twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்ன குழந்தைகளுக்கு அப்பான்னு நெனச்சேன்.. அப்பறம் தான்.. ஷாக்கிங் நியூஸ் சொன்ன வினோத் சாகர்!

    |

    சென்னை: நான் ரசித்து பெற்றுக் கொண்ட கதாபாத்திரம் தான், எனக்கு பெரிய அங்கீகாரத்தை அளித்துள்ளது என்று ராட்சசன் திரைப்பட வாத்தியாரும், கடாவர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வினோத் சாகர் கூறியுள்ளார்.

    மைனா படம் அறிமுகமான நடிகை அமலா பால் முன்னை நடிகையாக இருந்தாலும் சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். தற்போது தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் புது பரிமானத்துடன் கடாவர் படத்தில் உருவெடுத்தார். இப்படமானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தில் மிரட்டலான பள்ளிக்கூட ஆசிரியராக நடித்தவர் வினோத் சாகர். இவர் கடாவர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் ஏகோபித்த கைதட்டலை பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

    காதில் ஒரு பூ அல்ல ஒரு கூடை பூ..லாஜிக் மொத்தமும் மிஸ்ஸிங்..அமலாபாலின் 'கடாவர்’..சினிமான்னா இப்படியா?காதில் ஒரு பூ அல்ல ஒரு கூடை பூ..லாஜிக் மொத்தமும் மிஸ்ஸிங்..அமலாபாலின் 'கடாவர்’..சினிமான்னா இப்படியா?

    மனதை கவரும் கதாபாத்திரம்

    மனதை கவரும் கதாபாத்திரம்

    கேள்வி: கடாவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

    பதில்: நான் நடித்த ராட்சசன் படத்தை பார்த்து விட்டு தான், இந்த வாய்ப்பு எனக்கு அமைந்தது. நடிகை அமலாபாலின் முன்னாள் மேனேஜர் பிரதீப் தான் என்னை கடாவர் குழுவிடம் அறிமுகப்படுத்தினார். படத்தின் எழுத்தாளர் அபிலேஷ் பிள்ளை இப்படத்தை இயக்கியவர் இயக்குநர் அனுப் பணிக்கர். என்னிடம் அபிலேஷ் பிள்ளை முதலில் கதை கூறும்போது, வேலுபிரபாகரனின் மகன் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரம் எப்படியென்றால் பென்ஸ் காரில் கோர்ட் ஷூட் போட்டு வருவது போன்றது. மேலும் படத்தின் ஓப்பனிங் சீனில் நீங்கள் வருவீர்கள். அதிலிருந்து படம் செல்கிறது என்றனர்.

    பிடித்த கதை

    பிடித்த கதை

    கதை கூறும் போது நடிகனாக யாராக இருந்தாலும், இது போன்ற கதாபாத்திரம் மனதை கவரக்கூடியதாகவே அமையும். நான் தற்போதுள்ள நடித்துள்ள கதாபாத்திரத்திற்கு ஆட்கள் தேடிக் கொண்டிருப்பதாக அவ்வப்போது தெரிவித்தார். அப்போது நான் அவர்களிடம் கூறுகையில், நீங்கள் தேடும் கதாபாத்திரத்தை ஏற்று நான் நடிக்கிறேன். இந்த பென்ஸ் காரில் வரும் கதாபாத்திரம் எனக்கு செட் ஆகாது என்று கூறினேன்.

    ரித்விகாவுக்கு அப்பா

    ரித்விகாவுக்கு அப்பா

    கேள்வி: இயக்குநர் அனுப் பணிக்கர் நீங்கள் கூறியது ஏற்றுக் கொண்டாரா?

    பதில்: அனுப் பணிக்கர் என்னிடம் கூறுகையில், ராட்சசன் படத்தை பார்த்து விட்டு தான் இந்த கதாபாத்திரம் உங்களுக்கு பொருந்தும் என்று கருதினேன். மேலும் நாங்கள் தேடும் கதாபாத்திரம் வயதான கதாபாத்திரம். இரண்டு பெண்களுக்கு தகப்பன் என்றும் கூறினார். பரவாயில்லை. நானே செய்கிறேன் என்று கூறி சம்மதம் வாங்கி விட்டேன். நான் முதலில் சிறிய குழந்தைகளுக்கு அப்பாவாக இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த ரித்விகா, ஜிக்கி போன்ற இரண்டு நடிகைகளுக்கு அப்பா என்பது அப்புறம் தான் எனக்கு தெரிந்தது. சவாலான கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் தீராத நடிப்பு மீது எனக்கு எப்போதும் காதல். எந்த கதாபாத்திரத்தை நான் ரசித்து வாங்கினனோ, அந்த கதாபாத்திரம் எனக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது என்றார்.

    இவரை தான் ரொம்ப பிடிக்கும்

    கேள்வி: உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?

    பதில்: எனக்கு பிடித்த நடிகர் இராதாரவி. அவரை ரொம்ப பிடிக்கும். சிறிய வசனமாக இருந்தாலும், அதை டெலிவரி செய்யக்கூடிய விதம் ரொம்ப அருமையாக இருக்கும். அவர் ஏற்கக்கூடிய கதாபாத்திரத்தை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமா அவ்வளவு சிறப்பாக செய்வார் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/PYbVV4r6XVs இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

    English summary
    Actor Vinoth Sagar Exclusive Interivew: நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படத்தில் மிரட்டலான பள்ளிக்கூட ஆசிரியராக நடித்தவர் வினோத் சாகர். இவர் கடாவர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் ஏகோபித்த கைதட்டலை பெற்றுள்ளார். இந்நிலையில் அவர் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X