10 ஆண்டுகளுக்குப் பிறகு ‘விஐபி’க்காக 'சுள்ளானுடன்' பாடும் ஜானகியம்மா!
சென்னை: கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தன் மயக்கும் குரலால் ரசிகர்களை வசீகரிக்க வருகிறார் ஜானகியம்மா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல்லயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய ஜான்கியம்மா, 17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற சாதனைக்கு உரியவர்.
இவர் தற்போது தமிழில் தனுஷுடன் சேர்ந்து மெலடிப்பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

வேலையில்லாப் பட்டதாரி...
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் வேலையில்லாப் பட்டதாரி ( விஐபி)தனுஷின் 25வது படம். அமலாபால் கதாநாயகி.

மெலடிப்பாடல்...
இப்படத்தில் அனிருத் இசையில் தனுஷுடன் ஜானகியம்மா மெலடி பாடல் ஒன்றைப் பாடியுள்ளாராம்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு...
தற்போது 75 வயதாகும் ஜானகியம்மா, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாடும் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நிராகரிப்பு...
காலம் தாழ்த்தி வழங்கியதாக சமீபத்தில் தனக்கு அளிக்கப் பட்ட பத்மபூஷன் விருதை ஜானகியம்மா நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பு....
உடல் நலக் குறைப்பாடு காரணமாகவே சமீப காலமாக பாடுவதில் இருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்தார் ஜானகியம்மா. ஆனால், அனிருத் இசையில் பாடுவதற்கு சம்மதம் தெரிவித்து, தனுஷுடன் அவர் பாடியுள்ள மெலடிப் பாடலுக்கு தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளாது.


Click it and Unblock the Notifications











