»   »  ஜோவின் சொந்தப் படத்தில் சூர்யா! சூர்யாவை வைத்து சொந்தப் படம் எடுக்கப் போகிறார் ஜோதிகா.லைலா, மஜ்னு காதலுக்குப் பிறகு ரொம்பப் பிரபலமாக பேசப்படுவது ஜோதிகா, சூர்யா காதல்தான். காதலிப்பதே தெரியாமல்இருவரும் படு ரகசியமாக காதலித்து வருகிறார்கள். இவர்களது காதலில் புயலை விட தென்றலே அதிகம் வீசி வருவதால்,நாளுக்கு நாள் காதல் வலுவடைந்து வருகிறது.கூடிய விரைவிலேயே இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற அளவுக்கு இப்போது இவர்களது காதல்வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் சூர்யா தனது தம்பி கார்த்தியை வைத்து ஒரு சொந்தப் படம் எடுத்து வருகிறார். பருத்தி வீரன்என்ற அப்படத்தின் உண்மையான தயாரிப்பாளர் சூர்யாதான் என்று கூறுகிறார்கள். ஆனால் தனது உறவினர் ஒருவரின் பெயரில்இப்படத்தை சூர்யா தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.இதேபோல இப்போது ஜோதிகாவும் சொந்தப் படத் தயாரிப்பில் குதித்துள்ளார். இதுவரை வெறும் நடிகையாக மட்டுமே இருந்துவந்த ஜோதிகா முதல் முறையாக தயாரிப்புத் துறையில் கால் பதிக்கிறார்.ஜோதிகாவுடன் இணைந்து இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிக்கிறார். இருவரது கூட்டுத்தயாரிப்பான இப்படத்தின் நாயகன், வேறு யாராக இருக்க முடியும், சூர்யாவேதான்.தற்போது ஜோதிகா தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன ஷாக் படத்தின் தெலுங்குப் பதிப்பில் நடித்து வருகிறார். அப்படத்தைராம்கோபால் வர்மாதான் தயாரிக்கிறார். இப்படம் முடிந்ததும் தங்களது கூட்டுத் தயாரிப்பைத் தொடங்கவுள்ளனர் வர்மாவும்,ஜோதிகாவும்.சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாகவும்,அற்புதமாகவும் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக வர்மா கூறியுள்ளார். சூர்யா, ஜோதிகாவின் கனவுப் படமாகவும் இதுஇருக்கும் என்றும் கூறுகிறார் வர்மா.இந்தப் படத்திற்குப் பிறகாவது கல்யாணம் கட்டிக்குவாங்களா?

ஜோவின் சொந்தப் படத்தில் சூர்யா! சூர்யாவை வைத்து சொந்தப் படம் எடுக்கப் போகிறார் ஜோதிகா.லைலா, மஜ்னு காதலுக்குப் பிறகு ரொம்பப் பிரபலமாக பேசப்படுவது ஜோதிகா, சூர்யா காதல்தான். காதலிப்பதே தெரியாமல்இருவரும் படு ரகசியமாக காதலித்து வருகிறார்கள். இவர்களது காதலில் புயலை விட தென்றலே அதிகம் வீசி வருவதால்,நாளுக்கு நாள் காதல் வலுவடைந்து வருகிறது.கூடிய விரைவிலேயே இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற அளவுக்கு இப்போது இவர்களது காதல்வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் சூர்யா தனது தம்பி கார்த்தியை வைத்து ஒரு சொந்தப் படம் எடுத்து வருகிறார். பருத்தி வீரன்என்ற அப்படத்தின் உண்மையான தயாரிப்பாளர் சூர்யாதான் என்று கூறுகிறார்கள். ஆனால் தனது உறவினர் ஒருவரின் பெயரில்இப்படத்தை சூர்யா தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.இதேபோல இப்போது ஜோதிகாவும் சொந்தப் படத் தயாரிப்பில் குதித்துள்ளார். இதுவரை வெறும் நடிகையாக மட்டுமே இருந்துவந்த ஜோதிகா முதல் முறையாக தயாரிப்புத் துறையில் கால் பதிக்கிறார்.ஜோதிகாவுடன் இணைந்து இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிக்கிறார். இருவரது கூட்டுத்தயாரிப்பான இப்படத்தின் நாயகன், வேறு யாராக இருக்க முடியும், சூர்யாவேதான்.தற்போது ஜோதிகா தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன ஷாக் படத்தின் தெலுங்குப் பதிப்பில் நடித்து வருகிறார். அப்படத்தைராம்கோபால் வர்மாதான் தயாரிக்கிறார். இப்படம் முடிந்ததும் தங்களது கூட்டுத் தயாரிப்பைத் தொடங்கவுள்ளனர் வர்மாவும்,ஜோதிகாவும்.சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாகவும்,அற்புதமாகவும் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக வர்மா கூறியுள்ளார். சூர்யா, ஜோதிகாவின் கனவுப் படமாகவும் இதுஇருக்கும் என்றும் கூறுகிறார் வர்மா.இந்தப் படத்திற்குப் பிறகாவது கல்யாணம் கட்டிக்குவாங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யாவை வைத்து சொந்தப் படம் எடுக்கப் போகிறார் ஜோதிகா.

லைலா, மஜ்னு காதலுக்குப் பிறகு ரொம்பப் பிரபலமாக பேசப்படுவது ஜோதிகா, சூர்யா காதல்தான். காதலிப்பதே தெரியாமல்இருவரும் படு ரகசியமாக காதலித்து வருகிறார்கள். இவர்களது காதலில் புயலை விட தென்றலே அதிகம் வீசி வருவதால்,நாளுக்கு நாள் காதல் வலுவடைந்து வருகிறது.

கூடிய விரைவிலேயே இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற அளவுக்கு இப்போது இவர்களது காதல்வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் சூர்யா தனது தம்பி கார்த்தியை வைத்து ஒரு சொந்தப் படம் எடுத்து வருகிறார். பருத்தி வீரன்என்ற அப்படத்தின் உண்மையான தயாரிப்பாளர் சூர்யாதான் என்று கூறுகிறார்கள். ஆனால் தனது உறவினர் ஒருவரின் பெயரில்இப்படத்தை சூர்யா தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.


இதேபோல இப்போது ஜோதிகாவும் சொந்தப் படத் தயாரிப்பில் குதித்துள்ளார். இதுவரை வெறும் நடிகையாக மட்டுமே இருந்துவந்த ஜோதிகா முதல் முறையாக தயாரிப்புத் துறையில் கால் பதிக்கிறார்.

ஜோதிகாவுடன் இணைந்து இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிக்கிறார். இருவரது கூட்டுத்தயாரிப்பான இப்படத்தின் நாயகன், வேறு யாராக இருக்க முடியும், சூர்யாவேதான்.


தற்போது ஜோதிகா தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன ஷாக் படத்தின் தெலுங்குப் பதிப்பில் நடித்து வருகிறார். அப்படத்தைராம்கோபால் வர்மாதான் தயாரிக்கிறார். இப்படம் முடிந்ததும் தங்களது கூட்டுத் தயாரிப்பைத் தொடங்கவுள்ளனர் வர்மாவும்,ஜோதிகாவும்.

சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாகவும்,அற்புதமாகவும் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக வர்மா கூறியுள்ளார். சூர்யா, ஜோதிகாவின் கனவுப் படமாகவும் இதுஇருக்கும் என்றும் கூறுகிறார் வர்மா.

இந்தப் படத்திற்குப் பிறகாவது கல்யாணம் கட்டிக்குவாங்களா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil