»   »  ஜோதிகாவின் மூன்று படங்கள்... சந்திரமுகியைத் தொடர்ந்து தன்னைத் தேடி வந்த தயாரிப்பாளர்களை எல்லாம் கொஞ்சம் வெயிட் பண்ணச் சொன்ன ஜோதிகாமூன்று படங்களை மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளார்.அதில் ஒன்று கமலுக்காக, இன்னொன்று கதைக்காக.. அடுத்தது தனது சூர்யாவுக்காக.கமலும் ஜோதிகாவும் ஜோடி சேர இருந்த வேட்டையாடு விளையாடு படம் சிக்கலில் மாட்டியுள்ளது. அதன் தயாரிப்பாளர்காஜா மொய்தீன் இப்போது தற்கொலை முயற்சியால் மருத்துவமனையில் இருக்கிறார்.இந்தப் படத்தில் ஜோதிகாவுக்கு அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் வேடமாம். படம் வந்தால் தெரியும்.அடுத்ததாக ஜோதிகா ஒப்புக் கொண்டுள்ள படம் ஜூன்.ஆர். தலைப்பு மிக வித்தியாசமாக இருப்பதைப் போலவே கதையும் படுவித்தியாசமாம். நல்ல கதை என்பதால் ஜோதிகா நடிக்க ஒப்புக் கொண்ட படமாம் இது.பெண் இயக்குனர் ரேவதி மேனன் படப்பிடிப்பை ஜெட் வேகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்.இதில் குஷ்பு, சரிதா ஆகியோருடன் ஜோதிகா நடிக்கிறார். ஆம்பிளைகளுக்கு அதிக வேலை இல்லாத படம். குஷ்பு, சரிதா எனமூத்தோரை எல்லாம் நடிப்பில் தூக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் ஜோதிகா என்கிறது இயக்குனரின் வட்டாராம்.தாய்-மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட படம் இது.இதற்கு அடுத்தபடியாக ஜோதிகா ஆசை ஆசையாய் நடிக்கக் காத்திருக்கும் படம் ஜில்லுன்னு ஒரு காதல். இதில் சூர்யாவும்,ஜோதிகாவும் ஜோடி சேருகிறார்கள் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இந்த ஜோடியின் 6வது படமான இதை இயக்குவதுஇயக்குனர் கெளதமின் உதவியாளர் கிருஷ்ணா.ஸ்டுடியோ கிரீன் என்ற நிறுவனம் படத்தைத தயாரிக்கப் போகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரஹ்மான் இசையில்சூர்யா நடிக்கப் போவது இதுவே முதல் முறை. மீண்டும் ஜோவுடன் சேருவது குறித்து சூர்யாவின் காதைக் கடித்தபோது,ஹலோ இதில் விசேஷம் எதுவும் இல்லை. நானும், ஜோவும் சேர்ந்து நடிச்சா நல்லா இருக்கும் என்று இயக்குனர் எதிர்பார்த்தார்.அதனால்தான் நடிக்கிறோம்.காக்க காக்க படத்தின்போதே இந்தக் கதையை கிருஷ்ணா என்னிடம் சொன்னார். யதார்த்தமான ஜோடியாக இந்தப் படத்தின்நாயகன், நாயகி வேண்டும் என்று கிருஷ்ணா எதிர்பார்த்தார். அதற்கு நாங்கள் சரியாக இருப்போம் என்பதால் எங்களைப்போட்டுள்ளார்.செப்டம்பரில் பூஜை. பொங்கலுக்கு ரிலீஸ். இந்தப் படத்தை திானும், ஜோவும் சேர்ந்து தயாரிக்கிறதா சில பேர் வதந்தி கிளப்பிவிட்டிருக்காங்க. அவங்களை திான் தடுக்கலை. சொல்றதை சொல்லிக்கிட்டு இருக்கட்டும். அதுக்குள்ள நாங்க படத்தைமுடிச்சுடுவோம்.ஞானவேல் என்பவர்தான் படத்தைத் தயாரிக்கிறார் (இவர் உங்க சொந்தக்காரராமே??). எனது தம்பி கார்த்தி நடிக்கும் பருத்திவீரன் படத்தையும் இவர்தான் தயாரிக்கிறார். போதுமா? என்று கேள்வி கேட்டுவிட்டு வழக்கமான தனது சைட் சிரிப்போடுகிளம்பினார் சூர்யா.

ஜோதிகாவின் மூன்று படங்கள்... சந்திரமுகியைத் தொடர்ந்து தன்னைத் தேடி வந்த தயாரிப்பாளர்களை எல்லாம் கொஞ்சம் வெயிட் பண்ணச் சொன்ன ஜோதிகாமூன்று படங்களை மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளார்.அதில் ஒன்று கமலுக்காக, இன்னொன்று கதைக்காக.. அடுத்தது தனது சூர்யாவுக்காக.கமலும் ஜோதிகாவும் ஜோடி சேர இருந்த வேட்டையாடு விளையாடு படம் சிக்கலில் மாட்டியுள்ளது. அதன் தயாரிப்பாளர்காஜா மொய்தீன் இப்போது தற்கொலை முயற்சியால் மருத்துவமனையில் இருக்கிறார்.இந்தப் படத்தில் ஜோதிகாவுக்கு அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் வேடமாம். படம் வந்தால் தெரியும்.அடுத்ததாக ஜோதிகா ஒப்புக் கொண்டுள்ள படம் ஜூன்.ஆர். தலைப்பு மிக வித்தியாசமாக இருப்பதைப் போலவே கதையும் படுவித்தியாசமாம். நல்ல கதை என்பதால் ஜோதிகா நடிக்க ஒப்புக் கொண்ட படமாம் இது.பெண் இயக்குனர் ரேவதி மேனன் படப்பிடிப்பை ஜெட் வேகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்.இதில் குஷ்பு, சரிதா ஆகியோருடன் ஜோதிகா நடிக்கிறார். ஆம்பிளைகளுக்கு அதிக வேலை இல்லாத படம். குஷ்பு, சரிதா எனமூத்தோரை எல்லாம் நடிப்பில் தூக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் ஜோதிகா என்கிறது இயக்குனரின் வட்டாராம்.தாய்-மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட படம் இது.இதற்கு அடுத்தபடியாக ஜோதிகா ஆசை ஆசையாய் நடிக்கக் காத்திருக்கும் படம் ஜில்லுன்னு ஒரு காதல். இதில் சூர்யாவும்,ஜோதிகாவும் ஜோடி சேருகிறார்கள் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இந்த ஜோடியின் 6வது படமான இதை இயக்குவதுஇயக்குனர் கெளதமின் உதவியாளர் கிருஷ்ணா.ஸ்டுடியோ கிரீன் என்ற நிறுவனம் படத்தைத தயாரிக்கப் போகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரஹ்மான் இசையில்சூர்யா நடிக்கப் போவது இதுவே முதல் முறை. மீண்டும் ஜோவுடன் சேருவது குறித்து சூர்யாவின் காதைக் கடித்தபோது,ஹலோ இதில் விசேஷம் எதுவும் இல்லை. நானும், ஜோவும் சேர்ந்து நடிச்சா நல்லா இருக்கும் என்று இயக்குனர் எதிர்பார்த்தார்.அதனால்தான் நடிக்கிறோம்.காக்க காக்க படத்தின்போதே இந்தக் கதையை கிருஷ்ணா என்னிடம் சொன்னார். யதார்த்தமான ஜோடியாக இந்தப் படத்தின்நாயகன், நாயகி வேண்டும் என்று கிருஷ்ணா எதிர்பார்த்தார். அதற்கு நாங்கள் சரியாக இருப்போம் என்பதால் எங்களைப்போட்டுள்ளார்.செப்டம்பரில் பூஜை. பொங்கலுக்கு ரிலீஸ். இந்தப் படத்தை திானும், ஜோவும் சேர்ந்து தயாரிக்கிறதா சில பேர் வதந்தி கிளப்பிவிட்டிருக்காங்க. அவங்களை திான் தடுக்கலை. சொல்றதை சொல்லிக்கிட்டு இருக்கட்டும். அதுக்குள்ள நாங்க படத்தைமுடிச்சுடுவோம்.ஞானவேல் என்பவர்தான் படத்தைத் தயாரிக்கிறார் (இவர் உங்க சொந்தக்காரராமே??). எனது தம்பி கார்த்தி நடிக்கும் பருத்திவீரன் படத்தையும் இவர்தான் தயாரிக்கிறார். போதுமா? என்று கேள்வி கேட்டுவிட்டு வழக்கமான தனது சைட் சிரிப்போடுகிளம்பினார் சூர்யா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்திரமுகியைத் தொடர்ந்து தன்னைத் தேடி வந்த தயாரிப்பாளர்களை எல்லாம் கொஞ்சம் வெயிட் பண்ணச் சொன்ன ஜோதிகாமூன்று படங்களை மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளார்.

அதில் ஒன்று கமலுக்காக, இன்னொன்று கதைக்காக.. அடுத்தது தனது சூர்யாவுக்காக.

கமலும் ஜோதிகாவும் ஜோடி சேர இருந்த வேட்டையாடு விளையாடு படம் சிக்கலில் மாட்டியுள்ளது. அதன் தயாரிப்பாளர்காஜா மொய்தீன் இப்போது தற்கொலை முயற்சியால் மருத்துவமனையில் இருக்கிறார்.

இந்தப் படத்தில் ஜோதிகாவுக்கு அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் வேடமாம். படம் வந்தால் தெரியும்.

அடுத்ததாக ஜோதிகா ஒப்புக் கொண்டுள்ள படம் ஜூன்.ஆர். தலைப்பு மிக வித்தியாசமாக இருப்பதைப் போலவே கதையும் படுவித்தியாசமாம். நல்ல கதை என்பதால் ஜோதிகா நடிக்க ஒப்புக் கொண்ட படமாம் இது.

பெண் இயக்குனர் ரேவதி மேனன் படப்பிடிப்பை ஜெட் வேகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இதில் குஷ்பு, சரிதா ஆகியோருடன் ஜோதிகா நடிக்கிறார். ஆம்பிளைகளுக்கு அதிக வேலை இல்லாத படம். குஷ்பு, சரிதா எனமூத்தோரை எல்லாம் நடிப்பில் தூக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் ஜோதிகா என்கிறது இயக்குனரின் வட்டாராம்.

தாய்-மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட படம் இது.

இதற்கு அடுத்தபடியாக ஜோதிகா ஆசை ஆசையாய் நடிக்கக் காத்திருக்கும் படம் ஜில்லுன்னு ஒரு காதல். இதில் சூர்யாவும்,ஜோதிகாவும் ஜோடி சேருகிறார்கள் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இந்த ஜோடியின் 6வது படமான இதை இயக்குவதுஇயக்குனர் கெளதமின் உதவியாளர் கிருஷ்ணா.

ஸ்டுடியோ கிரீன் என்ற நிறுவனம் படத்தைத தயாரிக்கப் போகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரஹ்மான் இசையில்சூர்யா நடிக்கப் போவது இதுவே முதல் முறை.


மீண்டும் ஜோவுடன் சேருவது குறித்து சூர்யாவின் காதைக் கடித்தபோது,

ஹலோ இதில் விசேஷம் எதுவும் இல்லை. நானும், ஜோவும் சேர்ந்து நடிச்சா நல்லா இருக்கும் என்று இயக்குனர் எதிர்பார்த்தார்.அதனால்தான் நடிக்கிறோம்.

காக்க காக்க படத்தின்போதே இந்தக் கதையை கிருஷ்ணா என்னிடம் சொன்னார். யதார்த்தமான ஜோடியாக இந்தப் படத்தின்நாயகன், நாயகி வேண்டும் என்று கிருஷ்ணா எதிர்பார்த்தார். அதற்கு நாங்கள் சரியாக இருப்போம் என்பதால் எங்களைப்போட்டுள்ளார்.

செப்டம்பரில் பூஜை. பொங்கலுக்கு ரிலீஸ். இந்தப் படத்தை திானும், ஜோவும் சேர்ந்து தயாரிக்கிறதா சில பேர் வதந்தி கிளப்பிவிட்டிருக்காங்க. அவங்களை திான் தடுக்கலை. சொல்றதை சொல்லிக்கிட்டு இருக்கட்டும். அதுக்குள்ள நாங்க படத்தைமுடிச்சுடுவோம்.

ஞானவேல் என்பவர்தான் படத்தைத் தயாரிக்கிறார் (இவர் உங்க சொந்தக்காரராமே??). எனது தம்பி கார்த்தி நடிக்கும் பருத்திவீரன் படத்தையும் இவர்தான் தயாரிக்கிறார். போதுமா? என்று கேள்வி கேட்டுவிட்டு வழக்கமான தனது சைட் சிரிப்போடுகிளம்பினார் சூர்யா.

Read more about: jyothika is too busy

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil