»   »  ஜோ நடிப்பு-டென்ஷன் டென்ஷன்!

ஜோ நடிப்பு-டென்ஷன் டென்ஷன்!

Subscribe to Oneindia Tamil

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஆண்களை வீழ்த்தி பணம் பறிக்கும் பெண்ணாக நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ஜோதிகா, மொழி படத்தில் படுஅற்புதமான நடிப்பை வெளிக்காட்டி அசத்தி விட்டார்.

காது கேளாத, வாய் பேச முடியாத ஊமைப் பெண்ணாக இதில் நடித்துள்ளார் ஜோதிகா. இப்படத்தின் முதல் சீனிலிருந்து கடைசி சீன் வரையும்,ஜோதிகாவின் ராஜ்ஜியம்தான். படு அமைதியாக, அதேசமயம் ஆர்ப்பாட்டமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஜோதிகா.

இப்படத்தின் பிரிமீயர் ஷோ, சென்னையில் உள்ள ஐநாக்ஸ் மல்ட்டிபிளக்ஸ் வளாக திரையரங்கில் போடப்பட்டது. பத்திரிக்கை உலகிலும்,திரையுலகினரும் பெரும் கூட்டமாக வந்து மொழியைப் பார்த்து ஜோதிகாவின் நடிப்பைக் கண்டு வியந்தனர்.

ஜோதிகாவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தன்னைப் பாராட்டியவர்களுக்கு கண்ணில் நீர் துளிக்க நன்றி தெரிவித்தார். படத்தின் தயாரிப்பாளரானபிரகாஷ் ராஜ், இது ஜோவின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படம். அவரது முழுத் திறமையையும் வெளிக் கொண்டு வர இந்தப் படம்உதவியது என்பதில் எனக்கு பெருமை என்றார்.

என்ன பாராட்டி என்ன, ஜோதான் மீண்டும் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாரே!

இதே ஜோதிகா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் போட்ட வேஷமும், அதற்கு தியேட்டரில் ரசிகர்கள் போட்ட கோஷமும், ஜோ ரசிகர்களுக்குடென்ஷனாக்கி விட்டதாம்.

விபச்சாரப் பெண்ணாகவும், தன்னுடன் பழக்கம் வைத்துக் கொள்ளும ஆண்களை புருஷன் மூலமாக மிரட்டிப் பணம் பறிக்கும் பலே பெண்ணாகநடித்துள்ளார் ஜோதிகா.

ஜோதிகாவின் இந்த கேரக்டர் சூர்யா குடும்பத்தினரை மிகவும் சங்கடத்திற்குள்ளாக்கி விட்டதாம். இப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி ஏற்பாடுசெய்யப்பட்டபோது, சிவக்குமார் தனது குடும்பத்தோடு படத்தைப் பார்க்க வந்திருந்தார்.

வழக்கமாக ஏதாவது ஒரு பிரிவியூ தியேட்டரில்தான் படத்தைப் போடுவார்கள். ஆனால் இந்த முறை வித்தியாசமாக இருக்கட்டுமே என்றுவழக்கமான தியேட்டரில் போட்டு விட்டனர். அங்குதான் பிரச்சினாைகி விட்டது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஜோதிகாவைப் பற்றி அடித்த காமென்ட்டுகளைக் கேட்டு டீசண்டான சிவக்குமார் குடும்பம் தர்மசங்கடபட்டதாம்.இருக்கையில் உட்கார முடியாமல் நெளிந்தபடியேதான் படத்தைப் பார்த்தார்களாம்.

பச்சைக்கிளி முத்துச்சரத்தால் புண்பட்ட சிவக்குமார் குடும்பத்தை, மொழி மூலம் காம்பன்சேட் செய்து விட்டார் ஜோ.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil