»   »  மீண்டும் சூர்யா- ஜோதிகா இயக்குனர் வஸந்தின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஆரம்பித்த ஜோடி இது.அடுத்தடுத்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி என்று தொடர்ந்து ஜோடி சேர்ந்து இப்போது அடுத்தும் ஒருபடத்திலும் சேரப் போகிறது.படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் ஜோடி சேரப் போகிறவர்கள் என்று சின்னக் குழந்தையும் சொல்லும்.ஆனால், இதைப் பற்றி சூர்யாவிடம் கேட்டால், உதட்டுக்கே வலிக்காமல் ஒரு லேசான புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது.நடிகையை திருமணம் செய்ய சூர்யாவின் தந்தை சிவக்குமார் எதிர்ப்பதாகக் கூறப்பட்டாலும், ஜோதிகாவுடனான தனதுநெருக்கத்தில் சூர்யா தீவிரமாகவே இருக்கிறார்.காக்க.. காக்கவில் மிக அந்யோன்யமாய், கணவன்-மனைவியாய் வாழ்ந்தே காட்டினர். அந்தப் படத்திற்குப் பின் தான்இருவருக்குமான உறவு பலமானது.இந் நிலையில் வீட்டில் எதிர்ப்பு என்ற செய்திகள் வந்தாலும் அதையும் மீறி பேரழகனிலும் அதைத் தொடர்து மாயாவியிலும்ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்தார் சூர்யா. இப்போது மீண்டும் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ண இருக்கிறார்கள்.படத்தின் பெயர், ஜில்லுனு ஒரு காதல். தலைப்பை மகா பொருத்தமாகத் தான் வைத்திருக்கிறார்கள்.இந்தப் படத்தை இயக்கப் போவது கிருஷ்ணா என்ற புதுமுக டைரக்டர். இவர் காக்க.. காக்க கெளதமிடம் உதவியாளராகஇருந்தவர்.படத்தைத் தயாரிக்கப் போவது சூர்யாவின் உறவினர் ஒருவர் தான். இதனால் ஹீரோயின் ஜோதிகா தான் என்று யார் முடிவுசெய்திருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.இப்போது கஜினி படத்தில் பிஸியாக இருக்கிறார் சூர்யா. அதை முடித்துவிட்டு இந்தப் படத்தில் கமிட் ஆவார் என்கிறார்கள்.அதே போல இப்போது கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார் ஜோதிகா. உடலைகொஞ்சம் குறைக்கச் சொல்லி கமல் ரிக்வெஸ்ட் செய்துள்ளாராம். இதனால் உடலைக் குறைக்கும் வேலையில் தீவிரமாகஇருக்கிறார் ஜோ.சந்திரமுகியால் நடிப்பில் புதிய உச்சத்தை எட்டிவிட்ட ஜோதிகா, கமல் படத்தை முடித்துவிட்டு சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரப்போகிறார்.இதற்கிடையே எக்கச்சக்கமான பணப் பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ள ரம்பா சமீபத்தில் ஜோவிடம் வந்து உதவிகோரினாராம். ஆனால், அவருக்கு அரசியல்வாதிகள் மாதிரி ஒரு பெரிய கும்பிடு போட்டு திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்ஜோதிகா.நடித்து, ஆடிப் பாடி கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தைப் போட்டு த்ரீ ரோஸஸ் என்ற தேவையில்லாத ஒரு படத்தை ரொம்பவேகமாக தயாரித்த ரம்பா, இப்போது படு நொம்பலத்தில் உள்ளார்.படம் பாதியிலேயே பைனனாஸ் பிரச்சினையால் தள்ளாட, ஆத்ம நண்பர் கோவிந்தா மற்றும் ஏகப்பட்ட இடங்களில் கடன் வாங்கிவைத்திருந்தார் ரம்பா. இப்போது கடன் கொடுத்தவர்களின் நெருக்குதலால் வெளியில் தலை காட்டவே முடியாத அளவுக்குவீட்டோடு முடங்கியுள்ளாராம் ரம்பா.தனது படத்தில் நடித்த ஜோதிகாவுக்கும், லைலாவுக்கும் பெரிய சம்பளத்தைக் கொடுத்ததால் தான் இவ்வளவு பெரியநஷ்டத்துக்கு ஆளாகிவிட்டதாகக் கூறும் ரம்பா, இப்போது மிகவும் கஷ்டப்படுவதால் உதவுமாறு கோரி ஜோதிகாவைஅணுகியுள்ளார்.ஆனால் ஸாரி, சொல்லிவிட்டு கழன்று கொண்டாராம் ஜோதிகா. இதனால் அப்செட் ஆகி விரக்தியில் மூழ்கியுள்ளாராம் ரம்பா.

மீண்டும் சூர்யா- ஜோதிகா இயக்குனர் வஸந்தின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஆரம்பித்த ஜோடி இது.அடுத்தடுத்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி என்று தொடர்ந்து ஜோடி சேர்ந்து இப்போது அடுத்தும் ஒருபடத்திலும் சேரப் போகிறது.படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் ஜோடி சேரப் போகிறவர்கள் என்று சின்னக் குழந்தையும் சொல்லும்.ஆனால், இதைப் பற்றி சூர்யாவிடம் கேட்டால், உதட்டுக்கே வலிக்காமல் ஒரு லேசான புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது.நடிகையை திருமணம் செய்ய சூர்யாவின் தந்தை சிவக்குமார் எதிர்ப்பதாகக் கூறப்பட்டாலும், ஜோதிகாவுடனான தனதுநெருக்கத்தில் சூர்யா தீவிரமாகவே இருக்கிறார்.காக்க.. காக்கவில் மிக அந்யோன்யமாய், கணவன்-மனைவியாய் வாழ்ந்தே காட்டினர். அந்தப் படத்திற்குப் பின் தான்இருவருக்குமான உறவு பலமானது.இந் நிலையில் வீட்டில் எதிர்ப்பு என்ற செய்திகள் வந்தாலும் அதையும் மீறி பேரழகனிலும் அதைத் தொடர்து மாயாவியிலும்ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்தார் சூர்யா. இப்போது மீண்டும் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ண இருக்கிறார்கள்.படத்தின் பெயர், ஜில்லுனு ஒரு காதல். தலைப்பை மகா பொருத்தமாகத் தான் வைத்திருக்கிறார்கள்.இந்தப் படத்தை இயக்கப் போவது கிருஷ்ணா என்ற புதுமுக டைரக்டர். இவர் காக்க.. காக்க கெளதமிடம் உதவியாளராகஇருந்தவர்.படத்தைத் தயாரிக்கப் போவது சூர்யாவின் உறவினர் ஒருவர் தான். இதனால் ஹீரோயின் ஜோதிகா தான் என்று யார் முடிவுசெய்திருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.இப்போது கஜினி படத்தில் பிஸியாக இருக்கிறார் சூர்யா. அதை முடித்துவிட்டு இந்தப் படத்தில் கமிட் ஆவார் என்கிறார்கள்.அதே போல இப்போது கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார் ஜோதிகா. உடலைகொஞ்சம் குறைக்கச் சொல்லி கமல் ரிக்வெஸ்ட் செய்துள்ளாராம். இதனால் உடலைக் குறைக்கும் வேலையில் தீவிரமாகஇருக்கிறார் ஜோ.சந்திரமுகியால் நடிப்பில் புதிய உச்சத்தை எட்டிவிட்ட ஜோதிகா, கமல் படத்தை முடித்துவிட்டு சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரப்போகிறார்.இதற்கிடையே எக்கச்சக்கமான பணப் பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ள ரம்பா சமீபத்தில் ஜோவிடம் வந்து உதவிகோரினாராம். ஆனால், அவருக்கு அரசியல்வாதிகள் மாதிரி ஒரு பெரிய கும்பிடு போட்டு திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்ஜோதிகா.நடித்து, ஆடிப் பாடி கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தைப் போட்டு த்ரீ ரோஸஸ் என்ற தேவையில்லாத ஒரு படத்தை ரொம்பவேகமாக தயாரித்த ரம்பா, இப்போது படு நொம்பலத்தில் உள்ளார்.படம் பாதியிலேயே பைனனாஸ் பிரச்சினையால் தள்ளாட, ஆத்ம நண்பர் கோவிந்தா மற்றும் ஏகப்பட்ட இடங்களில் கடன் வாங்கிவைத்திருந்தார் ரம்பா. இப்போது கடன் கொடுத்தவர்களின் நெருக்குதலால் வெளியில் தலை காட்டவே முடியாத அளவுக்குவீட்டோடு முடங்கியுள்ளாராம் ரம்பா.தனது படத்தில் நடித்த ஜோதிகாவுக்கும், லைலாவுக்கும் பெரிய சம்பளத்தைக் கொடுத்ததால் தான் இவ்வளவு பெரியநஷ்டத்துக்கு ஆளாகிவிட்டதாகக் கூறும் ரம்பா, இப்போது மிகவும் கஷ்டப்படுவதால் உதவுமாறு கோரி ஜோதிகாவைஅணுகியுள்ளார்.ஆனால் ஸாரி, சொல்லிவிட்டு கழன்று கொண்டாராம் ஜோதிகா. இதனால் அப்செட் ஆகி விரக்தியில் மூழ்கியுள்ளாராம் ரம்பா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குனர் வஸந்தின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் ஆரம்பித்த ஜோடி இது.

அடுத்தடுத்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி என்று தொடர்ந்து ஜோடி சேர்ந்து இப்போது அடுத்தும் ஒருபடத்திலும் சேரப் போகிறது.

படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் ஜோடி சேரப் போகிறவர்கள் என்று சின்னக் குழந்தையும் சொல்லும்.

ஆனால், இதைப் பற்றி சூர்யாவிடம் கேட்டால், உதட்டுக்கே வலிக்காமல் ஒரு லேசான புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது.

நடிகையை திருமணம் செய்ய சூர்யாவின் தந்தை சிவக்குமார் எதிர்ப்பதாகக் கூறப்பட்டாலும், ஜோதிகாவுடனான தனதுநெருக்கத்தில் சூர்யா தீவிரமாகவே இருக்கிறார்.

காக்க.. காக்கவில் மிக அந்யோன்யமாய், கணவன்-மனைவியாய் வாழ்ந்தே காட்டினர். அந்தப் படத்திற்குப் பின் தான்இருவருக்குமான உறவு பலமானது.

இந் நிலையில் வீட்டில் எதிர்ப்பு என்ற செய்திகள் வந்தாலும் அதையும் மீறி பேரழகனிலும் அதைத் தொடர்து மாயாவியிலும்ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்தார் சூர்யா.

இப்போது மீண்டும் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ண இருக்கிறார்கள்.

படத்தின் பெயர், ஜில்லுனு ஒரு காதல். தலைப்பை மகா பொருத்தமாகத் தான் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்கப் போவது கிருஷ்ணா என்ற புதுமுக டைரக்டர். இவர் காக்க.. காக்க கெளதமிடம் உதவியாளராகஇருந்தவர்.

படத்தைத் தயாரிக்கப் போவது சூர்யாவின் உறவினர் ஒருவர் தான். இதனால் ஹீரோயின் ஜோதிகா தான் என்று யார் முடிவுசெய்திருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

இப்போது கஜினி படத்தில் பிஸியாக இருக்கிறார் சூர்யா. அதை முடித்துவிட்டு இந்தப் படத்தில் கமிட் ஆவார் என்கிறார்கள்.

அதே போல இப்போது கமலுடன் வேட்டையாடு விளையாடு படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார் ஜோதிகா. உடலைகொஞ்சம் குறைக்கச் சொல்லி கமல் ரிக்வெஸ்ட் செய்துள்ளாராம்.

இதனால் உடலைக் குறைக்கும் வேலையில் தீவிரமாகஇருக்கிறார் ஜோ.

சந்திரமுகியால் நடிப்பில் புதிய உச்சத்தை எட்டிவிட்ட ஜோதிகா, கமல் படத்தை முடித்துவிட்டு சூர்யாவுடன் மீண்டும் ஜோடி சேரப்போகிறார்.

இதற்கிடையே எக்கச்சக்கமான பணப் பிரச்சினையில் மாட்டிக் கொண்டுள்ள ரம்பா சமீபத்தில் ஜோவிடம் வந்து உதவிகோரினாராம்.

ஆனால், அவருக்கு அரசியல்வாதிகள் மாதிரி ஒரு பெரிய கும்பிடு போட்டு திருப்பி அனுப்பி வைத்திருக்கிறார்ஜோதிகா.

நடித்து, ஆடிப் பாடி கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தைப் போட்டு த்ரீ ரோஸஸ் என்ற தேவையில்லாத ஒரு படத்தை ரொம்பவேகமாக தயாரித்த ரம்பா, இப்போது படு நொம்பலத்தில் உள்ளார்.

படம் பாதியிலேயே பைனனாஸ் பிரச்சினையால் தள்ளாட, ஆத்ம நண்பர் கோவிந்தா மற்றும் ஏகப்பட்ட இடங்களில் கடன் வாங்கிவைத்திருந்தார் ரம்பா.

இப்போது கடன் கொடுத்தவர்களின் நெருக்குதலால் வெளியில் தலை காட்டவே முடியாத அளவுக்குவீட்டோடு முடங்கியுள்ளாராம் ரம்பா.

தனது படத்தில் நடித்த ஜோதிகாவுக்கும், லைலாவுக்கும் பெரிய சம்பளத்தைக் கொடுத்ததால் தான் இவ்வளவு பெரியநஷ்டத்துக்கு ஆளாகிவிட்டதாகக் கூறும் ரம்பா, இப்போது மிகவும் கஷ்டப்படுவதால் உதவுமாறு கோரி ஜோதிகாவைஅணுகியுள்ளார்.

ஆனால் ஸாரி, சொல்லிவிட்டு கழன்று கொண்டாராம் ஜோதிகா. இதனால் அப்செட் ஆகி விரக்தியில் மூழ்கியுள்ளாராம் ரம்பா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil