»   »  அம்மாவாகிறார் ஜோதிகா!

அம்மாவாகிறார் ஜோதிகா!

Subscribe to Oneindia Tamil

புதுமணத் தம்பதிகளான ஜோதிகாவும், சூர்யாவும் இன்னும் பத்து மாதங்களில் அப்பா,அம்மா ஆகப் போகிறார்களாம். ஜோதிகா இப்போது முழுகாமல் இருக்கிறாராம்.

சூர்யாவும், ஜோதிகாவும் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு அவர்களைப் பற்றிஏகப்பட்ட செய்திகள். கல்யாணச் செய்தி கன்பார்ம் ஆன பிறகும் கூட தினசரிசெய்திகளுக்குப் பஞ்சமே இல்லை. இப்போது கல்யாணமாகிப் போன பிறகும் கூடஅவர்களைப் பற்றிய செய்திகளுக்கு ஓய்வே இல்லை.

கல்யாணத்திற்குப் பிறகு ஓரிரு நிகழ்ச்சிகளுக்கு ஜோவையும் கூட்டிக் கொண்டுபோயிருந்தார் சூர்யா. ஆனால் இப்போதெல்லாம் ஜோ கூட வருவதில்லையாம்.சூர்யாவுடன் போனால் அவருக்குரிய முக்கியத்துவத்தை புகைப்படக்காரர்கள்குறைத்து விடுகிறார்கள், வளைத்து வளைத்து தன்னையே புகைப்படம் எடுக்கிறார்கள்என்பதால்தான் கணவருடன் வெளி நிகழ்ச்சிகளுக்கு வருவதை ஜோ குறைத்துக்கொண்டார் என்று கூறப்பட்டது.

ஆனால் உண்மையான காரணம் வேறயாம். அதாவது ஜோதிகா கர்ப்பமாகஇருக்கிறாராம். இன்னும் பத்து மாதங்களுக்குள் ஒரு முத்துப் பிள்ளையைப்பெற்றெடுக்கப் போகிறாராம். இதனால் சிவக்குமார் குடும்பமே குதூகலமாகியுள்ளது.

இந்தக் காரணத்தினால்தான் ஜோதிகா முன்பு போல வெளியில் தலை காட்டாமல்வீட்டோடு அடங்கியிருக்கிறாராம். மேலும், வீட்டில் பூஜை, புணஸ்காரம் என்றுமாமியாரை அசத்தி வருகிறாராம். மும்பைப் பெண்ணாக இருந்தாலும் ஜோதிகா,அப்படியே அச்சு அசல் தமிழ்க் கலாசத்தைக் கட்டிக் காப்பதாக சிவக்குமாரும்,மனைவி லட்சுமியும் பூரித்துப் போயுள்ளனராம்.

ஜோ குறித்த இன்னொரு செய்தி. அவர் நடித்துள்ள மொழி படம் குறித்துத்தான்இப்போது கோலிவுட்டில் ஹாட் பேச்சு. கல்யாணத்திற்கு முன்பு நடித்த படம் இது.ராதாமோகன் இயக்கியுள்ள இப்படத்தில் வாய் பேச முடியாத, காது கேளாதபெண்ணாக நடித்துள்ளார் ஜோதிகா.

இந்தக் கேரக்டருக்காக நிஜமாகவே வாய் பேச முடியாத, காது கேளாத ஒருபெண்ணை வரவழைத்து அவரிடம் பயிற்சி பெற்றாராம் ஜோதிகா. நிஜப்பெண்மணியைப் போலவே ஜோதிகாவும் இப்படத்தில் நடித்துள்ளாராம்.

இந்தப் படத்திற்காக ஜோதிகாவுக்கு நிச்சயம் தேசிய விருது உறுதி என்று மொழியூனிட் அடித்துக் கூறுகிறதாம்.

அப்ப இரட்டைப் பரிசு!

Read more about: jyothika pregnant
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil