தள்ளிப் போன இந்திரலோகம்

பொங்கலுக்கு வெளி வந்திருக்க வேண்டிய படம் குடியரசு தினத்தையொட்டி வரும் ஜனவரி 25ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீத்தா சர்மா என்ற பெங்களூரில் பிறந்து லண்டனில் வளர்ந்த மெகா சைஸ் மாடலுடன் வடிவேலு இதில் ஜோடி போட்டுள்ளார். கூடவே ஷ்ரேயாவும் ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டுள்ள இந்தப் படத்தை பொங்கலன்று வெளியிட பல தியேட்டர்கள் புக் செய்யப்பட்டன.
படம் வெளியாகும் திரையரங்குகள் என விளம்பரம் எல்லாம் கூட வெளியானது. ஆனால், திடீரென தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் படத்தை தள்ளிப் போட முடிவு செய்துவிட்டாராம்.
பொங்கலுக்கு பிரிவோம் சந்திப்போம் உள்பட 6 படங்கள் களத்தில் குதித்ததால் அத்துடன் மோத வேண்டாம் என முடிவு செய்தாராம் நாராயணன். இதனால் வரும் 25ம் தேதி சோலோவாக படம் வெளியாகவுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications