ஸ்பெஷல்ஸ்

By Staff

துள்ளுவதோ இளமைக்குப் பிறகு கஸ்தூரி ராஜா தயாரித்துள்ள படம் காதல் கொண்டேன்.

துள்ளுவதே இளமையில் இளைய மகன் தனுஷை நடிகராக அறிமுகப்படுத்தியவர், காதல் கொண்டேனில் தனதுமூத்த மகன் செல்வராகவனை இயக்குனராக்கினார்.

படம் வசூலில் பிய்த்துக் கொண்டு போகிறதாம். துள்ளுவதே இளமை படத்தில் ரூ. 8 கோடி வரை லாபம் பார்த்தகஸ்தூரி ராஜா அதன் தெலுங்கு உரிமை மூலமும் செம காசு பார்த்தார்.

இப்போது தனுஷ்- புதுமுகம் சோனியா- புதுமுகம் சுதீப் இணைந்து நடித்துள்ள காதல் கொண்டேனும் பாக்ஸ்ஆபிஸ் ஹிட் ஆகிவிட்டது. இதனால் குறைந்தபட்சம் ரூ. 12 கோடியை கஸ்தூரி ராஜா லவட்டுவார் என்கிறார்கள்.படத்தின் ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு பிரம்மாண்டத் தயாரிப்பாளரான ஏ.எம். ரத்னம் ஓடி வந்து தனது அடுத்தபடமான ரெயின்போ காலனியை இயக்கும் சான்ஸை செல்வராகவனுக்குத் தந்துவிட்டார்.

மேலும் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனும், சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரியும் தங்களது அடுத்த படங்களுக்குஇவரை இயக்குராக வளைத்துப் போட முயன்று வருகின்றனர்.

துள்ளுவதே இளமை டீம் தான் காதல் கொண்டேனையும் எடுத்துள்ளது என்பதால் இதுவும் செக்ஸ் வக்கிரம்நிறைந்த படமாகவே நினைத்துக் கொண்டு ஜொள் விட்டவாறு வருபவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்தந்திருக்கிறார்கள். காதல்- சைக்கோ திரில்லர் படமான காதல் கொண்டேன், இளமைக் கூட்டத்தை தியேட்டர்களில்குவித்து வருகிறது.

தனுஷின் நடிப்பும், கதையும் படத்துடன் நம்மை ஒன்றிவிடச் செய்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X