JSK: படத்தை பார்த்து முடிவு செய்வோம்.. ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா பட சென்சார் பிரச்னையில் நீதிபதிகள் பளிச்!

சென்னை: நடிகர் சுரேஷ் கோபி, நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகியுள்ள படம், ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா. இந்த படத்தை சுருக்கமாக JSK என குறிப்பிட்டு வருகிறார்கள். படத்தை இயக்குநர் பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதமே படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் சென்சார் கொடுக்க மறுத்துள்ளனர். மேலும் படம் வெளியாக கூடாது எனவும் தெரிவித்ததாக கூறப்படிகிறது. இதனால் படம் வெளியாகாமல் உள்ளது. மேலும் படத்தை சென்சார் செய்து உரிய சான்றிதழ் வழங்க வேண்டும் என படக்குழு வழக்கு தொடுத்துள்ளது.

சென்சார் போர்ட் தரப்பில் இந்த படத்திற்கு சென் சென்சார் சான்றிதழ் வழங்காததற்கு காரணமாக சுட்டிக் காட்டப்படுவது என்னவென்றால், படத்தின் பெயரில் ஜானகி என்ற பெயர் உள்ளது. இது இது கடவுளின் பெயர். இந்த படத்திற்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று கூறியதாக தகவல்கள் வெளியானது.

Janaki Vs State Of Kerala Movie Censor Board Issue High Court Decides To Watch Movie Before Made Verdict
Photo Credit:

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய கேரள உயர்நீதிமன்றம், ஒரு படைப்பாளிக்கு இப்படித்தான் படம் எடுக்க வேண்டும், அதன் கதாபாத்திரங்களின் பெயர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என சென்சார் போர்ட் எப்படி ஆணையிட முடியும் என்று கேள்வி எழுப்பியது. மேலும் படக்குழு தரப்பில் இருந்து. படத்தில் இருக்கும் மையக் கதாபாத்திரத்தின் பெயர் ஜானகி. அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதன் பின்னர், தனக்கான நீதிக்காக போராடுகிறார். எனவே படத்திற்கு ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா என பெயர் சூட்டியுள்ளோம் எனத் தெரிவித்தனர்.

நீதிபதிகள் முடிவு: மேலும் படக்குழுவினர் தரப்பில் இருந்தும், சென்சார் போர்ட் தரப்பில் இருந்தும், படத்தை நீதிபதிகள் பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு படத்தை பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்கள். இது படக் குழுவினருக்கும் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Janaki Vs State Of Kerala Movie Censor Board Issue High Court Decides To Watch Movie Before Made Verdict
Photo Credit:

தீர்ப்பு எப்போது?: படத்தை நீதிபதிகள் சனிக்கிழமை பார்த்தால், திங்களன்று இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்து, தீர்ப்பும் அன்றைய தினமே நீதிமன்றத்தால் அறிவிக்கப்படும் என படக்குழு நம்பிக்கையில் உள்ளது. படத்தை இந்த மாதத்திற்குள்ளாக அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்திலோ கூட வெளியிட படக்குழு முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் நடிகர் சுரேஷ் கோபியின் 253வது படம் ஆகும். இவர் தற்போது பாஜக சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X