»   »  கவியரசு பாடல்.. சிலாகித்த ஜேசுதாஸ்

கவியரசு பாடல்.. சிலாகித்த ஜேசுதாஸ்

Subscribe to Oneindia Tamil

பெரியார் படத்திற்காக கவிப் பேரரசு வைரமுத்து எழுதியுள்ள பாடல் காலம் கடந்தும் நிற்கும் என்றுஅப்பாடலைப் பாடிய ஜேசுதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜேசுதாசுக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பல காலம் முன்பு மோதல் நடந்தது. ஒரு படத்துக்கு வைரமுத்துஎழுதிய பாடலில் திருக்கோவில் என்று இருந்ததை தெருக்கோவில் என்று பாடினார் மலையாளியான ஜேசுதாஸ்.

பாடல் ரெக்கார்டிங்கின்போது தமிழ்க் கொலையைப் பார்த்து நொந்துபோன வைரமுத்து அதைத் திருத்த முயல,தப்பை ஏற்காத ஜேசுதாஸ், இனி வைரமுத்து பாடலை பாட மாட்டேன் என்று சொல்லிவிட்டுப் போனார்.அதிலிருந்து இருவருக்கும் இடையே அவ்வளவாக அண்டர்ஸ்டான்டிங் இல்லாமல் போனது. காலப் போக்கில்அந்த மோதல் மறைந்தது. இப்போது மீண்டும் இருவரும் நண்பர்களே.

ஞானராஜசேகரன் ஐஏஎஸ் இயக்கத்தில் சத்யராஜ் பெரியார் வேடம் பூண்டு நடிக்கும் பெரியார் படத்திற்கானபாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

இப்படத்திற்காக வைரமுத்து எழுதியுள்ள யாரோ யாரோ என்ற பாடலை ஜேசுதாஸ் தான் பாடினார். பாடல்வரிகளை வெகுவாக ரசித்த ஜேசுதாஸ், இது காலம் கடந்தும் நிற்கப் போகும் பாடல் என்று வைரமுத்துவைப்பாராட்டிவிட்டுப் போனாராம்.

இந்தப் பாடலில் பெரியாருக்குள் இருந்த தத்துவஞானியை வெளியே கொண்டு வரும் வண்ணம் வரிகளைப்போட்டுள்ளார் வைரமுத்து.

ஜேசுதாஸ் சிலாகித்த அந்த பாடலின் சில வரிகள்:

யாரோ யாரோ
தாயும் யாரோ
தந்தை யாரோ யார் யாரோ?

ஜனனத்தின் முன்னும்
சாவின் பின்னும்
சொந்தம் பந்தம்
யார் யாரோ?

பறவை எல்லாம் றெக்கை
வந்தால்
தாயைக் கூட்டில் தேடாது
மனிதன் கொண்ட
பாசம் மட்டும்
வேகும்போதும் போகாது

மனிதன் யாரப்பா
சிந்திக்கும் மிருகம்
இரை தந்தால் பழகும்
பசி வந்தால் விலகும்

சொந்தம் என்கின்ற
சுமையே கூடாது

பட்டாம் பூச்சிக்கு பாரம் உதவாது

தாய்க்குப் பிறந்தாலும்
தாய் வேறு உலகம்
மகன் வேறு உலகம்
இதில் என்ன பாசம்?

கடலில் பிறந்தாலும்
முகில் எங்கோ அலையும்
மழை எங்கோ பொழியும்
அதுபோல்தான் உறவும்

வீசும் காற்றுக்கு
தேசம் கிடையாது
வீதிக்கு வந்த மனம்
பாசம் அறியாது

நான் என்னை மட்டும்
நம்பி நம்பிப் பயணம் போகிறேன்...

இவ்வாறு போட்டுத் தாக்கியிருக்கிறார் கவியரசு வைரமுத்து.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil