»   »  கார்த்திகா.. மலையாளம் to

கார்த்திகா.. மலையாளம் to

Subscribe to Oneindia Tamil
மலையாளத்திலிருந்து இன்னொரு அழகு சேச்சி தமிழுக்கு வருகிறார். அவர் பெயர் கார்த்திகா.

மலையாளத்தில் ஒன்றிரண்டு படங்களில் நடித்தபின் அப்படியே கோலிவுட்டுக்கு டேக் ஆப் ஆகி விடுவது கேரள நடிகைகளின்வழக்கமாகி வருகிறது. அந்த பாரம்பரியத்தை விடாமல் தழுவி தமிழுக்கு வந்திருக்கிறார் கார்த்திகா.

மலையாளத்தில் 3 படங்களில் நடித்துள்ள கார்த்திகா ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர். ஓரளவுக்கு கேரள சினிமாவில் இடம்கிடைக்க ஆரம்பித்த நிலையில், தமிழ் அழைத்துவிட சொந்த ஊர் ரசிகர்களை எல்லாம் அப்படியே மறந்துவிட்டு சென்னைக்குவண்டி ஏறிவிட்டார்.

வந்ததும் வராததுமாக இரண்டு படங்களில் புக் ஆகி விட்டார். முதல் படம் பிரஷாந்த்துடன், இன்னொரு படம் டான்ஸ் மாஸ்டராகஇருந்து ஹீரோவாக மாறியுள்ள ஹரிகுமாருடன்.

ஆர்.கே.செல்வமணியின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகப் போகும் புலன் விசாரணை- பார்ட் 2 படத்தில்பிரஷாந்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார் கார்த்திகா.

ஹரிக்குமாருக்கு ஜோடியாக இவர் நடிக்கும் படத்தின் பெயர் தூத்துக்குடி. இவர் மலையாளப் படங்களில் டான்ஸ் மாஸ்டராகபணியாற்றியவர். சொந்த ஊரும் கேரளா தான். (இப்போ தெரியுதா ஏன் தனக்கு ஜோடியாக கார்த்திகாவைப் போட்டார் என்பது.டிக்கெட் வாங்க மட்டுமே தமிழன்..)

நுழைஞ்சவுடனேயே இரண்டு படங்களா என்று கார்த்திகாவின் வாயைக் கிளறினால்,

அது என் அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். ரொம்ப நாளாகவே தமிழுக்குப் போக வேண்டும் என்று ஆசையாகஇருந்தேன். ஆனால் நல்ல வாய்ப்பு வந்தால் மட்டுமே நடிப்பது என்று வைராக்கியமாக இருந்தேன்.

இப்போது அந்த நல்ல வாய்ப்பு வந்துள்ளது. முதலில் நான் ஒப்பந்தமானது புலன் விசாரணை-2 படத்திற்குத்தான். அதைத்தொடர்ந்து தூத்துக்குடி பட வாய்ப்பும் வந்தது. இரண்டு படத்திற்கும் பிரச்சினை ஏற்படாதவாறு கால்ஷீட் கொடுத்துள்ளேன்.

இரு படங்களுமே எனக்கு தமிழில் நல்ல என்ட்ரியைக் கொடுக்கும். நன்றாகச் செய்ய வேண்டும். தமிழ் ரசிகர்கள் மனதை அள்ளவேண்டும் (டப்பையும் சேர்த்துத்தான்). கிளாமர் செய்வதில் பெரிய ஆட்சேபனை ஏதும் (அப்ப கோலிவுட்ல பிராப்ளமும் இல்ல).

நல்ல நல்ல கேரக்டர்களுடன் லேசான கிளாமரும் கலந்து நான் இருப்பேன் என இனிக்க இனிக்க பேசுகிறார் கார்த்திகா.

தூத்துக்குடி படத்தில் கார்த்திகா தவிர ஸ்வேதா என்ற ஹீரோயினும் நடிக்கப் போகிறாராம். படத்தை இயக்குவது சஞ்சய் ராம்என்கிற புதிய முக டைரக்டர்.

தூத்துக்குடியில் துவங்கி திருச்செந்தூர், நாசரத், மணப்பாடு, பாஞ்சாலங்குறிச்சி போன்ற இடங்களில் சூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil