நல்ல காரணத்திற்காக யுவனையும் கெட்ட காரணத்திற்காக ஶ்ரீகாந்தையும் சுந்தர்.சி சொன்ன தகவல் தெரியுமா?

சென்னை: நடிகை குஷ்பூ தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கியுள்ள காஃபி வித் காதல் திரைப்படம் வரும் நவம்பர் நான்காம் தேதி வெளியாகிறது.

உதயநிதி அவர்களின் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் இந்தத் திரைப்படத்தை விநியோகம் செய்கிறது.

இந்நிலையில் இந்தப் படக் குழுவினர் பல சுவாரசிய தகவல்களுடன் கலகலப்பான பேட்டி ஒன்றைக் கொடுத்துள்ளனர்

 காஃபி வித் காதல்

காஃபி வித் காதல்

அரண்மனை 3 திரைப்படத்தை தொடர்ந்து ஒரு ஃபீல் குட் மூவி எடுக்க வேண்டும் என்பதற்காகவே காஃபி வித் காதல் திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார் சுந்தர்.சி. நடிகர்கள் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு மற்றும் நடிகைகள் ரைசா, அமிர்தா, ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர்.சி இயக்கியுள்ள படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

 தொடரும் கூட்டணிகள்

தொடரும் கூட்டணிகள்

ஏற்கனவே நடிகர்கள் ஜெய் மற்றும் ஜீவா சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். அதேபோல நண்பன் திரைப்படத்திற்கு பிறகு ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் இந்தப் படத்தில் சேர்ந்து நடித்துள்ளார்கள். இயக்குநர் சுதா கொங்காரவின் முதல் தமிழ்த் திரைப்படமான துரோகி படத்திலேயே ஜீவாவும் ஸ்ரீகாந்தும் சேர்ந்து நடிப்பதாக இருந்து பின்னர் விஷ்னு மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் அந்தப் படம் வெளியானது.

 ஃபீல் குட் மூவி

ஃபீல் குட் மூவி

அன்பே வா போன்று ஃபீல் குட் ஜானரில் படம் எடுக்க வேண்டும் என்பது உள்ளத்தை அள்ளித்தா காலத்தில் இருந்தே அவருடைய ஆசையாக இருந்துள்ளது. அது காஃபி வித் காதல் திரைப்படம் மூலமாகத்தான் நிறைவேறியுள்ளதாகவும் மூன்று அண்ணன் தம்பிகள் ஸ்ரீகாந்த்தின் காதலியை ஜீவா திருமணம் செய்யப்போவது, ஜீவாவின் காதலி ஜெயிக்கு நிச்சயதார்த்தம் ஆகியிருப்பது, அந்த திருமணங்களை நிறுத்த ஒவ்வொருவரும் போராடுவது, அந்தத் திருமணங்கள் நடந்தே ஆக வேண்டும் என்று போராடும் மேரேஜ் புரோக்கராக யோகி பாபு என்று இவர்களைச் சுற்றி நடக்கும் கதைதான் காஃபி வித்ட் காதல்.

 யுவன் சங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா

அந்தப் பேட்டியில் படம் சம்மந்தப்பட்ட பொருட்களை வைத்து கேள்விகள் கேட்கப்பட்டது. பியானோவை வைத்து கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குநர் சுந்தர்.சி, படத்தில் பியானோ மீது ஸ்ரீகாந்த் ஒரு சம்பவம் செய்திருப்பார் அது டிரைலரில் கூட இடம்பெற்றிருக்கும் என்றும் ஆனால் அது கெட்ட காரணத்திற்காக பியானோவை ஶ்ரீகாந்துடன் தொடர்பு படுத்துவது போல் இருக்கும். நல்லவிதமாக பார்த்தால் யுவன் சங்கர் ராஜாவைத்தான் நான் சொல்ல வேண்டும். காரணம், நான் கேட்டது போல 8 சிறப்பான பாடல்களை கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பணிபுரிந்தாலும் உருவத்திலும் சரி, பழகும் விதத்திலும் சரி, இசையிலும் சரி அப்படியேதான் யுவன் இருக்கிறார் என்று பாராட்டியிருக்கிறார் சுந்தர்.சி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X