twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித்தின் அமர்களம் படத்தில் கமலா... 22 ஆண்டுகளுக்கு பின் வெளியான தகவல்

    |

    சென்னை : காதல் மன்னன் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக டைரக்டர் சரண் இயக்கத்தில் அஜித் நடித்த படம் அமர்களம். 1999 ம் ஆண்டு ஆகஸ்ட் 13 ம் தேதி ரிலீசானது. நேற்றோடு இந்த படம் ரிலீசாகி 22 ஆண்டுகள் ஆகி விட்டது.

    ஆக்ஷன் ரொமான்டிக் படமாக உருவான அமர்களம் படத்தை சரண் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி இருந்தார். பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளிக் குவித்த இந்த படம் பின்னர் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் டப் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது. படம் ரிலீசாகி 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    என்னை குத்திட்டு எடுத்துட்டுப்போ.. போலீஸிடம் வாக்குவாதம்.. கதறி அழும் மீரா மிதுன்.. பகீர் வீடியோ! என்னை குத்திட்டு எடுத்துட்டுப்போ.. போலீஸிடம் வாக்குவாதம்.. கதறி அழும் மீரா மிதுன்.. பகீர் வீடியோ!

    காதல் மன்னன் படத்தை இயக்கிய வெங்கடேஷ்வராயலா நிறுவனம் தான் அமர்களம் படத்தையும் தயாரித்தது. காதல் மன்னன் படத்தில் இந்த நிறுவனம் பெரிய அளவில் இழப்பை சந்தித்ததாம். அதனை சரி செய்யும் விதமாக தான் அஜித், இந்த படத்தை நடித்துக் கொண்டுள்ளார். இது அஜித்தின் 25 வது படமாகவும் அமைந்தது. இந்த படத்தில் ஷாலினி, நாசர், ராதிகா, சார்லி, தாமு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    கதை இல்லாமல் துவங்கிய படம்

    கதை இல்லாமல் துவங்கிய படம்

    இந்த படத்தை துவங்கும் போது கதையே தயார் செய்யவில்லையாம். அமர்களம் என டைட்டிலை மட்டும் ரிலீஸ் செய்து விட்டு, பிறகு தான் கதையை யோசித்தாராம் சரண். முதலில் கேங்ஸ்டர் கதையாக தான் இதை தயார் செய்துள்ளார் சரண். ஆனால் அந்த சமயத்தில் நிறைய கேங்ஸ்டர் படங்கள் வந்ததால், ஒரே மாதிரி கதையாக உள்ளது என சரணின் நண்பர்கள் சொன்னதால் ஹீரோவை மையப்படுத்திய இந்த கதையை உருவாக்கி உள்ளார்.

    3 மாதத்திற்கு பிறகு ஓகே சொன்ன ஷாலினி

    3 மாதத்திற்கு பிறகு ஓகே சொன்ன ஷாலினி

    முதலில் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவை தான் கேட்டுள்ளனர். ஆனால் அவர் மற்ற படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். அதற்கு பிறகு ஷாலினியை அணுகி உள்ளார் சரண். ஆனால் அந்த சமயத்தில் படித்துக் கொண்டிருந்ததால் அவரும் மறுத்துள்ளார். இருந்தாலும் விடாமல் பேசி, 3 மாதங்களுக்கு பிறகு ஷாலினியிடம் சம்மதம் வாங்கி உள்ளார் சரண். ஏற்கனவே காதலுக்கு மரியாதை படத்தில் நடித்து நம்ம வீட்டு பொண்ணு என்ற இமேஜை ஷாலினி பெற்றிருந்தார். அதனால் இந்த படத்திற்கு ஷாலினி தான் சரியாக இருப்பார் என சரண் நினைத்தது தான் இதற்கு காரணமாம்.

    ரகுவரன் தான் சரி

    ரகுவரன் தான் சரி

    இதே போல் வில்லன் துளசி கேரக்டரில் நடிக்க முதலில் அமிதாப் பச்சனிடம் தான் கேட்கப்பட்டுள்ளது. அவரும் முதலில் ஓகே சொல்லி விட்டு, பிறகு படத்தில் இருந்து விலகி உள்ளார். அதற்கு பிறகு தான் ரகுவரனிடம் பேசி உள்ளனர். வழக்கமான வில்லன் கேரக்டர், வன்முறை இல்லாமல் வித்தியாசமானது என்பதால் அவரை நடிக்க வைத்துள்ளனர்.

    வந்து போன கமல் போஸ்டர்

    வந்து போன கமல் போஸ்டர்

    இந்த படத்தில் மற்றொரு சுவாரஸ்யம் என்ன வென்றால் பல சீன்களில் கமல் வந்து போவது தான். இந்த படத்தில் கமல் நடிக்கவில்லை. இருந்தாலும் கமல் நடித்த படங்களின் போஸ்டர்கள் வந்து கொண்டே இருக்கும். கதைப்படி ஹீரோ வாசு, சினிமா தியேட்டரில் தங்கி இருப்பார். அஜித் தேவர்மகன் போஸ்டரில் படுத்திருப்பது, ரகுவரன் கேரக்டர் என்ட்ரி கொடுக்கும் போது பின்னணியில் நாயகன் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது, ரகுவரன் பிளாஷ்பேக் சொல்லும் போது ஒரு கைதியின் டைரி படத்தின் போஸ்டர் இருப்பது, ஷாலினி அஜித்தை சந்திக்க வரும் போது பின்னால் நிழல் நிஜமாகிறது பட போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது என பல இடங்களில் கமல் பட போஸ்டர்கள் வந்து போகும். இதற்கு ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கா என இதுவரை சொல்லப்படவில்லை.

    ஒரே படத்தில் காதல், கல்யாணம்

    ஒரே படத்தில் காதல், கல்யாணம்

    அஜித், ஷாலினியுடன் இணைந்து நடித்த முதல் படம், ஒரே படமும் இது தான். இந்த படத்தில் நடிக்கும் போதே இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டு, 2000 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த படத்தில் ஹீரோ வாசு கேரக்டரில் அஜித்தும், ஹீரோயின் மோகனா கேரக்டரில் ஷாலினியும் நடித்திருந்தனர். இந்த படத்தில் ஷாலினி ஒரு பாடலும் பாடி உள்ளார். பாடலின் மியூசிக்கிற்கு ஷாலினி ஹம்மிங் செய்து கொண்டிருந்ததை கேட்ட சரண், அவரையே அந்த பாடலை பாட வைத்து விட்டாராம்.

    செம ஹிட்டான பாடல்கள்

    செம ஹிட்டான பாடல்கள்

    பரத்வாஜ் இசையில், வைரமுத்துவின் வரிகளில் அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆகின. சத்தம் இல்லாத பாடல், வைரமுத்துவின் கவிதை ஒன்றை மையமாக வைத்து எழுதப்பட்டது. இந்த கவிதையின் அனைத்து வரிகளும் வேண்டும் என முடியும். வேண்டும் என்பதற்கு பதில் கேட்டேன் என வைத்தால் நன்றாக இருக்கும் என பரத்வாஜ் தான் கூறி உள்ளார். இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் மூச்சு விடாமல் பாடி அசத்தி இருப்பார்.

    கார் பரிசு தந்த அஜித்

    கார் பரிசு தந்த அஜித்

    வாலி படத்திற்கு பிறகு அஜித்திற்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த படம் அமர்க்களம். அஜித்தின் 43 வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படம் டிஜிட்டல் வெர்சனுக்கு மாற்றப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை உறுதி செய்வதற்காக படம் துவங்கியதுமே சரணுக்கு காரை பரிசாக வழங்கினாராம் அஜித்.

    English summary
    ajith's 25 th movie is amarkalam. after kadhal mannan, ajith teamed up with director saran in this movie. yesterday amarkalam movie completes 22 years in theatrical release. in this movie many scenes kamal movie posters are show cased in background.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X