அடேங்கப்பா.. ரூ. 17 லட்சத்திற்கு ஃபேன்ஸி நம்பர் வாங்கிய ஜூனியர் என்.டி.ஆர்.. காரின் விலை தெரியுமா?

ஹைதராபாத்: இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ள நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ. 17 லட்சத்திற்கு ஃபேன்ஸி நம்பர் பிளேட்டை வாங்கி உள்ளாராம்.

உலகிலேயே அதிவேகமாக ஓடக் கூடிய லம்போர்கினி காரை வாங்கி உள்ள ஜூனியர் என்.டி.ஆர் அந்த காருக்காகத் தான் இப்படியொரு விலை கொடுத்து ஃபேன்ஸி நம்பரை வாங்கி உள்ளாராம்.

சொகுசு கார்கள் மீது அளவற்ற ஆர்வம் கொண்டுள்ள ஜூனியர் என்.டி.ஆரிடம் ஏகப்பட்ட விலையுயர்ந்த கார்களும் உள்ளன.

17 லட்சத்திற்கு நம்பர் பிளேட்

17 லட்சத்திற்கு நம்பர் பிளேட்

நாடு முழுவதும் ஜூனியர் என்.டி.ஆரின் புதிய நம்பர் பிளேட் விலையை பற்றித் தான் ஒரே பேச்சாக உள்ளது. ஒரு நம்பர் பிளேட்டுக்கு ரூ. 17 லட்சம் செலவழித்துள்ளாரே அப்படி என்ன ஃபேன்சி நம்பர் அது என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

என்ன நம்பர்

என்ன நம்பர்

'TS09 FS 9999' எனும் ஃபேன்சி நம்பருக்காகத் தான் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ. 17 லட்சத்தை தண்ணி போல செலவழித்து உள்ளதாக தெலுங்கானாவின் போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 17 லட்சம் ரூபாய்க்கு நம்பர் பிளேட் வாங்குகிறார் என்றால், அப்போ அவருடைய சொகுசு காரின் விலை எவ்வளவு இருக்கும் என்கிற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்கிறது.

லம்போர்கினி விலை என்ன

லம்போர்கினி விலை என்ன

Lamborghini Urus Graphite Capsule எனும் பிரத்யேக சொகுசு காரை கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ. 3.16 கோடிக்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் வாங்கி உள்ளாராம். ஏற்கனவே ஏகப்பட்ட சொகுசு கார்கள் உள்ள நிலையில், உலகின் அதிவேகமான சொகுசு கார் மீது கொண்ட ஆசையால் இந்த காரை வாங்கி இருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்

3.6 நொடிகளில்

3.6 நொடிகளில்

வெறும் 3.6 நொடிகளில் 0-100 கி.மீ வேகத்துக்கு செல்லக் கூடிய ஆற்றல் இந்த லம்போர்கினி சொகுசு காருக்கு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 12.8 நொடிகளில் 200 கி.மீ வரை வேகம் செல்லுமாம். அதிகபட்சமாக 305 கி.மீ வேகத்தில் மின்னல் போல சீறிப் பாயும் சொகுசு காரை தான் சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் வாங்கி உள்ளார்.

கொமரம் பீம்

கொமரம் பீம்

ஆர்.ஆர்.ஆர் படத்தில் கொமரம் பீம் கதாபாத்திரத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார். ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்துள்ள நிலையில், இவருக்கு ஜோடி ஹாலிவுட் நடிகையா? அல்லது ஜோடியே இல்லையா? என்கிற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கேஜிஎஃப் இயக்குநருடன்

கேஜிஎஃப் இயக்குநருடன்

ஆர்.ஆர்.ஆர் படத்தை முடித்து விட்டு நடிகர் ராம்சரண் அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் புதிய படத்தின் பூஜையை போட்டு விட்டார். ஜூனியர் என்.டி.ஆர் அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க பிளான் போட்டு வருகிறார். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராம்சரண் கார்

ராம்சரண் கார்

இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து வரும் ஜூனியர் என்.டி.ஆர் மட்டுமல்ல சமீபத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் பிரபல டோலிவுட் நடிகருமான ராம்சரணும் மெர்சிடஸ் மேபேச் (Mercedes Maybach GLS600) எனும் சொகுசு கார் ஒன்றை ரூ. 4 கோடிக்கு வாங்கி உள்ளார்.

பொங்கலுக்கு வருமா

பொங்கலுக்கு வருமா

பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கியுள்ள பிரம்மாண்ட படைப்பான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்த அக்டோபருக்கு ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மகேஷ் பாபுவின் சர்காரு வாரிபட்டாவும் பொங்கல் போட்டியில் கலந்து கொள்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X