'ஜேம்ஸ்பாண்டுக்கு' வயது 50... ரூ. 2 கோடிக்கு ஏலம் போன கார்!

ஜேம்ஸ்'பாண்டிக்கு' வயது 50... ரூ. 2 கோடிக்கு ஏலம் போன கார்!
லண்டன்: திரைப்படங்களில் ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்திய பொருட்கள் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டன.
இதில் பல்வேறு ஜேம்ஸ்பாண்டுகள் பயன்படுத்திய உடைகள், வாட்சுகள், பேனா, கார்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டன.
ஆஸ்டன் மார்டின் கார் ரூ. 2.08 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜேம்ஸ்'பாண்டிக்கு' வயது 50!...
ஜேம்ஸ்பாண்டிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. ஆரம்பம் முதல் இன்றைக்கு வரை ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு.
முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வெளியானதன் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அந்த படங்களில் நடிகர்கள் பயன்படுத்திய பொருட்கள் லண்டனில் ஏலம் விடப்பட்டன.

கேசினோ ராயல் நீச்சல் உடைகள்...
கேசினோ ராயல் படத்தில் டேனியல் கிரெய்க் பயன்படுத்திய 2 நீச்சல் ஆடைகள் ரூ .37 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.
குவாண்டம் ஆப் சோலஸ் என்ற படத்தில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த டேனியல் கிரெய்க் பயன்படுத்திய ஆஸ்டன் மார்டின் கார் 3,86,000 டொலருக்கு (ரூ. 2.08 கோடி) ஏலம் போனது. இது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 1.5 மடங்கு அதிக விலைக்கு ஏலம் போனதாக ஏல நிறுவனம் தெரிவித்தது.

''ஸ்கைபால்'' எதிர்பார்த்தது ரூ.6.5 லட்சம்.. கிடைத்தது ரூ. 1.31 கோடி...
தற்போது தயாரிக்கப்பட்டுவரும் ஜேம்ஸ்பாண்ட் படமான ''ஸ்கைபால்'' என்ற படத்தில் கிரெய்க் அணிந்த டைட்டானியம் கைக்கடிகாரம் ரூ.6.5 லட்சத்துக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது 1.31 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்த ஏலத்தில் 600 விஐபிக்கள் கலந்துகொண்டனர். மொத்தம் 11 விதமான பொருட்களை ஏலம் விட்டதில் மொத்தம் 1.6 மில்லியன் டாலர் (ரூ. 6.24 கோடி) திரட்டப்பட்டது. இந்த பணம் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications











