»   »  கொழுந்தன் பட விழாவில் ஜோ

கொழுந்தன் பட விழாவில் ஜோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யாவின் தம்பியும், கொழுந்தனாருமான கார்த்தி நடித்துள்ள பருத்தி வீரன் படஆடியோ கேசட் விழாவில் சூர்யாவுடன், ஜோதிகாவும் கலந்து கொண்டார்.கல்யாணத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து கலந்து கொண்ட முதல் திரைப்படநிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் தம்பியான கார்த்தி, அமீரின் இயக்கத்தில் பருத்திவீரன் படம் மூலம்நடிகராக அவதாரம் எடுக்கிறார். இப்படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு விழாசென்னையில் நேற்று நடந்தது.

இவ்விழாவில், சிவக்குமாரின் மனைவி, அவர்களது மகள் பிருந்தா, அவரது கணவர்,சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், சிவக்குமார் மட்டும்ஆப்சென்ட்.

திருமணத்திற்குப் பின்னர் கணவர் சூர்யாவுடன், ஜோதிகா முதல் முறையாக கலந்துகொண்ட சினிமா நிகழ்ச்சி இது. சூர்யாவும், ஜோதிகாவும் ஒரே மாதிரி நீல நிறத்திலானஆடையில் வந்திருந்த அத்தனை பேரின் கவனத்தையும் கவர்ந்தனர்.

விஜய், ஜெயம் ரவி, ஜீவா, சாந்தனு பாக்யராஜ் உள்ளிட்ட இளம் ஹீரோக்களையும்நிகழ்ச்சியில் காண முடிந்தது. பருத்தி வீரன் பாடல்களில் இதுவரை இல்லாதஅளவுக்கு வித்தியாசமாக இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.

ஃபாஸ்ட் பீட்டுகளையும், மெலடிகளையும் மட்டுமே கொடுத்து வந்த யுவன்,இப்படத்தில் கிராமப்புற கீதங்களுக்குத் தாவியுள்ளார். படத்தில் உள்ள 5பாடல்களுமே கிராமப்புற மெட்டுக்கள்தான். அத்தனையும் படு வித்தியாசமாகஉள்ளது.

இதுகுறித்து யுவன் கூறுகையில், இந்தப் படம் கிராமப்புற பேக்ரவுண்ட் என்பதால்அதற்கேற்க நாட்டுப்புற மெட்டுக்களில் பாடல்களை அமைத்துள்ளேன். எல்லோரும்வித்தியாசமாக இருக்கிறது என்றார்கள். எனக்கேக் கூட வித்தியாசமாகத்தான் உள்ளது.நிச்சயம் ரசிகர்கள் இதையும் வரவேற்பார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை பேரும் புது மாப்பிள்ளை (சினிமாவுக்கு!)கார்த்தியை பாராட்டி, பல அறிவுரைகளையும் வழங்கித் தள்ளி விட்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil