twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழக அரசியலின் ஆளுமைகளை பேசிய ‘இருவர்’ திரைப்படம்....25 ஆண்டுகள்... நெகிழ்ந்த மோஹன்லால்

    |

    சென்னை; தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளான கருணாநிதி, எம்ஜிஆர் இருவர் அரசியலை விளக்கும் வகையில் மணிரத்னம் எடுத்த இருவர் படத்தில் எம்ஜிஆரை பிரதிபலிக்கும் வேடத்தில் மோகன்லால் நடித்திருப்பார். தமிழ் திரையுலகில் பேசப்பட்ட முக்கிய படமான இருவர் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது அதை நெகிழ்ச்சியுடன் மோஹன்லால் பதிவிட்டுள்ளார்.

    எம்ஜிஆரும் பொங்கல் திருநாளும்....வெற்றிபடங்கள் வெளியான பொங்கல் ஆண்டுகள் எம்ஜிஆரும் பொங்கல் திருநாளும்....வெற்றிபடங்கள் வெளியான பொங்கல் ஆண்டுகள்

     அனைத்திலும் வெற்றியை மட்டுமே சுவைத்த எம்ஜிஆர்

    அனைத்திலும் வெற்றியை மட்டுமே சுவைத்த எம்ஜிஆர்

    தமிழக அரசியலில் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தியவர் கருணாநிதி, அவருக்கு இணையான ஆளுமை எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியபின் 1977 ஆம் ஆண்டு ஆட்சியைப்பிடித்த எம்ஜிஆர் அதன் பின் அவர் மறையும்வரை அவரது அரசியல் எதிரி கருணாநிதியை பதவிக்கு வரவிடவில்லை. அதைவிட அவரது மறைவுக்கு பின்னரும் அதிமுக தலைமைக்கு சரியான தலைமை வேண்டும் என ஜெயலலிதாவை அரசியலுக்கு அறிமுகப்படுத்திவிட்டுச் சென்றார்.

     வாரிசாக நிலைத்து நின்ற ஜெயலலிதா

    வாரிசாக நிலைத்து நின்ற ஜெயலலிதா

    அதன்பின் அதிமுக தலைமைக்கு வந்த ஜெயலலிதா அதிலிருந்து 38 ஆண்டுகால அரசியலில் 6 முறை முதலமைச்சராகவும், எம்ஜிஆர் காலத்தில் அதிமுக பெறாத பெருவெற்றியையும் பெற்றுத்தந்தார். திமுகவில் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இல்லாவிட்டாலும் தனது தனித்துவ திறமையால் பலரை உருவாக்கியவர், திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜியின் வெற்றிக்கு பெரும் துணையாக இருந்தவர் கருணாநிதி.

     கருணாநிதி எனும் ஆளுமை

    கருணாநிதி எனும் ஆளுமை

    1969 ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்குப்பின் திமுக தலைவராக பொறுப்பேற்று தான் மறையும் வரை 50 ஆண்டுகாலம் ஒரு கட்சியின் தலைவராகவும், 13 ஆண்டுகாலம் கட்சி இக்கட்டான நிலையிலிருந்தபோதும், மிசாக்கொடுமை நேரத்தில் கட்சியை காப்பாற்றி 5 முறை முதல்வராக பதவி வகித்து தமிழகத்தின் முக்கிய ஆளுமையாக சமூக நீதிக்காக நின்ற தலைவர் கருணாநிதி.

     எம்ஜிஆர், கருணாநிதியின் ஆழமான நட்பு

    எம்ஜிஆர், கருணாநிதியின் ஆழமான நட்பு


    எம்ஜிஆர், கருணாநிதியின் இருவரது நட்பும் தமிழக மக்கள் அறிந்ததே. இருவரும் அரசியலில் எதிரெதிராக இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் மாறாத அன்பும், மரியாதையும் வைத்திருந்ததை நாடே அறியும். கருணாநிதியும், எம்ஜிஆரும் மீண்டும் இணையும் முயற்சி எடுக்கப்பட்டு அது கூடிவரும் நேரத்தில் மீண்டும் அது தடைப்பட்டது. ஆனாலும் இரு ஆளுமைகளின் அரசியல் காரணமாக தமிழகத்தில் தேசியக்கட்சிகள் ஆதிக்கம் செலுத்த முடியாமல் திமுக, அதிமுகவே மாறி மாறி ஆட்சிக்கு வரும் நிலை உள்ளது.

     இருவர் படம் அல்ல பாடமாக அமைந்தது

    இருவர் படம் அல்ல பாடமாக அமைந்தது

    இப்படிப்பட்ட கருணாநிதி எம்ஜிஆரின் திரை வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை அதில் மெல்லியதாக இழையோடும் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அழகாக படமாக்கியிருப்பார் மணிரத்னம். எம்ஜிஆர் வேடத்தில் மோஹன்லாலும், கருணாநிதி வேடத்தில் பிரகாஷ்ராஜும், ஜெயலலிதா வேடத்தில் ஐஸ்வர்யா ராயும் நடித்திருப்பார்கள். படம் வெளியான காலக்கட்டத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் உயிருடன் இருந்தனர். ஆனால் படம் வெகுவாக ரசிக்கப்பட்டது. அனைவரும் வரவேற்றனர்.

     மனம் நெகிழ்ந்து பதிவிட்ட மோஹன்லால்

    மனம் நெகிழ்ந்து பதிவிட்ட மோஹன்லால்

    எம்ஜிஆராக நடித்த மோகன்லால் எம்ஜிஆராகவே வாழ்ந்திருப்பார், பிரகாஷ் ராஜுவும் அதே போன்று நடித்திருப்பார். படத்தின் வசனங்கள், காட்சி அமைப்பு, பாடல் அனைத்தும் வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. 25 ஆண்டுகள் கடந்த நிலையில் மோஹன்லால் அதுகுறித்த படங்களை வெளியிட்டு தனது திரை வாழ்க்கையில் அது ஒரு மைல்கல் என குறிப்பிட்டுள்ளார். அதற்கு கீழே அவரது ரசிகர்கள் அதேபோன்ற படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    ‘IRUVAR' Movie... who spoke the personalities of Tamil Nadu politics .... Mohanlal re-collect his memories
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X