»   »  ஜோ. படத்துக்கு நோ கட்!

ஜோ. படத்துக்கு நோ கட்!

Subscribe to Oneindia Tamil

ஜோதிகா வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணாக நடித்துள்ள மொழி படத்திற்கு எந்த கட்டும் கொடுக்காமல் சான்றிதழ் கொடுத்துள்ளதாம்தணிக்கை வாரியம்.

கல்யாணத்திற்கு முன் பாதியும், பின் மீதியுமாக ஜோதிகா நடித்த படம் மொழி. காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணாக இந்தப் படத்தில்நடித்து அசத்தியுள்ளார் ஜோதிகா.

பிரகாஷ் ராஜின் சொந்தத் தயாரிப்பான இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார். ஜோதிகா தவிர பிருத்வி ராஜ், சொர்ணமால்யா ஆகியோரும்நடித்துள்ளனர். படம் முடிவடைந்து விட்டது. பாடல்களும் சமீபத்தில் வெளியாகின.

இந்த நிலையில் படத்தை தணிக்கைச் சான்றிதழுக்காக அனுப்பினர். படத்தை தணிக்கைக் குழுவினர் பார்த்து அசந்து விட்டனராம். குறிப்பாகஜோதிகாவின் நடிப்பைப் பார்த்து மெய் சிலிர்த்தனராம்.

இந்தப் படம் அப்படியே வர வேண்டும் என்று கூறிய அவர்கள் ஒரு கட் கூட சொல்லாமல் படத்துக்கு யு சான்றிதழ் கொடுத்தார்களாம். இந்தப் படம்நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இளைஞர்களுக்கான படம் இது. ஜோதிகாவின் கதாபாத்திரம் மிகச் சிறப்பாக,உயிரோட்டத்துடன் உள்ளது என்று பாராட்டியும் உள்ளனர்.

படத்தின் கதை இதுதான். காது கேளாத, வாய் பேச முடியாத ஜோதிகாவை அவரது தந்தைக்குப் பிடிக்கவில்லை. அவரையும், பெற்ற குற்றத்திற்காகமனைவியையும் விட்டுப் பிரிகிறார். இந்த வேதனையில் தாயும் இறந்து போகிறார்.

அனாதையாகும் ஜோதிகாவுக்கு, தந்தையின் செயலால் ஆண் வர்க்கத்தின் மீதே வெறுப்பு வருகிறது. ஒரு வித வெறுப்பு அவரைச் சுற்றிச் சூழ்ந்துகொள்கிறது. காது கேளாதோர், வாய் பேச முடியாதோருக்கான பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார் ஜோதிகா.

ஆண் வெறுப்பில் ஊறிப் போன ஜோதிகா மீது இசைக் கலைஞரான பிருத்விராஜுக்கு காதல் பிறக்கிறது. அந்தக் காதலை ஜோதிகா ஏற்கிறாரா,இல்லையா என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் சொர்ணமால்யா இளம் விதவையாக வருகிறார். அவரை காதலிப்பவராக பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil