»   »  மீண்டும் கமல், ஜெயப்பிரதா நினைத்தாலே இனிக்கும் கமல், ஜெயப்பிரதா ஜோடி மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க ஜோடி சேருகிறார்கள்தசாவதாரத்தில்.கமல்ஹாசனுடன் பல நாயகிகள் நடித்திருந்தாலும், சில ஜோடிகள் தான் ரசிகர்கள் மனதில் எப்போதும் எவர் கிரீன்ஜோடியாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் கமல்-ஸ்ரீதேவி, கமல்-ஸ்ரீபிரியா, கமல்-அம்பிகா,கமல்-ஜெயப்பிரதா, கமல்-ரேவதி ஜோடியை குறிப்பிட்டுச் சொல்லலாம்.அந்த வரிசையில், இப்போது கமலும், ஜெயப்பிரதாவும் மீண்டும் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள். சமீபத்தில்சென்னையில் நடந்த சினிமா நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரதா வந்திருந்தார். கமலும், ரஜினியும் கூட அங்குவந்திருந்தார்கள்.அப்போது ஜெயப்பிரதாவை கூட்டிக் கொண்டு ரஜினியிடம் போன கமல், ரஜினி இவர் யார் தெரிகிறதா?இவர்தான் ஜெயப்பிரதா என்று செல்லமாக தமாஷ் செய்தார் கமல்.அதற்கு ரஜினி, அப்படியா, நான் யாரோ புதுமுக நடிகை என்று நினைத்தேன் என்று ரஜினியும் பதிலுக்கு தமாஷ்செய்தார். இருவரின் குறும்பையும் சிரித்தபடி ரசித்த ஜெயப்பிரதா, நினைத்தாலே இனிக்கும் நினைவுகளில்மூழ்கினார். ரஜினிக்கும், கமலுக்கும் கூட நினைத்தாலே இனித்திருக்கும் அந்த பழைய நினைவுகள்.அந்த சந்திப்போடு ஜெயப்பிரதாவை மறந்து விடவில்லை கமல். இப்போது தனது தசாவதாரத்தில்ஜெயப்பிரதாவை நடிக்க வைத்துள்ளார் கமல். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக ஆசின், மல்லிகா ஷெராவத்ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது 3வதாக ஜெயப்பிரதாவும் சேர்ந்துள்ளார்.இருவரும் இணைந்து ஏற்கனவே சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இருபடங்களுமே மெகா ஹிட் படங்கள். இருவரது ஜோடியும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவுள்ளது கமல் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைஏற்படுத்தியுள்ளது. ஜெயப்பிரதாவை கமல் எப்படி கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.படு வேகமாக நடந்து வரும் தசாவதாரம் படப்பிடிப்பு உத்தண்டியில் முதல் கட்டத்தை முடித்து விட்டு இப்போதுசெங்கல்பட்டு அருகே இடம் பெயர்ந்துள்ளது.

மீண்டும் கமல், ஜெயப்பிரதா நினைத்தாலே இனிக்கும் கமல், ஜெயப்பிரதா ஜோடி மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க ஜோடி சேருகிறார்கள்தசாவதாரத்தில்.கமல்ஹாசனுடன் பல நாயகிகள் நடித்திருந்தாலும், சில ஜோடிகள் தான் ரசிகர்கள் மனதில் எப்போதும் எவர் கிரீன்ஜோடியாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் கமல்-ஸ்ரீதேவி, கமல்-ஸ்ரீபிரியா, கமல்-அம்பிகா,கமல்-ஜெயப்பிரதா, கமல்-ரேவதி ஜோடியை குறிப்பிட்டுச் சொல்லலாம்.அந்த வரிசையில், இப்போது கமலும், ஜெயப்பிரதாவும் மீண்டும் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள். சமீபத்தில்சென்னையில் நடந்த சினிமா நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரதா வந்திருந்தார். கமலும், ரஜினியும் கூட அங்குவந்திருந்தார்கள்.அப்போது ஜெயப்பிரதாவை கூட்டிக் கொண்டு ரஜினியிடம் போன கமல், ரஜினி இவர் யார் தெரிகிறதா?இவர்தான் ஜெயப்பிரதா என்று செல்லமாக தமாஷ் செய்தார் கமல்.அதற்கு ரஜினி, அப்படியா, நான் யாரோ புதுமுக நடிகை என்று நினைத்தேன் என்று ரஜினியும் பதிலுக்கு தமாஷ்செய்தார். இருவரின் குறும்பையும் சிரித்தபடி ரசித்த ஜெயப்பிரதா, நினைத்தாலே இனிக்கும் நினைவுகளில்மூழ்கினார். ரஜினிக்கும், கமலுக்கும் கூட நினைத்தாலே இனித்திருக்கும் அந்த பழைய நினைவுகள்.அந்த சந்திப்போடு ஜெயப்பிரதாவை மறந்து விடவில்லை கமல். இப்போது தனது தசாவதாரத்தில்ஜெயப்பிரதாவை நடிக்க வைத்துள்ளார் கமல். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக ஆசின், மல்லிகா ஷெராவத்ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது 3வதாக ஜெயப்பிரதாவும் சேர்ந்துள்ளார்.இருவரும் இணைந்து ஏற்கனவே சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இருபடங்களுமே மெகா ஹிட் படங்கள். இருவரது ஜோடியும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவுள்ளது கமல் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைஏற்படுத்தியுள்ளது. ஜெயப்பிரதாவை கமல் எப்படி கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.படு வேகமாக நடந்து வரும் தசாவதாரம் படப்பிடிப்பு உத்தண்டியில் முதல் கட்டத்தை முடித்து விட்டு இப்போதுசெங்கல்பட்டு அருகே இடம் பெயர்ந்துள்ளது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நினைத்தாலே இனிக்கும் கமல், ஜெயப்பிரதா ஜோடி மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க ஜோடி சேருகிறார்கள்தசாவதாரத்தில்.

கமல்ஹாசனுடன் பல நாயகிகள் நடித்திருந்தாலும், சில ஜோடிகள் தான் ரசிகர்கள் மனதில் எப்போதும் எவர் கிரீன்ஜோடியாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் கமல்-ஸ்ரீதேவி, கமல்-ஸ்ரீபிரியா, கமல்-அம்பிகா,கமல்-ஜெயப்பிரதா, கமல்-ரேவதி ஜோடியை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அந்த வரிசையில், இப்போது கமலும், ஜெயப்பிரதாவும் மீண்டும் சேர்ந்து நடிக்கப் போகிறார்கள். சமீபத்தில்சென்னையில் நடந்த சினிமா நிகழ்ச்சிக்கு ஜெயப்பிரதா வந்திருந்தார். கமலும், ரஜினியும் கூட அங்குவந்திருந்தார்கள்.

அப்போது ஜெயப்பிரதாவை கூட்டிக் கொண்டு ரஜினியிடம் போன கமல், ரஜினி இவர் யார் தெரிகிறதா?இவர்தான் ஜெயப்பிரதா என்று செல்லமாக தமாஷ் செய்தார் கமல்.

அதற்கு ரஜினி, அப்படியா, நான் யாரோ புதுமுக நடிகை என்று நினைத்தேன் என்று ரஜினியும் பதிலுக்கு தமாஷ்செய்தார். இருவரின் குறும்பையும் சிரித்தபடி ரசித்த ஜெயப்பிரதா, நினைத்தாலே இனிக்கும் நினைவுகளில்மூழ்கினார். ரஜினிக்கும், கமலுக்கும் கூட நினைத்தாலே இனித்திருக்கும் அந்த பழைய நினைவுகள்.

அந்த சந்திப்போடு ஜெயப்பிரதாவை மறந்து விடவில்லை கமல். இப்போது தனது தசாவதாரத்தில்ஜெயப்பிரதாவை நடிக்க வைத்துள்ளார் கமல். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக ஆசின், மல்லிகா ஷெராவத்ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது 3வதாக ஜெயப்பிரதாவும் சேர்ந்துள்ளார்.

இருவரும் இணைந்து ஏற்கனவே சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இருபடங்களுமே மெகா ஹிட் படங்கள். இருவரது ஜோடியும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை.

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவுள்ளது கமல் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தைஏற்படுத்தியுள்ளது. ஜெயப்பிரதாவை கமல் எப்படி கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

படு வேகமாக நடந்து வரும் தசாவதாரம் படப்பிடிப்பு உத்தண்டியில் முதல் கட்டத்தை முடித்து விட்டு இப்போதுசெங்கல்பட்டு அருகே இடம் பெயர்ந்துள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil