»   »  பளிச் பளிச் ஜோ!

பளிச் பளிச் ஜோ!

Subscribe to Oneindia Tamil

கல்யாணத்திற்கு முன்பு ஒத்துக் கொண்டு, கல்யாணமான பிறகும் நடித்து முடித்துக் கொடுத்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் படு ஜில்லான காட்சிகளில் ஜோதிகா நடித்துள்ளார். ஆனால், இவையெல்லாம் கல்யாணத்துக்கு முன் எடுக்கப்பட்ட காட்சிகளாம்.

சூர்யாவுடன்தான் ஜோதிகா அதிக படங்களில் இணைந்து நடித்துள்ளார். அதேபோல கெளதம் மேனன் இயக்கத்தில்தான் அவர் அதிக படங்களில் நடித்துள்ளார்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் ஆகியவை கெளதம் இயக்கத்தில் ஜோ நடித்த படங்கள். இதில் முதல் இரு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். முதல் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி, 2வது படத்தில் கமலுடன் இணைந்தார் ஜோ.

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருடன் ஜோடி போட்டுள்ளார். படம் முடிவடைந்து ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இப்படத்தில் சூப்பரான மேக்கப் ஜோவுக்கு. பார்த்தவுடனேயே பளிச்சென ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு புது மெருகோடு படம் முழுக்க வருகிறார் ஜோ.

அத்தோடு சரத்குமாருடன் இணைந்து சில இன்டிமேட் காட்சிகளிலும் கலக்கியுள்ளார் ஜோ. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜோதிகாவின் கல்யாணத்திற்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டன. சில காட்சிகளைத் தான் கல்யாணத்திற்குப் பிறகு நடித்துக் கொடுத்தாராம். அவையெல்லாம் மிக டீசண்டாகவே எடுக்கப்பட்டனவாம்.

ஒரு பாடல் காட்சியில் சொக்க வைக்கும் கிளாமர் அசைவுகளைக் காட்டியுள்ளாராம் ஜோதிகா. அட, நம்ம ஜோதிகாவா இப்படி என்று புருவம் உயர்த்த வைக்கும் அளவுக்கு நடித்துள்ளார் ஜோ. இந்த ஸ்டில்கள் சமீபத்தில் வெளியானபோது சிவக்குமார் குடும்பத்தினர் அப்செட் ஆகினர் என்கிறார்கள்.

நெருக்கமான காட்சிகளின் ஸ்டில்களை வெளியிட வேண்டாம் என சூர்யாவும், ஜோதிகாவும், சரத்திடமே பெர்சனலாக கேட்டுக் கொண்டிருந்தார்களாம். ஆனாலும் அதையும் மீறி அவை வெளி வந்தது அவர்களுக்கு கடுப்பாகி விட்டதாக சொல்கிறார்கள்.

படத்தில் ஆண்ட்ரியாவுடனும் சரத் ஓவரான உஷ்ணம் காட்டியுள்ளாராம் சரத் குமார்.

இதேபோல ஜோ நடித்துள்ள மொழி படமும் படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இனிமேல் ஜோ நடிக்க மாட்டார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது விளம்பரப் படங்களில் நடிக்கப் போகிறாராம் ஜோ. இதுதொடர்பாக சில ஒப்பந்தங்களிலும் அவர் கையெழுத்திட்டுள்ளாராம்.

தற்போது கர்ப்பமாக உள்ள ஜோதிகா, குழந்தை பிறந்ததும் சூர்யாவுடன் தனிக்குடித்தனம் போக முடிவு செய்துள்ளாராம்.

இப்போதே தனிக்குடித்தனம் போகத்தான் முதலில் சூர்யா திட்டமிட்டிருந்தாராம். ஆனால் சிவக்குமார்தான், பிள்ளை பிறக்கும் வரை நகரக் கூடாது, பேரனையோ, பேத்தியையோ பெற்றுக் கொடுத்து விட்டு நீங்கள் போய்க் கொள்ளுங்கள், அதுவரை ஜோதிகாவை கவனித்துக் கொள்ள வேண்டிய நம் குடும்பத்தின் பொறுப்பு என்று கூறி விட்டாராம்.

தந்தை சொல் மிக்க மந்திரம் உண்டோ?

Read more about: jyothika to do advt films
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil