திருக்குறளை மையப்படுத்திய தமிழ் படங்கள்.. வசூலை அள்ளிய அந்த படமும் இருக்கு!
சென்னை: உலக பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறள் மனித வாழ்க்கையில் அத்தனை மாண்புகளையும் பேசுகிறது. நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இலக்கியமாக திருக்குறள் இருக்கிறது. ஒருவன் வாழ்க்கையை எப்படி வாழவேண்டும், அவன் வாழ்க்கைக்கு தேவையான, அன்பு, அறம், மனிதம், காதல், காமம், உடல்நலம், மனநலம் என அனைத்தையும் ஒன்னே முக்கால் வரியில் சொல்லிவிட்டு சென்று இருக்கிறார் திருவள்ளுவர். ஆனால், இந்த காலத்து குழந்தைகளுக்கு திருக்குறள் என்பது செய்யுள் பகுதியாக நினைத்து அர்த்தமே தெரியாமல் மதிப்பெண்ணுக்காக படித்து வருகின்றனர். ஆனால், திருக்குறள் மீதும், தமிழ் மீதும் பற்றுக்கொண்ட சில இயக்குநர்கள், தங்களின் படத்தில் முக்கியமான இடத்தில் திருக்குறளின் வலிமையை சொல்லி இருக்கிறார்கள். அது எந்த படம் என்பதைத்தான் நாம் இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன் திரைப்படத்தை யாராலும் மறக்கவே முடியாது. அந்த படத்தில் ரகுவரன் முதல்வராக இருப்பார். அவரை பேட்டி எடுக்கும் செய்தியாளராக அர்ஜூன் இருப்பார். அப்போது அர்ஜூன், ரகுவரனை மடக்கி மடக்கி கேள்வி கேட்க, கடுப்பான ரகுவரன், நீ ஒரு நாள் முதல்வராக இருந்து பார், எத்தனை சண்டை, எவ்வளவு பிரச்சனை என்று புரியம் என்று சொல்லிவிட்டு, ஒரு திருக்குறளை சொல்லி இருப்பாரு.... "அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்". இதற்கு என்ன அர்த்தம் என்றால், நாட்டினுடைய மன்னனை சாந்து இருக்கும் ஒருவன். அவரை அதிகமாக அணுகாமலும், அதிகமாக விலகாமலும் இருக்க வேண்டும். தீயில் குளிர் காய்வது போல, மன்னரைச் சார்ந்து வாழ்பவர், மன்னருக்கு நெருங்கவும் கூடாது, அதிக தூரம் விலகவும் கூடாது என்று அர்த்தம். இப்படி நல்ல பொருள் கொண்ட ஒரு திருக்குறளை முதல்வன் படத்தின் வசனகர்த்த சுஜாதா இந்த படத்தில் பயன்படுத்தி இருந்தார்.

கிளைமாக்ஸில் வந்த திருக்குறள்: அதே போல ஜீவா நடித்த கோ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வசந்த் என்பவர் இறந்துவிடுவார். அது பற்றி செய்தி போடுவதற்காக ரேணு தயாராக இருப்பாங்க. அப்போது, ஜீவா ஃபோன் செய்து அந்த செய்தியை போட வேண்டாம். மக்கள் எல்லாம் வசந்த் மேல ரொம்ப நம்பிக்கை வைத்து ஓட்டு போட்டு அவனை ஜெயிக்க வைத்து இருக்கிறார்கள். இந்த நேரத்தில் வசந்த் நல்லவன் இல்ல, மோசடி செய்து தான் ஆட்சியை பிடித்தான் என்கிற விஷயம் மக்களுக்கு தெரிந்தால், மக்கள் அனைவரும் உடைந்துவிடுவார்கள். பின், இளைஞர்களை மக்கள் நம்பவே மாட்டார்கள். அது மட்டுமில்லாமல், வசந்த் மட்டும் தான் தப்பானவன், மற்றவர்கள் எல்லாம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்து இருக்கிறார்கள். இந்த நேரத்தில், வசந்த் தப்பானவன் சொல்வதால் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை. என்று சொல்லுவார். இதை கேட்டு ரேணுவும் செய்தியை மாற்றி விடுவார்கள். கடைசியில் படம் முடியும் போது, படத்தின் என்ட் கார்டில், "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" என்ற திருக்குறளை போட்டு இருப்பார். இதற்கு என்ன அர்த்தம் என்றால், ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால், அதற்காக பொய் சொல்வது தவறு இல்லை என்று அர்த்தம். இப்படி நம் வாழ்க்கையோடு ஒன்றிப்போன திருக்குறள் பல படத்தில் முக்கியமான இடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











