»   »  ஜூனியர் சில்க் இலக்கிய விழா !!! போட்டுத் தாக்கும் ஜூனியர் சில்க்

ஜூனியர் சில்க் இலக்கிய விழா !!! போட்டுத் தாக்கும் ஜூனியர் சில்க்

Posted By:
Subscribe to Oneindia Tamil
போட்டுத் தாக்கும் ஜூனியர் சில்க்

தஞ்சாவூரில் இலக்கியம் செய்கிறோம் பேர்வழி என்ற பெயரில் நடிகைளின் குத்தாட்ட நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சை சங்கத் தமிழ்க் கழகம், மருதப்பர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து பொங்கலை முன்னிட்டு கலை, இலக்கியதிருவிழாவை நடத்தின.

கலை, இலக்கியம் என்று சொல்லப்பட்டாலும் முழுக்க முழுக்க சினிமா ஆட்களே மேடையையும் நிகழ்ச்சிகளையும்ஆக்கிரமித்திருந்தனர்.

நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக பங்கேற்றவர் சசிகலாவின் கணவர் நடராஜன்.

விந்தியா, ஜூனியர் சில்க், சுபிக்ஷா என மலே மலே ரக நடிகைகளும் இடம் பிடித்திருந்தனர். மேடையில் இவர்கள் கொஞ்சமேகொஞ்சமான உடையில் கும்மாங்குத்து ஆட்டம் போட்டனர்.

இலக்கிய ரசனையில் நடராஜன் (வட்டத்துக்குள்), விஐபிக்கள்

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா என்ற பாடலுக்கு உடலையும் முகத்தையும் மடக்கி மடக்கி லாவகம் காட்டி விந்தியாபோட்ட ஆட்டத்தில் எல்லோருமே கிறுகிறுத்தனர்.

அடுத்து வந்த சுபிக்ஷா, வச்சுக்கவா வச்சுக்கவா இடுப்புல என்று இலக்கியத் தரமான பாடலுக்கு கமுக்கு ஆட்டம் போட்டார்.

ஜூனியர் சில்க்கோ என் ஆச மைதிலியே பாடலுக்கு டி.ராஜேந்தரை விட அதிகமாகக் குலுங்கி ஆடினார். இந்த குலுக்குஆட்டங்களை நடராஜனும், பாலபிரஜாபதி அடிகளாரும் முன் வரிசையில் அமர்ந்து ரசித்து குஷித்தனர். விந்தியா ஆடியபோதுவிஐபிக்கள் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சியைக் காண முடிந்தது.

ஜூனியர் சில்க் மூலம் இலக்கியம் வளர்க்க பாடுபட்டவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil