»   »  60ம் கல்யாணம்தான் .. ஐசக் அலுப்பு!

60ம் கல்யாணம்தான் .. ஐசக் அலுப்பு!

Subscribe to Oneindia Tamil

வழக்கெல்லாம் முடியட்டும், அப்புறம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று பொறுத்திருந்தால் எனக்கும், தேவிப்ரியாவுக்கும் 60ம்கல்யாணம்தான் நடக்கும். எனவே அதுவரை ஆறப் போடாமல் ஏப்ரல் மாதத்திலேயே கல்யாணத்தை முடித்து விட தீர்மானித்துள்ளோம் என்றுகோழிப்பண்ணை அதிபர் ஐசக் கூறியுள்ளார்.

கடந்த மாதம் 19ம் தேதி நடிகை தேவிப்ரியாவுக்கும், வில்லியம் ஐசக்குக்கும் சென்னையில் கல்யாணம் நடப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்புஏகப்பட்ட குழப்பங்கள், சர்ச்சைகள் எழுந்து திட்டமிட்டபடி கல்யாணத்தை நடத்த முடியாதபடி செய்து விட்டன.

ஐசக்கின் முதல் மனைவி ஸ்டெல்லா, 2வது மனைவி ஹேமமாலினி ஆகியோர் கொடுத்த சரமாரி புகார்கள், குற்றச்சாட்டுக்களால் தேவிப்ரியாவும்,ஐசக்கும் போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க தலைமறைவாகி விட்டனர்.

சில நாட்களுக்கு முன்புதான் இருவரும் வெளியில் வந்து நீதிமன்றங்களில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றனர். தற்போது உயர்நீதிமன்றநிபந்தனைப்படி இருவரும் அடையாறு காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்துப் போட்டுச் சென்று கொண்டுள்ளனர்.

கையெழுத்துப் போட வந்த ஐசக்கிடம் வழக்குகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, எல்லாமே பொய் வழக்கு சார். என்னைப் பழிவாங்கவேஇவை போடப்பட்டள்ளன.

ஹேமமாலினி என் மீது பல புகார்களைக் கூறினார், குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். ஆனால் இப்போது அவர் எனது செல்போனுக்கு அடிக்கடிமிஸ்டு கால் கொடுக்கிறார். தேவிப்ரியாவுக்கு எஸ்.எம்.எஸ்சில் வாழ்த்து தெரிவிக்கிறார். இது எதற்கு?

நெருங்கிப் பழகுவது போல நடித்து, என்னை செல்போனில் மிரட்டுகிறார்கள் என்று கூறி புதிய பிரச்சினையைக் கிளப்ப அவர் திட்டமிட்டுள்ளதாகசந்தேகப்படுகிறோம். அவரைப் பற்றிப் பேசவே விரும்பவில்லை. அவரைப் பற்றிப் பேசி எங்களது தரத்தைத் தாழ்த்திக் கொள்ள நாங்கள்விரும்பவில்லை (அட!).

எங்களது கல்யாணம் தொடர்பாக கே.கே. நகர் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வைத்திருந்தோம். 45 நாட்களுக்குள் ஆட்சேபனைதெரிவிக்க விரும்புவோர் அதைத் தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்போதைய நிலையில் எங்கள் மீதுள்ள வழக்குகள் முடியட்டும் என்று காத்திருக்க நாங்கள் விரும்பவில்லை. காரணம், அப்படிக் காத்திருந்தால்,எங்களது 60வது வயதில்தான் கல்யாணம் நடக்கும். எனவே அதுவரை காத்திருக்காமல் ஏப்ரல் மாதத்திலேயே கல்யாணத்தை முடித்து விடதிட்டமிட்டுள்ளோம்.

எங்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் பொய்யென நிரூபித்து நிரபராதிகளாக வெளி வருவோம் என்றார் ஐசக். அவர் பேசியபோது தேவிப்ரியாஅருகில் நின்றபடி ஐசக்கின் பேச்சை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

மந்திரப் புன்னகையா, மர்மப் புன்னகையா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil