Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'கோச்சடையான்' படத்தில், ரஜினியுடன் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்!
சென்னை: 'கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்து நடிக்கிறார். படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) லண்டனில் தொடங்குகிறது.
'எந்திரன்' படத்தை அடுத்து ரஜினிகாந்த், 'ராணா' என்ற படத்தில் நடிக்க திட்டமிட்டார். அந்த படத்தின் தொடக்க விழா அன்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றபின், குணம் அடைந்தார்.
'ராணா' படத்தில் அதிக 'ரிஸ்க்'கான சண்டை காட்சிகளும், குதிரையேற்ற காட்சிகளும் இடம்பெற்றிருப்பதால், அந்த காட்சிகளில் ரஜினிகாந்த் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என டாக்டர்கள் கருத்து தெரிவித்தார்கள்.
'கோச்சடையான்'
அதைத்தொடர்ந்து ராணா' படம் தள்ளிப்போடப்பட்டது. அந்த படத்துக்கு பதில், 'கோச்சடையான்' படத்தைத் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 'கோச்சடையான்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்), லண்டனில் தொடங்குகிறது. முன்னதாக படத்தின் பூஜை முறைப்படி கடந்த வாரம் பெரிய அறிவிப்புகளின்றி நடத்தப்பட்டது.
ஜாக்கி ஷெராஃப்
'கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன் சரத்குமார், ஆதி, நாசர், சினேகா, ஷோபனா ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
வடிவேலும் நடிக்கக் கூடும் என்கிறார்கள்.
இப்போது, பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்பும் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்கி ஷராப், 'ஆரண்ய காண்டம்' என்ற படத்தின் மூலம் ஏற்கனவே தமிழ் பட உலகுக்கு அறிமுகமானவர். ரஜினியுடன் இந்திப் படங்களில் நடித்தவர்.
-
Actor Ajith: அஜித் பிறந்தநாளில் காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்.. காத்திருக்கும் ரசிகர்கள்!
-
13 வருடங்களாக காதலித்துவரும் கீர்த்தி சுரேஷ்?.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு.. ரசிகர்கள் கேள்வி
-
கில்லி த்ரிஷா ரோலில் நான் நடிக்க வேண்டியது..லவ் பண்ணிட்டு இருந்ததால் மிஸ்ஸாகிடுச்சு..கிரண் வேதனை!