நடு ரோட்டில் தனியாக போவதா சுதந்திரம்.. இல்லவே இல்லை.. பெண்களை கொண்டாடிய படங்கள்!

சென்னை : சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் மகளிரை கொண்டாடும் இந்த தினத்தில் பல்வேறு தலைவர்கள் மகளிருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பெண்கள் தினத்தில் பெண்களை முன்நிறுத்தி கொண்டாடிய திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.

மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்

கதாநாயகனைச் சுற்றியமைக்கப்பட்ட கதையே, தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த காலத்தில், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் வலியை கதையில் சொன்னவர் இயக்குனர் பாலசந்தர். ஆணாதிக்கத்திற்கு எதிராகவும், காதல், குடும்பம், சமூதாயம் என அனைத்திற்குள்ளும் சிக்க பெண்கள் சுமக்கும் சமையை நெற்றி பொட்டில் அடித்தாற்போல சொன்ன திரைப்படம் மனதில் உறுதி வேண்டும். பாரதியாரின் கவிதையின் வரியே இந்த படத்திற்கு தலைப்பாக வைக்கப்பட்டது. காலங்கள் பல கடந்தாலும், பெண்கள் திரைப்படம் என்றால் நிச்சயம் இத்திரைப்படத்திற்கு முதல் இடம் உண்டு.

புதுமை பெண்

புதுமை பெண்

பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியானது, கதையின் மையக்கருவாக இருக்கும். அப்படியொரு அநீதியை, சீதையை ராமனே சந்தேகப்பட்டால்...? என்கிற ஒன்லைனை வைத்துக்கொண்டு, பாரதிராஜா புதுமை பெண் என்ற அற்புதமான படைப்பை கொடுத்திருந்தார். இந்த படத்தில் ரேவதியின் நடிப்பு அபரிமிதமானதாக இருக்கும்... குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் படி தாண்டினாலும் பத்தினி... பத்தினி தான் என்ற வசனம் அல்டிமேட்.

36வயதிலேயே

36வயதிலேயே

பெண்களை, தெய்வங்களாகக் கொண்டாட வேண்டாம், மனுஷிகளாக மதியுங்கள் என்றும், அவர்களுக்கும் கனவுகளும், திறமைகளும் இருக்கு, திருமணம் என்ற பந்தத்தில் இணைந்து விட்டாலும் தனது கனவுகளை புதைத்துவிடக்கூடாது மனதிற்குள் விதைக்க வேண்டும் என்ற கருத்தை கூறிய திரைப்படம் 36 வயதிலேயே.

அறம்

அறம்

ஹீரோக்கள் அரசியல் பேசும் காலத்தில், ஹீரோயினையும் அரசியல் பேசவைத்த திரைப்படம் அறம். நிதானம், கோபம், நட்பு, முறைப்பு, பாசம், பணிவு என ஒரே கதாபாத்திரத்தில் பல அவதாரங்களை எடுத்து உயிர் பாய்ச்சியிருக்கிறார் நயன்தாரா. அறம் உண்மையில் போற்றப்பட வேண்டிய படங்களில் ஒன்று

பெண்கள் தின வாழ்த்துக்கள்

பெண்கள் தின வாழ்த்துக்கள்

நடுராத்திரியில் ரோட்ல தனியா பாதுகாப்பா போறதில்லை சுதந்திரம். மனசுக்குப் பிடிச்சதைச் செய்து, பிடித்த வாழ்க்கையை வாழ்வது தான் சுதந்திரம். ஆணாதிக்கத்தின் வேர்கள் ஆழமாகவும் அகலமாகவும் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நேரத்தில் முட்டிமோதி முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு சர்வதேச பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X