»   »  ஐசக்குக்கு ஹேமமாலினி மிரட்டல்?

ஐசக்குக்கு ஹேமமாலினி மிரட்டல்?

Subscribe to Oneindia Tamil

தேவிப்பிரியா மணம் செய்து கொள்ளவுள்ள கோழிப்பண்ணை அதிபர் வில்லியம் ஐசக்கை ஆள் வைத்து அடித்துத் தூக்கி விடுவேன், நடு ரோட்டில்நிறுத்தி வைத்து செருப்பால் அடிப்பேன் என அவரது 2வது மனைவி என்று கூறப்படும் ஹேமமாலினி செல்போனில் மிரட்டியதாக போலீஸில் ஐசக்புகார் கொடுத்துள்ளார்.

முதல் மனைவி ஸ்டெல்லா கொடுத்த புகாரின் பேரில் ஐசக்கின் தாயார் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஐசக் தலைமறைவானார். பின்னர்தேவிப்பிரியா மீது சகட்டு மேனிக்குப் புகார் கூறி ஐசக்கின் 2வது மனைவி என்று கூறப்பட்ட ஹேமமாலினி புகார் கொடுத்தார். இதையடுத்துதேவிப்பிரியாவும் தலைமறைவானார்.

ஐசக், தேவிப்பிரியா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் இருவருக்கும் முன் ஜாமீன் கிடைத்தது. அது கிடைக்கும் வரைஇருவரையும் பிடிக்க முடியாமல் சென்னை போலீஸார் ரொம்பவே சிரமப்பட்டுப் போய் விட்டனர், கடைசி வரை அவர்களை கண்டு பிடிக்கவேமுடியவில்லை.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேவிப்பிரியாவும், ஐசக்கும் நீதிமன்றங்களில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றனர். உயர்நீதிமன்றஉத்தரவுப்படி இருவரும் காவல் நிலையம் வந்து கையெழுத்துப் போட்டுச் செல்கின்றனர்.

வழக்கம் போல ஐசக் அடையார் காவல் நிலையம் வந்தபோது அவரது நண்பரின் செல்போனில் ஹேமமாலினி வந்துள்ளார். ஐசக்கிடம் பேசவேண்டும் என அவர் கூறியுள்ளாராம். ஆனால் நண்பர் அதற்கு அனுமதி மறுக்கவே, நண்பரிடமே ஹேமமாலினி பேசினாராம்.

அவர் பேசுகையில், ஐசக்கை நடுத் தெருவில் நிற்க வைத்து செருப்பால் அடிப்பேன், எனக்குப் பணம் கொடுத்து விட்டு தேவிப்பிரியாவை மணக்கமுடிவு செய்திருக்கிறான் ஐசக். அதை நான் விட மாட்டேன். எப்பாடுபட்டாவது ஐசக், தேவிப்பிரியா திருமணத்தை தடுத்து நிறுத்துவேன்.

எனக்கு மட்டும் ஆள் இல்லையா? எனக்கும் நாலு பேர் இருக்கிறார்கள். அவர்களை வைத்து அடித்துத் தூக்க எவ்வளவு நேரமாகும் என்றுஆவேசமாக கூறினாராம் ஹேமமாலினி.

இதை ஐசக்கின் நண்பர் பதிவு செய்து ஐசக்கிடம் காட்டியுள்ளார். பின்னர் இந்த பேச்சை காவல்துறை அதிகாரிகளிடமே ஐசக் போட்டுக் காட்டி,கேட்டீங்களா, ஹேமமாலினியின் மிரட்டலை என்று கூறியுள்ளார். பின்னர் ஹேமமாலினி மீது புகார் கூறி ஒரு மனுவையும் கொடுத்தார்.

இந்த மிரட்டல் தொடர்பாக தேவிப்பிரியா, தனது நண்பர்கள், சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளாராம் ஐசக். போலீஸ் பாதுகாப்புகோரிப் பெறலாமா என்று அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.சீக்கிரமா பஞ்சாயத்தை முடிங்கப்பா!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil