விளையாட்டாக வில்லத்தனம்! கால்பந்து விளையாட்டில் கொடி நாட்டிய ஒரு வீரர் இப்போது வில்லன் நடிகராக புதுஅவதாரம் எடுத்துள்ளார்.கேரளாவைச் சேர்ந்த ஐ.எம்.விஜயனைத் தெரியாத இந்திய கால்பந்து ரசிகர்கள் இருக்கமுடியாது. மின்னல் வேக வீரனாக அறியப்பட்டவர் விஜயன்.இந்தியாவின் முன்னணி கால்பந்து வீரராக ஒரு காலத்தில் திகழ்ந்த விஜயன், இந்தியகால்பந்து அணியின் கேப்டனாகவும் இருந்தவர். கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் விஜயன் ஒரு மலையாளப்படத்தில் நடித்தார்.சமீபத்தில் கூட மோகன்லாலுடன் மகாசத்திரம் படத்தில் நடித்தார். இப்படம் இன்னும்வரவில்லை. மேட்டர் என்னவென்றால் விஜயன் தமிழுக்கும் இப்போது வந்துள்ளார்.அதுவும் வில்லனாக. விஷால், ரீமா சென் ஜோடியில் உருவாகிக் கொணடிருக்கும்திமிர் படத்தில் விஜயன்தான் வில்லனாம். தமிழ் சினிமாவில் ஏற்கனவே ஏகப்பட்ட பிற மொழி வில்லன்கள் புகுந்து துவம்சம்செய்து வருகிறார்கள்.அந்த வரிசையில் இபபோது விஜயனும் சேருகிறார். விஜயனை வில்லனாக போடவேண்டும் என்று சிபாரிசு செய்தவர் நாயகன் விஷால்தானாம். இந்த ரோலுக்குவிஜயன் பொருத்தமாக இருப்பார், கேட்டுப் பாருங்கள் என்று சொன்னதையடுத்துவிஜயனை அணுகியுள்ளனர்.அவரும் கதையைக் கேட்டு ஆர்வமாகி உடனேயே ஓ.கே சொல்லி விட்டாராம். ரீமாசென்னையும் விஷால்தான் ரெகமண்ட் செய்தார், அதேபோல ஒத்தப் பாட்டுக்குதக்குத்தாட்டம் போட்ட கிரணையும் கூட அவர்தான் திமிர் படத்திற்கு பரிந்துரைத்தார்.காரணம், திமிர் படம் விஷாலின் குடும்பப் படம். அப்பா தயாரிக்கிறார், அண்ணன்இயக்குகிறார். அப்புறம் என்ன, திமிர வேண்டியதுதானே!

By Staff
கால்பந்து விளையாட்டில் கொடி நாட்டிய ஒரு வீரர் இப்போது வில்லன் நடிகராக புதுஅவதாரம் எடுத்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ஐ.எம்.விஜயனைத் தெரியாத இந்திய கால்பந்து ரசிகர்கள் இருக்கமுடியாது. மின்னல் வேக வீரனாக அறியப்பட்டவர் விஜயன்.

இந்தியாவின் முன்னணி கால்பந்து வீரராக ஒரு காலத்தில் திகழ்ந்த விஜயன், இந்தியகால்பந்து அணியின் கேப்டனாகவும் இருந்தவர்.

கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் விஜயன் ஒரு மலையாளப்படத்தில் நடித்தார்.

சமீபத்தில் கூட மோகன்லாலுடன் மகாசத்திரம் படத்தில் நடித்தார். இப்படம் இன்னும்வரவில்லை. மேட்டர் என்னவென்றால் விஜயன் தமிழுக்கும் இப்போது வந்துள்ளார்.

அதுவும் வில்லனாக. விஷால், ரீமா சென் ஜோடியில் உருவாகிக் கொணடிருக்கும்திமிர் படத்தில் விஜயன்தான் வில்லனாம்.

தமிழ் சினிமாவில் ஏற்கனவே ஏகப்பட்ட பிற மொழி வில்லன்கள் புகுந்து துவம்சம்செய்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் இபபோது விஜயனும் சேருகிறார். விஜயனை வில்லனாக போடவேண்டும் என்று சிபாரிசு செய்தவர் நாயகன் விஷால்தானாம். இந்த ரோலுக்குவிஜயன் பொருத்தமாக இருப்பார், கேட்டுப் பாருங்கள் என்று சொன்னதையடுத்துவிஜயனை அணுகியுள்ளனர்.

அவரும் கதையைக் கேட்டு ஆர்வமாகி உடனேயே ஓ.கே சொல்லி விட்டாராம். ரீமாசென்னையும் விஷால்தான் ரெகமண்ட் செய்தார், அதேபோல ஒத்தப் பாட்டுக்குதக்குத்தாட்டம் போட்ட கிரணையும் கூட அவர்தான் திமிர் படத்திற்கு பரிந்துரைத்தார்.

காரணம், திமிர் படம் விஷாலின் குடும்பப் படம். அப்பா தயாரிக்கிறார், அண்ணன்இயக்குகிறார். அப்புறம் என்ன, திமிர வேண்டியதுதானே!

Read more about: imvijayan to act in thimir
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X