For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கமல் ஹாஸன் சந்தர்ப்பவாதியா? போராளியா? - பகுதி 2

  By Shankar
  |

  தமிழகத்தில் மாணவர், இளைஞர்கள் ஜல்லிகட்டு தடை நீக்க போராட்டம் நடைபெற்ற போது, கமல் ஹாஸன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகள், விமர்சனங்கள், அகில இந்திய அளவில் அவரைத் தொடர்பவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற முன்னணி நடிகர்கள் அளவுக்கு கமலுக்கு ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை இல்லை என்றாலும், கமல் சொன்ன கருத்து என்பதால் ஊடகங்களில் பரவி, அது பெரும்பான்மையோரைச் சென்றடைந்தது.

  கமலஹாசன் கடந்த காலங்களில் சினிமா, அரசியல், சமூகம் எனஎதைப் பற்றி கருத்து சொல்லி இருந்தாலும் பிறரால் புரிந்து கொள்ள முடியாது குழப்பமாகவே இருக்கும்.

  Is Kamal is an opportunist of fighter? - part 2

  ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் பற்றி கிண்டல் செய்து தமிழர்களை ட்விட்டர் பக்கத்தில் பொறுக்கிகள் என்றார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி.

  அரசியல் கட்சிகளால் இவை கண்டுகொள்ளப்படாமலும் கண்டிக்கப்படாமலும் இருந்த நிலையில் நகைச்சுவை கலந்து வெடி வெடித்தார் கமல். "ஆம், நாங்கள் பொறுக்கிகள்.. தமிழ் மொழி பொறுக்கிகள் உங்களை போன்று டெல்லியில் பதவி பொறுக்கும் பொறுக்கிகள் அல்ல," என்றார்.

  அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் தென்றலாய் தொடங்கி பெரும் சூறாவளியாக உருவெடுத்து தமிழகம் முழுவதும் மாணவர் இளைஞர்களை பெற்றோர்களே போராட்டத்திற்கு வழியனுப்ப ஜல்லிகட்டு போராட்டம் புயலாய் அடித்துக் கொண்டிருந்தது. மாவட்ட தலைநகரங்களில். அகில இந்தியாவின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தபோது தான் உறுப்பினராக உள்ள நடிகர் சங்கத்திற்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்தார் கமல். கட்சி அடையாளமின்றி தன் எழுச்சியாக போராட்டம் நடத்தி வரும் மாணவர், இளைஞர்களுக்கே பெருமையும் புகழும் கிடைக்க வேண்டும், அதனை தட்டிப் பறிக்கவோ, பங்கு போடவோ, நமக்கு தார்மீக உரிமை இல்லை. போராட்டத்தை மறைக்கும் வகையில் நடிகர் சங்க உண்ணாவிரதத்தை நேரலை செய்திட ஊடகங்களை அனுமதிக்க கூடாது என தெளிவாக கருத்தை பதிவு செய்தார் கமல். அதனை நடிகர் சங்கம் ஏற்றுக் கொண்டு அமுல்படுத்தியது.

  ஜல்லிகட்டு தடை நீக்கத்துக்கு தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டு வருவது உறுதியானவுடன் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் போராடும் மாணவர்களை போராட்ட களத்திற்கே சென்று சந்திக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். தேவைப்பட்டால் தானும் வருவதாக கூறினார். இவை அனைத்தையும் தெளிவு பட டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார் கமல்.

  தமிழக காவல் துறை தவறான முறையில் பலப் பிரயோகம் செய்து மெரினாவிலும், பிற மாவட்டங்களிலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த போது அதற்கு எதிராக கருத்தை பதிவு செய்த முதல்தமிழ் நடிகர் கமல் மட்டுமே. உடனடியாக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தனது கண்டணத்தைத் தெரிவித்தார். சசிகலா நாடராஜன் முதல்வர் பதவிக்கு வருவதற்கு ஏதுவாக பணிவின் அடையாளம் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அன்றைய சூழலில் சசிகலா முதல்வராவதற்கு தகுதியற்றவர் என்பதை பகிரங்கமாக பதிவிட்டார் கமல். அரசியல் கட்சிகள், திரையுலகினர் யாரும் இது போன்ற கருத்தைக் கூறவில்லை. இது அவர்களின் உட்கட்சி பிரச்சினை என கூறி ஒதுங்கி கொண்டனர். அதிமுக அடிமட்ட தொண்டன், வெகுஜன மக்கள் சசிகலாவுக்கு எதிரான மனநிலையில் இருந்ததை பகிரங்கரமாக, துணிச்சலாக பதிவு செய்த போது அகில இந்திய அரசியல் பார்வையாளர்கள் கவனம் முழுமையும் கமலை நோக்கி திரும்பியதை மறுக்க முடியாது.

  கறுப்பு பணம் பிரதானமாக புழங்கும் சினிமா துறையில் நடிகன் தான் நடிக்கும் அல்லது தயாரிக்கும் பட வெளியீட்டுக்கு விஸ்வரூபம் படம் போன்று ஆளும் அரசுகளால் பிரச்சினைகள் வரலாம் என்பதைத் தெரிந்தே அரசியல் பற்றி கருத்து சொல்லத் தொடங்கினார் கமல்.

  தமிழத்தில் ஆட்சியமைப்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவ தொடங்கிய பிப்ரவரி 8ம் தேதிக்கு பின்னர் தினந்தோறும் குழப்பமின்றி தெளிவாக கருத்துகளைப் பதிவு செய்யத் தொடங்கினார், கூவத்தூரில் சட் டமன்ற உறுப்பினர்களை சசிகலா அடைத்து வைத்து பாதுகாத்து வந்த போது தன் ட்விட்டர் பக்கத்தில் தினமும் சரவெடி வெடித்தார் கமல்.

  உச்சகட்டமாக சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்படுவதற்கு முதல் நாள், அடுத்த நாள் ஜெயலலிதா, சசிகலா இருவரும் குற்றவாளிகள், தண்டனைக்கு உரியவர்கள் என்று நீதிபதிகள் உறுதி படுத்திய பின்னரும் அரசியல் பார்வையோடு கமல் கருத்துகளை பதிவிட்டு ட்விட்டர்வாசிகளின் அரசியல் குருவானார். அரசியல் களம் அதகளமாகி அனல் பறந்து கொண்டிருந்த வேளையில், சென்னை புறநகரில் இளம் பெண் நந்தினி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்த சம்பவத்தைக் கண்டித்தும், நீதி கேட்டும் அரசியல் தலைவர்களுக்கு முன்பாகவே கருத்துத் தெரிவித்தார் கமல்.

  எடப்பாடி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின், இங்குள்ள அரசு கலைக்கப்பட வேண்டும். மக்களால் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என நேரடியாகவே கருத்து தெரிவித்தார் கமலஹாசன்.

  குழப்பவாதி என விமர்சிக்கப்பட்டு வந்த நடிகர் கமலஹாசன் அரசியல், சமூகம் இரண்டு தளங்களிலுமே குழப்பமின்றிதான் கருத்து சொல்லியுள்ளார். அவரது ஆங்கிலம் புரியாமல் இருக்கலாம். தமிழில் எழுத்துப் பிழைகள் இருக்கலாம். ஆனால் கருத்துப் பிழைகளைக் காண முடியவில்லை என்பதே உண்மை.

  அரசியல் குழப்பத்துக்கு பின் தற்காலிகமாக அதிகாரத்தில் நிலைகொண்டுள்ள எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு, கமல் ஹாசன் கருத்துக்களுக்கு எதிர்வினை ஆற்றத் தொடங்கியிருக்கிறது. கமலைப் போன்று நேரடியாக அல்ல, மறைமுகமாக.

  அவை பற்றி அடுத்த கட்டுரையில்...

  கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க...

  - ராமானுஜம்

  English summary
  Is Kamal is an opportunist of fighter for social cause? Here is an analysis.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X