ஜோதிர்மயி...இன்னொரு கேரளத்து வரவு கேரளத்தில் இருந்து இன்னொரு பட்டாம் பூச்சி கோலிவுட் நோக்கி வந்திறங்கியிருக்கிறது. பெயர் ஜோதிர்மயி.மகா நடிகன் படத்தைத் தயாரித்த சுந்தரி பிலிம்ஸ் தயாரிக்கும் சிவலிங்கம் ஐபிஎஸ் என்ற படத்தில் நடிக்கப் போகிறார்ஜோதிர்மயி. இதில் ஹீரோ சத்யராஜ்.மலையாளத்தில் பரத் சந்திரன் ஐபிஎஸ் என்ற பெயரில் படம் தான் தமிழில் ரீமேக் ஆகிறது. நம் ஊர் விஜய்காந்த் மாதிரிமலையாளத்தில் அடிதடி, போலீஸ் வேடங்களுக்குப் பெயர் போனவர் சுரேஷ் கோபி. தமிழிலும் அவ்வப்போது தலை காட்டுவார்.ரஞ்சி பணிக்கர் என்பவர் இயக்கத்தில் இவர் நடித்த பரத் சந்திரன் ஐபிஎஸ் கேரளத்தில் சக்கை போடு போட்டது.இதன் ரீ-மேக் உரிமையை வாங்கி சத்யராஜை படத்தை எடுக்கிறது சுந்தரி பிலிம்ஸ். இதைத் தவிர கார்த்திக், புளோரா நடிக்கும்குஸ்தி, தியா-மீனா-பார்த்திபன் நடிக்கும் கர்த்தா ஆகிய படங்களையும் தயாரித்து வரும் இந்த நிறுவனம் சத்யராஜை வைத்துதேவுடா என்ற படத்துக்கும் பூஜை போட்டிருக்கிறது. இதற்கு புதுமுக ஹீரோயினை தேடி வருகிறார்களாம்.சரி, சிவலிங்கம் விஷயத்துக்கு வருவோம். இந்தப் படத்தை இயக்கப் போவது சத்யராஜின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரானராஜ்கபூர். இந்தப் படத்தில் இன்னொரு விஷேம் உண்டாம். அதாவது கார்த்திக் இதில் வில்லனாக நடிக்கப் போகிறார்.சத்யராஜ் ஹீரோ, கார்த்திக் வில்லன். காலச் சக்கரம் எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது பாருங்கள்.இதில் ஹீரோயினாக நடிக்கும் ஜோதிர்மயில் இதன் மலையாளப் பதிப்பிலும் இதே ரோலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.வழக்கமாக விஜய்காந்தின் போலீஸ் படங்களுக்கு வசனம் எழுதும் லியாகத் அலிகான் தான் இந்தப் படத்துக்கு வசனம் எழுதப்போகிறார். இப்போது இவருக்கும் விஜய்காந்துக்கும் டேர்ம்ஸ் சரியில்லை என்பது தனிக் கதை.முழு ஆக்ஷன்-கவர்ச்சி மசாலாவாக வெளிவரப் போகும் இந்தப் படத்தில் ஏதாவது மும்பை பிகர் அல்லது சத்யராஜுக்கு மிகவேண்டிய நமிதாவை ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட வைக்க இருக்கிறார்களாம்.சூட்டிங் சென்னையில் செட்களில் நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பரில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.நல்ல நடிப்புக்கு பெயர் போன ஜோதிர்மயி பிற மலையாள வரவுகளைப் போலவே கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்றுநம்பலாம்.ஜோதிர்மயி என்றால் பிரகாசமான பெண் என்று அர்த்தமாம்.

By Staff

கேரளத்தில் இருந்து இன்னொரு பட்டாம் பூச்சி கோலிவுட் நோக்கி வந்திறங்கியிருக்கிறது. பெயர் ஜோதிர்மயி.

மகா நடிகன் படத்தைத் தயாரித்த சுந்தரி பிலிம்ஸ் தயாரிக்கும் சிவலிங்கம் ஐபிஎஸ் என்ற படத்தில் நடிக்கப் போகிறார்ஜோதிர்மயி. இதில் ஹீரோ சத்யராஜ்.

மலையாளத்தில் பரத் சந்திரன் ஐபிஎஸ் என்ற பெயரில் படம் தான் தமிழில் ரீமேக் ஆகிறது. நம் ஊர் விஜய்காந்த் மாதிரிமலையாளத்தில் அடிதடி, போலீஸ் வேடங்களுக்குப் பெயர் போனவர் சுரேஷ் கோபி. தமிழிலும் அவ்வப்போது தலை காட்டுவார்.ரஞ்சி பணிக்கர் என்பவர் இயக்கத்தில் இவர் நடித்த பரத் சந்திரன் ஐபிஎஸ் கேரளத்தில் சக்கை போடு போட்டது.

இதன் ரீ-மேக் உரிமையை வாங்கி சத்யராஜை படத்தை எடுக்கிறது சுந்தரி பிலிம்ஸ். இதைத் தவிர கார்த்திக், புளோரா நடிக்கும்குஸ்தி, தியா-மீனா-பார்த்திபன் நடிக்கும் கர்த்தா ஆகிய படங்களையும் தயாரித்து வரும் இந்த நிறுவனம் சத்யராஜை வைத்துதேவுடா என்ற படத்துக்கும் பூஜை போட்டிருக்கிறது. இதற்கு புதுமுக ஹீரோயினை தேடி வருகிறார்களாம்.


சரி, சிவலிங்கம் விஷயத்துக்கு வருவோம். இந்தப் படத்தை இயக்கப் போவது சத்யராஜின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரானராஜ்கபூர். இந்தப் படத்தில் இன்னொரு விஷேம் உண்டாம். அதாவது கார்த்திக் இதில் வில்லனாக நடிக்கப் போகிறார்.

சத்யராஜ் ஹீரோ, கார்த்திக் வில்லன். காலச் சக்கரம் எவ்வளவு வேகத்தில் சுற்றுகிறது பாருங்கள்.

இதில் ஹீரோயினாக நடிக்கும் ஜோதிர்மயில் இதன் மலையாளப் பதிப்பிலும் இதே ரோலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக விஜய்காந்தின் போலீஸ் படங்களுக்கு வசனம் எழுதும் லியாகத் அலிகான் தான் இந்தப் படத்துக்கு வசனம் எழுதப்போகிறார். இப்போது இவருக்கும் விஜய்காந்துக்கும் டேர்ம்ஸ் சரியில்லை என்பது தனிக் கதை.


முழு ஆக்ஷன்-கவர்ச்சி மசாலாவாக வெளிவரப் போகும் இந்தப் படத்தில் ஏதாவது மும்பை பிகர் அல்லது சத்யராஜுக்கு மிகவேண்டிய நமிதாவை ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட வைக்க இருக்கிறார்களாம்.

சூட்டிங் சென்னையில் செட்களில் நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பரில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

நல்ல நடிப்புக்கு பெயர் போன ஜோதிர்மயி பிற மலையாள வரவுகளைப் போலவே கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்றுநம்பலாம்.

ஜோதிர்மயி என்றால் பிரகாசமான பெண் என்று அர்த்தமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X