியகட்டபொம்மன், சரஸ்வதி சபதம், திருவிளையாடல் போன்ற படங்களில் நடிக்க அழைத்தார்கள். அதேபோலநாகேஷின் நடிப்பைப் பார்த்துத் தான் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் ஆகிய படங்கள் அமைந்தன.

அதேபோல, வடிவேலுவுக்கு இம்சை அரசன் திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. காலத்திற்கு ஏற்றபடிதன்னுடைய நடிப்பை மெருகேற்றிக் கொண்டு படிப்படியாக முன்னேறியவர் வடிவேலு. தொழிலில்அர்ப்பணிப்பும், மற்றவர்களிடம் மரியாதையும் காட்டுபவர்.

வள்ளி படத்தில் நடித்தபோதிருந்தே அவரை நான் கவனித்து வருகிறேன். அவர் முன்பு நடித்து நடிப்பு வேறு,இப்போது இருக்கிற வடிவேலுவே வேறு. நல்ல வேளை அவர் கருப்பாக இருக்கிறார். நல்ல நிறமாக, அழகாகஇருந்திருந்தால், இன்நேரம் ரஜினி, கமல், விஜய், அஜீத் எல்லாம் அவருக்குப் பின்னால்தான் இருந்திருப்போம்என்றார் ரஜினி.

நிகழ்ச்சியில் நடிகர் பிரபு பேச்சு அனைவரையும் சலசலப்பில் ஆழ்த்தியது. காரணம் அவர் அரசியல்பேசியதுதான். பிரபு பேசுகையில், நான் அரசியலில் ஈடுபடப் போவதாக எனது அண்ணன் ராம்குமார்தெரிவித்தார். அவருக்கு சில மன வருத்தங்கள். அதனால்தான் அப்படிப் பேசி விட்டார்.

இதை வைத்து நான் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளியாகி விட்டன. சூப்பர் ஸ்டார் ரஜினிஅண்ணனும் அரசியலில் இறங்கப் போவதாக முன்பு கூறினார்கள். அவர் குதித்திருந்தால் நானும் வந்திருப்பேன்.

ஆனால் அவர் அரசியல் தேவை இல்லை என்றிருக்கிறார். எனவே எனக்கும் அரசியல் தேவையில்லை என்றார்பிரபு.

நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய், வடிவேலு, சத்யராஜ், விவேக், நாசர், ராஜேஷ், நடிகைகள் மனோரமா, மோனிகா,தேஜாஸ்ரீ, இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், லிங்குச்சாமி, பாடலாசிரியர் புலமைப்பித்தன் உள்ளிட்டோரும்பங்கேற்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil