சிம்புக்கு மட்டுமில்ல.. நயன்தாரா, ஜோதிகா என இந்த டாப் 5 ஹீரோயின்களுக்கும் பிரியாணின்னா பைத்தியமாம்!

சென்னை: பிரியாணின்னா யாருக்குத் தாங்க பிடிக்காது என்ற கேள்வி எழுந்தாலும், கோலிவுட்டில் இந்த டாப் 5 நடிகைகளுக்கு பிரியாணி மேல அப்படியொரு விருப்பம் இருக்காம்.

ரம்ஜான் நெருங்கும் நேரத்தில் நம்ம நாயகிகளுக்கு பிரியாணி மேல எந்த அளவுக்கு பைத்தியம் என தெரிந்து கொள்வதும் சுவையான விஷயம் தான்.

சமீபத்தில் தனது சமையல் அறையில் நடிகர் சிம்பு, சிக்கன் செய்து அசத்திய வீடியோ வைரலானது. தல அஜித், வெங்கட் பிரபு, சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு பிரியாணின்னா பிடிக்கும் என்பது போல நடிகைகள் ஜோதிகா, நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால் மற்றும் பூஜா ஹெக்டேவுக்கு எந்த அளவுக்கு பிரியாணின்னா பிடிக்கும் என்பதை இங்கே காண்போம்.

அருள் படத்திலேயே

அருள் படத்திலேயே

இரண்டு இட்லியில், நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடும் விளம்பரங்களில் நடித்து அசத்திய நடிகை ஜோதிகாவுக்கு பிரியாணி என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும், ஐதராபாத் தம் பிரியாணி என்றால் உசுரையே விட்டு விடுவாராம். ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம், ஜோதிகா நடிப்பில் வெளியான அருள் படத்தில் திருட்டுத்தனமாக பிரியாணி சாப்பிடும் காட்சியே அமைக்கப்பட்டிருக்கும்.

டேஸ்ட்டியான பிரியாணி

டேஸ்ட்டியான பிரியாணி

சப்பாத்தி மாவு போல இருக்கும் நடிகை தமன்னா, வொர்க்கவுட், யோகா என அதிகமாக டயட் கன்ட்ரோலை கடைபிடிப்பவர். ஆனால், பிரியாணி விஷயத்தில் மட்டும் அவரால், டயட் பிளானை கடைபிடிக்க முடியாதாம். சீட் டயட் என சொல்லிக் கொண்டு டேஸ்ட்டியான பிரியாணி வகைகளை வெளுத்து வாங்கி விடுவாராம்.

பிரியாணி தான் முதல்ல

பிரியாணி தான் முதல்ல

முகமூடி முதல் அலா வைகுந்தபுறமுலோ வரை கலக்கி வரும் புட்ட பொம்மா நடிகை பூஜா ஹெக்டேவுக்கு பிரியாணியும், பீட்ஸாவும் ரொம்ப பிடிக்குமாம். பிரியாணியா? பீட்ஸாவா? என்ற நிலை வந்தால், அவர் வயிற்றுக்குள் சத்தமின்றி முதலில் செல்வது பிரியாணி தானாம். பீட்ஸாவுக்கு இரண்டாம் இடம் தான்.

ஸ்வீட் பிடிக்காதோ

ஸ்வீட் பிடிக்காதோ

பெயரிலேயே அகர்வால் வைத்திருப்பதால், காஜல் அகர்வாலுக்கு ஸ்வீட் தான் அதிகம் பிடிக்கும் என பலரும் தப்புக் கணக்கு போட்டிருக்கலாம். ஆனால், பேப்பரில் பிரியாணி என எழுதி இருந்தாலே அவரது நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்கு பிரியாணி மேல அவ்வளவு ஒரு பைத்தியம் நம்ம இந்தியன் 2 நடிகைக்கு.. இந்தியன் 2 விபத்திலும் பல பேர் உயிரை பிரியாணி தான் காப்பாற்றியது என்ற கதைகளும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Aditirao Hydari dancing tribute to her guru | Sufiyum Sujathayum, Hey Sinamika
லேடி சூப்பர்ஸ்டாருக்கும்

லேடி சூப்பர்ஸ்டாருக்கும்

இந்த வீகன் கதையெல்லாம் இங்கே சொல்லாதீங்க, முதல்ல ஐதராபாத் தம் பிரியாணியை எடுத்து வைங்க ஒரு வெட்டு வெட்டுறேன் என நம்ம லேடி சூப்பர்ஸ்டார் பந்தியில் அமர்ந்தால் போதும், பிரியாணியை ஒரு வெளு வெளுக்காமல் விடமாட்டாராம். சைனீஸ் க்யூஸைனும் அவருக்கு பிடித்தமான உணவு என்றாலும், நண்பர்களுடன் வெளியே டின்னருக்கு சென்றால், பில்லில் பிரியாணி தான் டாப்பில் இருக்குமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X