நடிகரின் கண்ணீர் கதை: மனைவியுடன் சண்டை.. காதலி கண்முன்னே தற்கொலை.. குணாலின் கண்ணீர் கதை!

சென்னை: தமிழ் சினிமாவில் நடிக்க எத்தனையோ நடிகர்கள் வந்தாலும், அவர்கள் காலப்போக்கில் காணாமல் போய்விடுவார்கள். இதில், ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்கள் சினிமாவில் பெரிய அளவில் பிரகாசிக்க வாய்ப்பு இருந்த போதும், தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. அந்த வகையில் எந்த காரணமும் இல்லாமல், தனது உயிரை மாய்த்துக்கொண்ட நடிகர் தான் குணால். இன்று வரை இவரின் மரணத்திற்கு காரணம் தெரியாமல், இவரின் மரணம் மர்மமாகவே உள்ளது.

1976ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹரியானாவில் பிறந்தவர் தான் நடிகர் குணால். இவரின் இயற்பெயர் குணால் சிங். மும்பையில் கல்லூரி படிப்பை முடித்த குணால், மாடலிங்கில் ஒரு சில விளம்பரத்திலும் நடித்துள்ளார். அப்படித்தான் குணாலுக்கு இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து தமிழில் 1999 ஆம் ஆண்டு வெளியான காதலர் தினம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
முதல் படத்திலேயே பிரபல பாலிவுட் நடிகையான சோனாலி பிந்த்ரேவுடன் ஜோடி போட்டு நடித்தார். அந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருந்த பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, படத்தின் வெற்றிக்கு வித்திட்டது.

Kunal story
Photo Credit:

நடிகர் குணால்: இந்த திரைப்படத்தை தொடர்ந்து, பார்வை ஒன்றே போதும், புன்னகை தேசம், வருஷமெல்லாம் வசந்தம், பேசாத கண்ணும் பேசுமே , எங்கே என் கவிதை, உணர்வுகள் என அடுத்தடுத்து பல தமிழ் திரைப்படத்தில் நடித்தார். ஒரு கட்டத்தில் தமிழில் இவருக்கு வாய்ப்ப மங்கிப்போக, மீண்டும் மும்பைக்கு சென்று ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், அதுவும் நடக்காமல் போனதால், உதவி எடிட்டராகவும், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். இவருக்கு அனுராதா என்கிற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக அனுராதா, குணாலை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

மர்ம மரணம்: இந்நிலையில், 2008ம் ஆண்டு பிப்ரவரி 7ந் தேதி மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குணால் இந்த துயர முடிவை எடுத்த போது, அவரின் காதலியான நவீனாவும் அதே அறையில் இருந்ததால், இதை கொலை வழக்காக விசாரிக்க வேண்டும் என, குணாலின் தந்தை காவல்நிலையில் வழக்குப்பதிவு செய்தார். ஆனால், குணாலின் காதலியான நவீனா, குணால் இறந்த நேரத்தில் தான், குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருந்ததாகவும், அந்த நேரத்தில் குணால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வாக்கு மூலம் அளித்தார். அவரின் வாக்கு மூலத்தை அடுத்து, இந்த வழக்கை போலீசார் தற்கொலை வழக்காக கருதி, வழக்கை முடித்துவிட்டனர்.

சிம்ரனின் தங்கை: நடிகை நவீனா, இந்திப்படம் ஒன்றை தயாரிக்க இருந்ததாகவும், அதில் குணாலை ஹீரோவாக நடிக்க இருந்ததால், இருவரும் அடிக்கடி சந்தித்துள்ளனர். இதனால், ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத்தான் குணாலின் மனைவி அனுராதா பிரிந்து சென்றார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், சிம்ரனின் தங்கையான மோனால், குணாலை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால், ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகத்தான் மோனால் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்பட்ட நிலையில், பல ஆண்டுகள் கழித்து மோனால் எடுத்த அதே தவறான முடிவை குணாலும் எடுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதுநாள் வரை அவரின் மரணத்திற்கான காரணம் தெரியாமல் அவரின் மரணம் மர்மமாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X