»   »  "தனி ஒருவன்" நாயகன் "ஜெயம் ரவி"யின் 35 வது பிறந்த தினம் இன்று

"தனி ஒருவன்" நாயகன் "ஜெயம் ரவி"யின் 35 வது பிறந்த தினம் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 35 வது பிறந்த தினத்தில் அடியெடுத்து வைக்கிறார், 1980 ம் ஆண்டு செப்டம்பர் 10 ம் தேதி மதுரையில் பிறந்த ஜெயம் ரவி 2003 ம் ஆண்டில் நடிகராக அறிமுகமானார்.

Select City
Buy Thani Oruvan (U) Tickets

ஜெயம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான ஜெயம் ரவி தொடர்ந்து எம் குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, நிமிர்ந்து நில் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.


ஜெயம் ரவியின் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த தனி ஒருவன் திரைப்படம் தற்போது வசூலில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் பிறந்த தினத்தில் ஒரு மாபெரும் வெற்றியைச் சுவைத்து வெற்றி நாயகனாக தனது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி.


தனி ஒருவன் நாயகனின் பிறந்தநாளில் தொடர்ந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவரை ட்விட்டரில் வாழ்த்தி வருகின்றனர், அவர்களின் வாழ்த்துக்களில் இருந்து ஒரு சில பதிவுகளை இங்கே காணலாம்.


பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரவி - ஹன்சிகா

எங்கேயும் காதல் திரைப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த நடிகை ஹன்சிகா "பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரவி. இந்த வருடம் உங்களுக்கு நிறைய பேரின் அன்பு மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என்று நான் மனமார ஆசிர்வதிக்கிறேன்" என்று முதல் ஆளாக தனது வாழ்த்துக்களை ஜெயம் ரவிக்கு தெரிவித்துள்ளார்.


சிறந்த 5 படங்கள்

எம் குமரன் S/O மகாலட்சுமி, எங்கேயும் காதல், பேராண்மை, ரோமியோ ஜூலியட், தனி ஒருவன் 5 சிறந்த திரைப்படங்களை கொடுத்த ஜெயம் ரவிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார் தனி ஒருவன் கார்த்தி.


அந்த ஆத்தா உங்களுக்கு

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயம் ரவி அந்த ஆத்தா மகமாயி உங்களுக்கு எந்த குறையும் வைக்கமாட்டா" என்று வாழ்த்தியிருக்கிறார் ரஞ்சித் ஏகலைவன்.


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயம் ரவி சார், உங்களின் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறோம்" என்று ஜெயம் ரவியை வாழ்த்தியிருக்கிறார் உமேஷ்.


பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா என்று பிறந்தநாள் கேக்கை போஸ்ட் செய்து ஜெயம்ரவியை வாழ்த்தியிருக்கிறார் உமர்.


ஹேப்பி பர்த்டே டியர்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயம் ரவி, கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று ஜெயம் ரவியை வாழ்த்தியிருக்கிறார் டார்லிங் டம்பக்கு. இந்த போட்டோவை ஏராளமான ரசிகர்கள் ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூற பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


ரசிகர்களுடன் இணைந்து தட்ஸ்தமிழ் சார்பாக நாமும் வாழ்த்துவோம் "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயம் ரவி".English summary
Today Actor Jeyam Ravi Celebrating His 35th Birthday. From thatsTamil and all our Readers around the world, wishing this marvelous actor a wonderful birthday ahead.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil