»   »  ஜியா கான்-லேட்டஸ்ட் பாதுஷா

ஜியா கான்-லேட்டஸ்ட் பாதுஷா

Subscribe to Oneindia Tamil

19 வயசு பருவப் புயல் ஜியா கான், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இணைந்து அசத்தியுள்ள நிசப்த் ஒரு வழியாக தியேட்டர்களுக்கு வந்துவிட்டது. ஜியா கானின் துணிச்சல் நடிப்புதான் பாலிவுட்டின் லேட்டஸ்ட் அவல்!

மிரட்டல் இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நிசப்த். ஹாலிவுட் பாணி கதை. 70 வயதை நெருங்கும் அமிதாப்பச்சன் மீது, 19 வயசே ஆன பருவப் புயல் ஜியா கான் காதல் கொண்டு பின்னாலேயே சுற்றுவது போன்ற கதை.

இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது பெரும் சர்ச்சை எழுந்தது. அமிதாப் பச்சன் இதுபோன்ற ரோல்களில் நடிக்கலாமா என்பதுதான்சர்ச்சையைக் கிளப்பியவர்களின் கேள்வி.

ஆனால் இதில் பாலியல் உணர்ச்சிகளைத் தூண்டும் காட்சிகள் இருக்காது, பாலியல் பிரச்சினை சம்பந்தமான கதையும் அல்ல என்று ராம் கோபால்வர்மா தரப்பு விளக்கியபிறகே சர்ச்சை அடங்கியது.

படத்தின் முக்கிய விஷயமே ஜியாகான்தான். படு துடிப்பான பெண்ணாக இருக்கிறார் ஜியா கான். இயற்கையிலேயே அவர் அப்படித்தானாம்.துள்ளல் வயசு எனக்கு பிறகு துடிப்போடு இல்லாவிட்டால் எப்படி என்று கில்லியாக பேசுகிறார் ஜியாகான்.

அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர் ஜியா கான். படு பளிச் என இருக்கும் ஜியா கானுக்கு தைரியமும் ஜாஸ்தியாம். எதையும் பளிச்செனசெய்வதில் தீவிரமாக இருக்கும் ஜியாகான், கவர்ச்சியாக நடிக்கத்தான் தனக்குப் பிடிக்கும் என அரை டன் பாதுஷாவை அப்படியே நம்ம வாயில்போட்டு சந்தோஷத்தைக் கொடுக்கிறார்.

இந்தப் படத்தில் ஜியா கானின் கவர்ச்சித் திறமையை அப்படியே இண்டு பிசகாமல் படத்தில் பயன்படுத்தியுள்ளாராம் வர்மா. குறிப்பாக ஜியாகான்ஆடியுள்ள ஒரு பெல்லி டான்ஸ், ரசிகர்களை சூடேற்றும் வகையில் உள்ளதாம்.

படு கிளாமராக இந்த டான்ஸை ஆடியுள்ளாராம் ஜியாகான். பெல்லி டான்ஸை முறைப்படி கற்றவராம் ஜியா. இதுதவிர சம்பா, ரெக்கே, லம்பாடா,சல்ஸா, ஜாஸ், கதக் என பல வகை நடனங்களை கரைத்துக் குடித்தவராம்.

ஊர்மிளா மடோன்கருக்குப் பிறகு ராம் கோபால் வர்மா அறிமுகப்படுத்தியுள்ள அசத்தல் நாயகி என்ற பெயரையும் ஜியா கான் இப்போதே தட்டிச்சென்று விட்டார்.

இளம் வயதுப் பெண்ணுக்கும், வயதான ஒருவருக்கும் இடையே ஏற்படும் காதலை வித்தியாசமாக கூறியுள்ளார் வர்மா. இப்படத்தின் கதை, ரஷியஎழுத்தாளர் விலாடிமிர் நபகோவ் எழுதிய லோலிதா என்ற நாவலின் கதையின் தழுவலாம்.

அமிதாப்பை விரட்டி விரட்டிக் காதலிப்பது போன்ற கேரக்டர் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஜியா கானிடம் கேட்டால், ஒய் நாட்? மேலைநாடுகளில் இதுபோன்ற காதல் மிகவும் சகஜம். இந்தியாவிலும் கூட இது இப்போது பரவலாக இருக்கிறது.

உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? வயசான ஆண்களைத்தான் இளம் பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்களின் முதிர்ச்சியான அணுகுமுறை,பழகும் தன்மை, பக்குவம் இவை எல்லாமே பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். முரட்டுத்தனம் இருக்காது, மென்மையாக பழகுவார்கள்.

இப்படிப்பட்ட ஆணைக் காதலிக்க பெண்களுக்கு கசக்குமா என்ன? அதை விட அமிதாப் பச்சன் என்பதால் நான் உடனே இந்தக் கேரக்டரில் நடிக்கஒப்புக் கொண்டு விட்டேன்.

எனக்கு இந்தப் படத்தின் மூலம் பெரும் பெயர் கிடைக்கும். அத்தனை ஹீரோயின்களும் என்னைப் பார்த்து பொறாமைப்படப் போகிறார்கள்பாருங்கள் என்று ஜில்லென பேசி கண் சிமிட்டி கலாய்க்கிறார் ஜியா.

நடிப்பைப் பார்த்து மட்டுமா பொறமைப்படப் போகிறார்கள், ஜியாவின் வனப்பைப் பார்த்தும் வயிறு எரியப் போகிறார்கள்!

Read more about: jiah khanamithab in nisabath

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil