»   »  வாவ் ஜோ, சூர்யா!

வாவ் ஜோ, சூர்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகள் குறித்த விழிப்புணர்வுப் படத்தில்சூர்யாவும், ஜோதிகாவும் இலவசமாக நடித்துக் கொடுத்துள்ளனர்.

ஆட்டிசம் என்ற மன வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள்பெருகி வருகிறது. இதுபோன்ற குழந்தைகளுக்காக சென்னை நீலாங்கரையில், வீகேன்என்ற அமைப்பு உள்ளது.

இந்த அமைப்பின் சார்பில் ஆட்டிசம் குறைபாடு குறித்த விழிப்புணர்வுப் படம் ஒன்றுதயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நடித்துக் கொடுக்க வேண்டும் என இந்த அமைப்பின்நிர்வாகிகள் சூர்யா, ஜோதிகாவை அணுகியுள்ளனர்.

அவர்கள் உடனே இலவசமாகவே நடித்துக் கொடுக்க முன் வந்தனராம்.

இதையடுத்து நீலாங்கரையில் உள்ள இந்த அமைப்பின் பயிற்சிப் பள்ளிக்குசூர்யாவும், ஜோதிகாவும் வந்தனர். அங்கு பயிற்சி பெற்று வரும் 4 வயது முதல் 12வயது வரையிலான ஆட்டிசம் குறைபாடு கொண்ட குழந்தைகளுடன் அவர்கள்இணைந்து நடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.

இதுதவிர ஆட்டிசம் குறைபாடு கொண்டவர்களிடம் எப்படி அணுக வேண்டும்,அவர்களுக்காக எப்படியெல்லாம் நாம் தியாக மனப்பான்மையுடன்செயல்படவேண்டும் என்பது குறித்து இருவரும் விளக்குவது போலவும் காட்சிகள்படமாக்கப்பட்டன.

பி.சி.ஸ்ரீராம் இந்தக் காட்சிகளை படம் பிடித்தார். ஜெயேந்திரா பஞ்சாபகேசன்இயக்கினார்.

இந்த குறும்படம், ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தபெ>தும் உதவும் என வீகேன் அமைப்பின் நிர்வாகிகள் ஹேமமாலினி, கீதா ஆகியோர்தெரிவித்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil