twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐயப்பன் சிலையை தொட்ட நடிகை-கேரளாவில் சர்ச்சை! பிரபல கன்னட நடிகை ஜெயமாலா, 19 ஆண்டுகளுக்கு முன் ஐயப்பன் கோவிலுக்குச்சென்றபோது ஐயப்பன் சிலையைத் தொட்டதாக தெரிவித்துள்ளார். இது கேரளாவில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் உள்ள பிரபல ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானபக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஜோதிடர்உண்ணிகிருஷ்ண பணிக்கர் (ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்) பரபரப்பானதகவல் ஒன்றை வெளியிட்டார்.அதில் ஐயப்பன் சன்னிதானத்தில் தீட்டு ஏற்பட்டு உள்ளது. இந்தக் கோவிலுக்கு கடந்த18 வருடங்களுக்குள் ஒரு அழகிய பெண் அத்துமீறி நுழைந்துள்ளார்.கோவிலின் கருவறைக்குள் நுழைந்து ஐயப்பனின் சிலையை தொட்டுள்ளார். இந்தசம்பவத்திற்கு அப்போது கோவிலில் இருந்த ஒரு பூசாரியும் உடந்தையாகஇருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தீட்டை அகற்ற வேண்டும் என்று அவர்தெரிவித்திருந்தார்.தான் பிரஷ்னம் (யாகங்களுடன் ஜோதிடர்கள் பலர் சேர்ந்து நடத்தும் ஆய்வு) நடத்திப்பார்த்ததில் இந்த விவரம தெரிய வந்ததாகவும் கூறியிருந்தார்.பணிக்கரின் இந்தத் தகவல்கள் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தின.இதுகுறித்து ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல்மெளனம் காத்து வந்தது.இந் நிலையில் மூத்த கன்னட நடிகை ஜெயமாலா,தான் 19 ஆண்டுகளுக்கு முன்பு ஐயப்பன் கோவிலுக்குச் சென்றதாகவும், அப்போதுகோவில் கருவறைக்குள் சென்று சுவாமி சிலையைத் தொட்டு வணங்கியதாகவும்தெரிவித்துள்ளார்.கன்னடத் திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கியவர் ஜெயமாலா. பல்வேறுபடங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஜெயமாலா, சில படங்களையும்தயாரித்துள்ளார். இவரது கணவர் நடிகர் பிரபாகர். இவருக்கு டைகர் பிரபாகர் என்றும்பெயர் உண்டு.இப்போது பிரபாகர் உயிருடன் இல்லை, சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்துவிட்டார்.ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்தது குறித்து ஜெயமாலா கூறுகையில்,கடந்த 1987ம் ஆண்டு எனது கணவர் பிரபாகர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.அவர் நலமடைந்தால் அவரை அழைத்துக் கொண்டு ஐயப்பன் கோவிலுக்குவருவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது 27.எனது கணவர் உடல் நலம் அடைந்ததால எனது வேண்டுதலின்படி ஐயப்பன்கோவிலுக்கு அவரை அழைத்துச் சென்றேன். அப்போது நல்ல கூட்டம் இருந்தது.இதனால் என்னை யாராலும் அடையாளம் காணவில்லை.கோவில் மேலே சென்றவுடன், கருவரையை நெருங்கியபோது கூட்டம்முண்டியடித்தது. இதனால் நானும், எனது கணவரும் கூட்ட நெரிசலில் சிக்கிகருவரைக்குள் தள்ளப்பட்டோம். ஐயப்பன் உருவத்தை அருகில் பார்த்ததும்மெய்மறந்த நான் பக்தியில் சிலையைத் தொட்டு வணங்கினேன்.இதை அங்கிருந்த தந்திரி (பூசாரி) பார்த்து விட்டார். இருந்தாலும் எதுவும் பேசாமல் என்து கையில் சில பூக்களைப் போட்டு உடனடியாகஅங்கிருந்து சென்று விடுமாறு கூறினார்.நானும் பேசாமல் அங்கிருந்து கணவருடன் திரும்பி விட்டேன். சுவாமி சிலையை நான் தொட்டு வணங்கியது தவறு என்று நினைக்கவில்லை.கர்நாடகத்தில் உள்ள கோவில்களுக்குச் சென்றால் சுவாமி சிலைகளைத் தொட்டுவணங்குவது சாதாரணமான ஒன்று.அப்படி நினைத்துத்தான் நான் ஐயப்பன் சிலையை தொட்டு வணங்கினேன். மேலும்இளம் வயது பெண்கள் ஐயப்பன் கோவிலுக்க வரக் கூடாது என்ற விதிமுறைஇருப்பது எனக்குத் தெரியாது.ஆனால் இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளதால், உண்ணிகிருஷ்ணபணிக்கருக்கு நடந்த சம்பவத்தை விளக்கி பேக்ஸ் அனுப்பியுள்ளேன் என்றுகூறியுள்ளார் ஜெயமாலா.ஆனால் ஜெயமாலாவின் ஒப்புதலை ஏற்க ஐயப்பன் கோவில் பக்தர்கள்மறுக்கிறார்கள். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோவிலுக்கு வரமுடியாது என்ற விதிமுறை உள்ளது. ஜெயமாலா என்னதான் கத்தை மூடிக்கொண்டிருந்தாலும் தன்னை முழுமையாக அவரால் மறைத்துக் கொண்டிருக்கமுடியாது.மேலும் கருவறைக்குள் பிராமணர்கள் மட்டுமே நுழைய முடியும். அதை விடமுக்கியமாக சுவாமி சிலையை பிரதான தந்திரி மட்டுமே தொட முடியும். அப்படிஇருக்கையில், கோவில் தந்திரியின் உதவி இல்லாமல் ஜெயமாலா இப்படி நடந்துகொண்டிருக்க முடியாது.எனவே தேவஸ்தானம இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள்கோரியுள்ளனர்.

    By Staff
    |

    பிரபல கன்னட நடிகை ஜெயமாலா, 19 ஆண்டுகளுக்கு முன் ஐயப்பன் கோவிலுக்குச்சென்றபோது ஐயப்பன் சிலையைத் தொட்டதாக தெரிவித்துள்ளார். இது கேரளாவில்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளாவில் உள்ள பிரபல ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானபக்தர்கள் வந்து செல்கின்றனர்.

    இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஜோதிடர்உண்ணிகிருஷ்ண பணிக்கர் (ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்) பரபரப்பானதகவல் ஒன்றை வெளியிட்டார்.

    அதில் ஐயப்பன் சன்னிதானத்தில் தீட்டு ஏற்பட்டு உள்ளது. இந்தக் கோவிலுக்கு கடந்த18 வருடங்களுக்குள் ஒரு அழகிய பெண் அத்துமீறி நுழைந்துள்ளார்.

    கோவிலின் கருவறைக்குள் நுழைந்து ஐயப்பனின் சிலையை தொட்டுள்ளார். இந்தசம்பவத்திற்கு அப்போது கோவிலில் இருந்த ஒரு பூசாரியும் உடந்தையாகஇருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட தீட்டை அகற்ற வேண்டும் என்று அவர்தெரிவித்திருந்தார்.

    தான் பிரஷ்னம் (யாகங்களுடன் ஜோதிடர்கள் பலர் சேர்ந்து நடத்தும் ஆய்வு) நடத்திப்பார்த்ததில் இந்த விவரம தெரிய வந்ததாகவும் கூறியிருந்தார்.

    பணிக்கரின் இந்தத் தகவல்கள் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தின.இதுகுறித்து ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல்மெளனம் காத்து வந்தது.

    இந் நிலையில் மூத்த கன்னட நடிகை ஜெயமாலா,

    தான் 19 ஆண்டுகளுக்கு முன்பு ஐயப்பன் கோவிலுக்குச் சென்றதாகவும், அப்போதுகோவில் கருவறைக்குள் சென்று சுவாமி சிலையைத் தொட்டு வணங்கியதாகவும்தெரிவித்துள்ளார்.

    கன்னடத் திரையுலகின் பிரபல நடிகையாக விளங்கியவர் ஜெயமாலா. பல்வேறுபடங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ஜெயமாலா, சில படங்களையும்தயாரித்துள்ளார். இவரது கணவர் நடிகர் பிரபாகர். இவருக்கு டைகர் பிரபாகர் என்றும்பெயர் உண்டு.

    இப்போது பிரபாகர் உயிருடன் இல்லை, சில ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்துவிட்டார்.

    ஐயப்பன் கோவிலுக்குள் நுழைந்தது குறித்து ஜெயமாலா கூறுகையில்,

    கடந்த 1987ம் ஆண்டு எனது கணவர் பிரபாகர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.அவர் நலமடைந்தால் அவரை அழைத்துக் கொண்டு ஐயப்பன் கோவிலுக்குவருவதாக வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு வயது 27.

    எனது கணவர் உடல் நலம் அடைந்ததால எனது வேண்டுதலின்படி ஐயப்பன்கோவிலுக்கு அவரை அழைத்துச் சென்றேன். அப்போது நல்ல கூட்டம் இருந்தது.இதனால் என்னை யாராலும் அடையாளம் காணவில்லை.

    கோவில் மேலே சென்றவுடன், கருவரையை நெருங்கியபோது கூட்டம்முண்டியடித்தது. இதனால் நானும், எனது கணவரும் கூட்ட நெரிசலில் சிக்கிகருவரைக்குள் தள்ளப்பட்டோம். ஐயப்பன் உருவத்தை அருகில் பார்த்ததும்மெய்மறந்த நான் பக்தியில் சிலையைத் தொட்டு வணங்கினேன்.

    இதை அங்கிருந்த தந்திரி (பூசாரி) பார்த்து விட்டார்.

    இருந்தாலும் எதுவும் பேசாமல் என்து கையில் சில பூக்களைப் போட்டு உடனடியாகஅங்கிருந்து சென்று விடுமாறு கூறினார்.

    நானும் பேசாமல் அங்கிருந்து கணவருடன் திரும்பி விட்டேன்.

    சுவாமி சிலையை நான் தொட்டு வணங்கியது தவறு என்று நினைக்கவில்லை.கர்நாடகத்தில் உள்ள கோவில்களுக்குச் சென்றால் சுவாமி சிலைகளைத் தொட்டுவணங்குவது சாதாரணமான ஒன்று.

    அப்படி நினைத்துத்தான் நான் ஐயப்பன் சிலையை தொட்டு வணங்கினேன். மேலும்இளம் வயது பெண்கள் ஐயப்பன் கோவிலுக்க வரக் கூடாது என்ற விதிமுறைஇருப்பது எனக்குத் தெரியாது.

    ஆனால் இது தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளதால், உண்ணிகிருஷ்ணபணிக்கருக்கு நடந்த சம்பவத்தை விளக்கி பேக்ஸ் அனுப்பியுள்ளேன் என்றுகூறியுள்ளார் ஜெயமாலா.

    ஆனால் ஜெயமாலாவின் ஒப்புதலை ஏற்க ஐயப்பன் கோவில் பக்தர்கள்மறுக்கிறார்கள். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோவிலுக்கு வரமுடியாது என்ற விதிமுறை உள்ளது. ஜெயமாலா என்னதான் கத்தை மூடிக்கொண்டிருந்தாலும் தன்னை முழுமையாக அவரால் மறைத்துக் கொண்டிருக்கமுடியாது.

    மேலும் கருவறைக்குள் பிராமணர்கள் மட்டுமே நுழைய முடியும். அதை விடமுக்கியமாக சுவாமி சிலையை பிரதான தந்திரி மட்டுமே தொட முடியும். அப்படிஇருக்கையில், கோவில் தந்திரியின் உதவி இல்லாமல் ஜெயமாலா இப்படி நடந்துகொண்டிருக்க முடியாது.

    எனவே தேவஸ்தானம இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள்கோரியுள்ளனர்.

      Read more about: actress jayamalas confession
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X