நடிகை ராதா எனக்கு ஜோடியா... ஒரு படத்தில் கமல் தயக்கம் காட்ட காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்சமயம் தன்னுடைய ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திற்காக படங்களை தயாரிப்பதில் பிசியாக இருக்கிறார்.

சிவ கார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வைத்து இரு படங்களை ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இப்போது பிக் பாஸ் சீசன் 6-க்கு தயாராகிவிட்ட கமல்ஹாசனை பற்றி தயாரிப்பாளரும் இயக்குநருமான சித்ரா லக்ஷ்மணன் கூறிய சுவாரசிய தகவல்களை பார்ப்போம்.

சித்ரா லக்ஷ்மணன்

சித்ரா லக்ஷ்மணன்

பாஸ் என்கிற பாஸ்கரன் மூலம் நயன்தாராவின் அப்பாவாக நடித்த நடிகராக சித்ரா லக்ஷ்மணன் அவர்களை பலருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு பத்திரிக்கையாளர், பட தயாரிப்பாளர், இயக்குநர் என்ற பன்முகங்களை கொண்டவர். பாரதிராஜாவின் படங்களுக்கு பி.ஆர்.ஓ-வாகவும், விளம்பரங்கள் செய்யும் நபராகவும் பணியாற்றியுள்ளார். தற்சமயம் யூடியூபில் பல சினிமா நட்சத்திரங்களை பேட்டி எடுத்து மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகியுள்ளார்.

சூர சம்ஹாரம்

சூர சம்ஹாரம்

மண்வாசனை திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான சித்ரா லக்ஷ்மணன் நடிகர் கமல் நடித்த சூரசம்ஹாரம் திரைப்படம் மூலம் இயக்குநர் ஆனார். கமல்ஹாசனை வைத்து படம் தயாரிக்கலாம் என்று முடிவு செய்த சித்ரா லக்ஷ்மணன் அவரிடம் கால்ஷீட் கேட்டபோது நீங்கள் அந்தப் படத்தை இயக்கினால்தான் உங்களுக்கு நான் கால்ஷீட் தருவேன் என்று கூறினாராம். கரும்பு தின்ன கூலியா தயாரிப்பதற்கு தேதிகள் கொடுத்தாலே பெரிய விஷயம் என்று இருக்கையில் இயக்கவும் சொல்கிறார் என்று என்ற இரட்டிப்பு மகிழ்ச்சியில் அந்தப் படம் துவங்கப்பட்டது.

நிரோஷா

நிரோஷா

அக்னி நட்சத்திரம் திரைப்படத்தில் அப்போது கதாநாயகியாக ஒப்பந்தமாக இருந்தார் நிரோஷா. இந்தப் படத்திற்காக புதிய முகத்தை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்த சித்ரா லக்ஷ்மணன் மற்றும் கமலஹாசன் அந்த விஷயத்தை கேள்விப்பட்டு மணிரத்தினமே ஒப்பந்தம் செய்துள்ளார் என்றால் நாமும் யோசிக்காமல் நடிக்க வைக்கலாம் என்று நிரோஷாவை ஒப்பந்தம் செய்தனர். பெரும்பாலான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு அனைத்திலும் ஒத்துழைப்பு கொடுத்த நிரோஷா ஒரு முத்தக் காட்சியில் நடிப்பதாக கூறிவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்து சரியாக அந்த ஷாட் எடுக்கும்போது தன்னால் நடிக்க முடியாது என்று பிரச்சனை செய்துவிட்டு சென்றுவிட்டாராம். அதனால் ஒரு மாத காலம் படம் தாமதமாகிகியுள்ளது. பின்னர் இன்னொரு கதாநாயகி கதாபாத்திரத்தை உருவாக்கி கதையை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது நிரோஷாவின் தாயார் மேற்கொண்ட பேச்சுவார்த்தையால் மீண்டும் நிரோஷா அதில் நடிக்க சம்மதித்தனர் சித்ரா லக்ஷ்மணன் மற்றும் கமல் ஹாசன். ஆனால் அந்த முத்தக் காட்சி வேண்டாம் என்று கமல் கூறிவிட்டாராம்.

ராதாவிற்கு நோ

ராதாவிற்கு நோ

சித்ரா லக்ஷ்மணனுக்கு அம்பிகா மற்றும் ராதா சகோதரிகள் நல்ல அறிமுகம். எனவே தனது முதல் படத்தில் கமல்ஹாசனுடன் ராதாவை நடிக்க வைக்கலாம் என்றுதான் சித்ரா லட்சுமணன் முடிவு செய்திருந்தார். ஆனால் ராதாவுடன் பல படங்கள் நடித்திருந்ததால் புதுமையாக இருக்காது என்று அப்படித்தான் நிரோஷாவை ஒப்பந்தம் செய்தார்களாம் சூர சம்ஹாரம் படக் குழுவினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X