ரஜினியைப் பார்க்க சிங்கப்பூர் செல்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்!

By Shankar

Rajini with KS Ravikumar
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்க்க விரைவில் சிங்கப்பூருக்குப் பயணமாகிறார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

சிகிச்சைக்குப் பிறகு ரஜினியைப் பார்க்க அனுமதி பெற்றுள்ள முதல் நபர் ரவிக்குமார்தான். ரஜினி உடல்நிலை, நராணா பட வேலைகள், படத்துக்கு இன்னும் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நடிகர்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ரஜினியுடன் கலந்துரையாடுகிறார் ரவிக்குமார்.

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினி. அவரைப் பார்க்க பலரும் அனுமதி கேட்டு வருகின்றனர். சிங்கப்பூரிலும் ஏராளமான ரசிகர்கள் அவரைப் பார்க்க குவிகின்றனர். ஆனால் அவருக்கு மேற்கொண்டு நோய்த் தொற்று பரவாமல் தடுக்கவும் பூரண ஓய்வுக்காகவும் இதுவரை பார்வையாளர் யாரையும் அனுமதிக்கவில்லை.

சிரஞ்சீவி மற்றும் அம்பரீஷ் ஆகிய இருவர்தான் இதுவரை ரஜினியை நேரில் பார்த்துவிட்டு வந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் இதையும் கூட ரஜினி குடும்பத்தினர் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் தன்னுடன் தங்கியிருந்த மனைவி, மகள்களை சென்னைக்கு அனுப்பிவிட்டார் ரஜினி. அவர் இப்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டாலும், பழைய உடல் வலுவைப் பெற 15 தினங்களாவது ஆகும் என்கிறார்கள்.

அதன் பிறகு பார்வையாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். அவரைச் சந்திக்கும் முதல் நபராக சென்னையிலிருந்து செல்கிறார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

சிங்கப்பூர் செல்லும் கே.எஸ்.ரவிகுமார், ரஜினிகாந்துடன் ராணா' பட வேலைகள் குறித்து பேசுகிறார். ரஜினிகாந்தின் உடல்நிலையை பொருத்து, 'ராணா' பட வேலைகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X