»   »  ஜூ. சில்க்குக்கு கல்யாணம்!

ஜூ. சில்க்குக்கு கல்யாணம்!

Subscribe to Oneindia Tamil

மினி கிளாமர் பாம் ஜூனியர் சில்க் கல்யாணம் கட்டிக் கொண்டு செட்டிலாகப் போகிறார்.

காந்த விழிகள், கணகண தேகம், பரபர ஆட்டம் என குத்தாட்டத்துக்கு புது வேகம் கொடுத்து ஆடிக்கலக்கியவர்தான் ஜூனியர் சில்க். டான்ஸ் இரட்டையர்களான லலிதா, மணி தம்பதியின் மகள்தான் இந்தஜூனியர் சில்க்.

ஜூ.சியின் இயற்பெயர் ரேகா. ஆனால் சில்க் ஸ்மிதா போன்ற பளபளப்பிலும், கெட்டப்பிலும் இருந்ததால்இவருக்கு ஜூனியர் சில்க் என்று நாமகரணம் சூட்டி ரசிகர்களை மகிழ்விக்க சினிமாவில் இறக்கினர் லலிதா-மணி.

எடுத்த எடுப்பிலிருந்தே குத்தாட்டத்திலேயே முழுமையாக தன்னை அர்ப்பணித்து விட்ட ஜூ.சி. பல படங்களில்குமுக்காட்டம் போட்டுள்ளார். முன்பு போல அவருக்கு இப்போது ஆட்டத்துக்கான வாய்ப்புகள் குதிராததால்கல்யாணம் செய்து வைக்க அப்பாவும், அம்மாவும் முடிவு செய்தனர்.

அவர்களின் தேடலில் கிடைத்தது ஒரு வக்கீல் மாப்பிள்ளை. சென்னையைச் சேர்ந்த ராஜேந்திரன், கிரிஜாதம்பதியின் மகனான மதன்குமாருக்கும், ஜூனியர் சில்க்குக்கும் வருகிற 31ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

சென்னை மேற்கு அண்ணா நகரில் உள்ள எஸ்.எஸ்.ராயல் கல்யாண மஹாலில் திருமணம் நடைபெறுகிறது.

முதல் நாள் மாலை இசையமைப்பாளர் தேவா குழுவின>ன் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திரையுலகினருக்கு லலிதா-மணி தம்பதியினர் திருமண அழைப்பிதழைக் கொடுக்கும் பணியில் மும்முரமாகஈடுபட்டுள்ளனர்.

கங்க்ராட்ஸ்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil