»   »  ஜோ கோபம்-ஷூட்டிங் கேன்சல்

ஜோ கோபம்-ஷூட்டிங் கேன்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மொழி படத்தின் ஷூட்டிங்குக்காக ஒரு நாள் கால்ஷீட் கொடுத்திருந்த ஜோதிகா,மேக்கப்மேன் வராததால் கோபமடைந்து ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளிநடப்புச்செய்தார்.

சூர்யாவைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பு ஜோதிகா நடித்து வந்த படம்மொழி. இந்தப் படத்தை ராதாமோகன் இயக்குகிறார். இப்படத்தின் சில காட்சிகள்மற்றும் பாடல் காட்சியில் ஜோதிகா நடிக்க வேண்டியிருந்தது பாக்கி இருந்தநிலையில், அவருக்கு கல்யாணம் ஆகி விட்டது.

இருப்பினும், கல்யாணத்திற்குப் பிறகு இந்தக் காட்சிகளை முடித்துக் கொடுப்பதாகஉறுதியளித்திருந்தார் ஜோதிகா. சொன்னபடியே கல்யாணம், தேனிலவு, தலைதீபாவளி எல்லாவற்றையும் முடித்து விட்டு மொழி படத்தில் தான் சம்பந்தப்பட்டமிச்சக் காட்சிகளை நடித்துக் கொடுத்தார் ஜோதிகா.

சமீபத்தில் மொரீஷீயஸில் ஜோதிகா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியைப் படமாக்கினர்.இந் நிலையில், சொச்சக் காட்சிகளை முடிக்க அடிசனலாக ஒரு நாள் கால்ஷீட்கொடுத்திருந்தார் ஜோதிகா. இதற்காக ஏவி.எம். ஸ்டுடியோவுக்கு ஜோ வந்தார்.

இப்படத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணாக ஜோதிகா நடிக்கிறார்.இதற்காக சிறப்பு மேக்கப் போட மும்பையிலிருந்து மேக்கப்மேனுக்கு ஏற்பாடுசெய்திருந்தனர். ஜோதிகா வந்து நெடு நேரமாக காத்திருந்தபோதும், மேக்கப் மேன்வருவதாக தெரியவில்லை.

பொறுத்துப் பார்த்த ஜோதிகா ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தார். இதற்கு மேலும்என்னால் காத்திருக்க முடியாது என்று கடுப்பாக சொல்லியபடி கிளம்பி காரில் ஏறிவீட்டுக்குப் பறந்து விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் ராதா மோகன், வேறு வழியில்லாமல்அன்றைய ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு பின்னாலேயே ஜோதிகா வீட்டுக்குஓடினார்.

அங்கு ஜோதிகாவிடம் ஸாரி சொல்லிய அவர் பெரிய மனது பண்ணி இன்னும் ஒரேஒரு நாள் மட்டும் கால்ஷீட் கொடுங்கள், எப்படியும் அன்றைக்குள் உங்களதுகாட்சிகளை முடித்து விடுகிறோம் என்று கோரியுள்ளார். மனம் இறங்கிய ஜோதிகா சரிஎன்று சொல்லியிருக்கிறாராம்.

அப்போதாவது குழப்பம் இல்லாமல் ஷூட்டிங் நடக்கட்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil