மீண்டும் கண்ணகி! கண்ணகி கதையைக் கூறும் சிலப்பதிகாரம் மீண்டும் திரைப்படமாகிறது.ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தை மையமாகக் கொண்டஏற்கனவே சில திரைப்படங்கள் வந்து விட்டன. கண்ணகி என்ற பெயரில் பி.யு.சின்னப்பா நடிக்க முன்பு ஒருபடமும் அதைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயக்குமாரி நடிக்கபூம்புகார் என்ற பெயரிலும் கண்ணகியின் கதை திரைப்படமாகியுள்ளது.இப்போது மீண்டும் கண்ணகி கதை படமாகவுள்ளது. இப்படத்தை தயாரித்து, இயக்கி, கண்ணகியாக நடிக்கநடிகை ஜெயப்பிரதா முடிவு செய்துள்ளார். பல்வேறு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப்படங்களில் நடித்த ஜெயப்பிரதா தற்போது அரசியலில் தீவிரமாக உள்ளார்.சமாஜ்வாடி கட்சி எம்.பியாக உள்ள ஜெயப்பிரதா, மீண்டும் சினிமாவுக்குத் திரும்பியுள்ளார். கமல்ஹாசனின்தசாவதாரம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் ஜெயப்பிரதா நடிக்கிறார். இந்த நிலையில் கண்ணகியின் கதையைக் கூறும் சிலப்பதிகாரத்தை திரைப்படமாக எடுக்க ஜெயப்பிரதா முடிவுசெய்துள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.அப்போது அவரிடம் ஒரு மனுவையும் கொடுத்தார். அதில், இந்தியில் தயாரான அம்பேத்கர் படத்தை தமிழில்மொழி பெயர்க்க தங்களது அரசு ஆக்கமும், ஊக்கமும், ஊக்கத் தொகையும் அளித்தது.இதேபோல தற்போது பெரியார் திரைப்படத்திற்கும் உதவி அளித்துள்ளீர்கள். அதேபோல கண்ணகி கதையைநான் படமாக்கவுள்ளேன். அதற்கு தங்களது அரசின் அனுமதியும், ஆதரவும், ஊக்கத் தொகையும் வழங்கவேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயப்பிரதா.இருப்பினும் இதுகுறித்து முதல்வர் கருணாநிதி எந்த உறுதிமொழியும் அளித்ததாக தெரியவில்லை. லேட்டஸ்தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிலப்பதிகாரத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் திரைப்படமாக எடுக்கஜெயப்பிரதா திட்டமிட்டுள்ளாராம்.

By Staff
கண்ணகி கதையைக் கூறும் சிலப்பதிகாரம் மீண்டும் திரைப்படமாகிறது.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தை மையமாகக் கொண்டஏற்கனவே சில திரைப்படங்கள் வந்து விட்டன. கண்ணகி என்ற பெயரில் பி.யு.சின்னப்பா நடிக்க முன்பு ஒருபடமும் அதைத் தொடர்ந்து கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயக்குமாரி நடிக்கபூம்புகார் என்ற பெயரிலும் கண்ணகியின் கதை திரைப்படமாகியுள்ளது.

இப்போது மீண்டும் கண்ணகி கதை படமாகவுள்ளது. இப்படத்தை தயாரித்து, இயக்கி, கண்ணகியாக நடிக்கநடிகை ஜெயப்பிரதா முடிவு செய்துள்ளார். பல்வேறு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்திப்படங்களில் நடித்த ஜெயப்பிரதா தற்போது அரசியலில் தீவிரமாக உள்ளார்.

சமாஜ்வாடி கட்சி எம்.பியாக உள்ள ஜெயப்பிரதா, மீண்டும் சினிமாவுக்குத் திரும்பியுள்ளார். கமல்ஹாசனின்தசாவதாரம் படத்தில் முக்கிய பாத்திரத்தில் ஜெயப்பிரதா நடிக்கிறார்.

இந்த நிலையில் கண்ணகியின் கதையைக் கூறும் சிலப்பதிகாரத்தை திரைப்படமாக எடுக்க ஜெயப்பிரதா முடிவுசெய்துள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவரிடம் ஒரு மனுவையும் கொடுத்தார். அதில், இந்தியில் தயாரான அம்பேத்கர் படத்தை தமிழில்மொழி பெயர்க்க தங்களது அரசு ஆக்கமும், ஊக்கமும், ஊக்கத் தொகையும் அளித்தது.

இதேபோல தற்போது பெரியார் திரைப்படத்திற்கும் உதவி அளித்துள்ளீர்கள். அதேபோல கண்ணகி கதையைநான் படமாக்கவுள்ளேன். அதற்கு தங்களது அரசின் அனுமதியும், ஆதரவும், ஊக்கத் தொகையும் வழங்கவேண்டும் என்று கோரியுள்ளார் ஜெயப்பிரதா.

இருப்பினும் இதுகுறித்து முதல்வர் கருணாநிதி எந்த உறுதிமொழியும் அளித்ததாக தெரியவில்லை. லேட்டஸ்தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிலப்பதிகாரத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் திரைப்படமாக எடுக்கஜெயப்பிரதா திட்டமிட்டுள்ளாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X