Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ரோட்டு கடையில் பிரியாணி சாப்பிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.. கூட யாரு இருக்காங்கன்னு தெரியுமா?
சென்னை: தமிழில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் காமெடி நடிகர் ஆன ரோபோ சங்கர் செய்த செயல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றது.
ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டிரைவர் ஜமுனா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் டாக்ஸி டிரைவராக நடித்துள்ளார்.
18 ரீல்ஸ் எஸ் பி சவுத்ரி தயாரித்துள்ள இந்த படத்தை, எழுதி, இயக்கியிருக்கிறார் பி கின்ஸிலின். இவர் ஏற்கனவே வத்திக்குச்சி படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேமிலி ஆடின்ஸ் நாயகி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தனது எதார்த்த நடிப்பாலும், பேச்சாலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். நடுத்தர குடும்பத்து பெண்ணாக நடிப்பதற்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மிஞ்ச யாராலும் முடியாது. அந்த அளவிற்கு தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடிப்பதில் வல்லவர். குடும்பபாங்கான கதைகளில் அதிகம் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா.

அடுத்தடுத்து படங்கள்
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து சமீபத்தில் வெளியான சுழல் வெப் சீரிஸ் ரசிகர்கள் மதியில் நல்ல வரவேற்பை பெற்றது. அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த வெப் தொடரில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஐஸ்வர்யா. தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் பணிகளும் முடிந்து தற்போது போஸ் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது.

டிரைவராக ஐஸ்வர்யா
அது மட்டும் இல்லாமல் மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, துருவ நட்சத்திரம்,போன்ற பல படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது. இந்த படங்களில் டிரைவர் ஜமுனா மற்றும் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் ஹீரோயின் சப்ஜெக்ட் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் நிலவி வருகிறது. சமீபத்தில் ஆக்ஷன் காட்சிகளுடன் நிறைந்த டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.
கொலைகார கும்பலிடம் சிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

பிரியாணி சாப்பிடும் ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராஜேஷும், காமெடி நடிகரான ரோபோ ஷங்கரும் தங்களுக்கு பிடித்த ரோட்டுக்கடையில் பிரியாணி சாப்பிட ஆசைபடுகின்றனர். உடனே காரை விட்டு இறங்கி மாஸ்க் அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு தெரியாதவாறு பிரியாணி பார்சல் வாங்குகின்றனர். அதிலும் ரோபோ ஷங்கர் லெக் பீஸ் கேட்பது தான் ஹை லைட். பார்சல் வாங்கி கொண்டு இருவரும் காரில் ஏறி செல்லும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.