»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

கஜாலா என்றால் என்ன அர்த்தம் என்று எங்களிடம் கேட்டால் அதற்குரிய பதிலை தர முடியாமைக்குவருந்துகிறோம்.

இந்த வார்த்தை தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொந்தமானதல்ல என்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.

மும்பையிலிருந்து, ஆந்திரா வழியாக, கோடம்பாக்கத்தில் குதித்திருக்கும் லேட்டஸ்ட் லோட்டஸின் பெயர்தான்கஜாலா. பெயர்தான் இப்படி குஜாலாக இருக்கிறது என்று இல்லை, ஆளும் படு குஷாலாகத்தான் இருக்கிறார்.

வாயைத் திறந்தால் பச்சை, பச்சையாக ஏ ஜோக்குகளை அள்ளி விடுகிறார். அவற்றில் பல ஜோக்குகள் சி கிளாஸ்தரத்தில் இருப்பதால் உடன் நடிப்பவர்கள் இவர் வாயைத் திறந்தால் ஓடி ஒளிகிறார்கள்.

கஜாலாவுக்கு கவர்ச்சி காட்டுவது என்றால் அல்வாவை பாதாம்கீரில் ஊற வைத்து சாப்பிடுவது போல அப்படி ஒருஸ்வீட்டான விஷயமாம். 20% கவர்ச்சி போதும் என்றால் 120% அளவுக்கு காட்டுகிறாராம்.

இப்போது 2 படங்களில் நடித்து வருகிறார். அர்ஜூனின் இயக்கத்தில் உருவாகும் ஏழுமலை (இதில் கவர்ச்சிஇமயமலை மும்தாஜும் இருக்காருங்கோ!) மற்றும் புதியவர்களின் கூட்டணியில் உருவாகும் யுனிவர்சிட்டி ஆகியஇரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் கஜாலா.

இதில் ஏழுமலையில் அவரை கவர்ச்சியில் புரட்டி எடுத்திருக்கிறார் அர்ஜூன். இதைக் கண்டு மும்தாஜுக்கேடென்சன் ஆகிவிட்டதாம். அவ்ளோ கவரிசி காட்டியிருக்கிறாராம்.

ஏப்ரல் மாதத்தில் படத்தில் காயத்ரி ஜெயராம் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். ஆனால், வித்தியாசமான கெட்டப்பாம். இதனால் கேரக்டர் அசத்தலாக பேசப்பட்டு பட வாய்ப்புகள் குவியும் என்று நினைக்கிறார். ஹீரோயின கனவோடு வந்து இப்படியாகிபோச்சே என்று கேட்டால், வாலியில் ஜோதிகா கூட கெஸ்ட் ரோல் தான் செய்தார். பிறகு நம்பர்-ஒன் ரேஞ்சுக்கு வரலையா. அது மாதிரி நானும் வருவேன் என்கிறார். இந்தப் படத்தில் ஹீரோ ரோஜாக் கூட்டம் ஸ்ரீகாந்த், ஹீரோயின் மணிபர்ஸ் வாய் ஸ்னேகா.

பஞ்ச தந்திரத்தில் சிம்ரன் படு கவர்ச்சி காட்டியுள்ளாராம். தொடர்ந்து கவர்ச்சியாக நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம். போட்டி அதிகமாகிவிட்டதால் வேறு வழியில்லாமல் இப்படி மீண்டும் தனது பழைய டிராக்கில் செல்ல முடிவு செய்துவிட்டாராம்.

சார்லி சாப்ளினை இயக்கிய ஷக்தி சிதம்பரம் எடுக்கவுள்ள அடுத்த படத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளார். இதில் முதல் முறையாக கவர்ச்சி கொப்பளிக்கும் வகையில் நடிக்கவுள்ளாராம் ஜோதி. இவருக்கும் அதே மார்க்கெட் விவகாரம் தான். போட்டி ஓவராகிப் போயிவ்ட்டதால் தனது மார்க்கெட்டை நிலை நிறுத்த இந்த முடிவாம்.

கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆன நடிகை அல்போன்ஸ்ா மீண்டும் நடிக்க வருகிறார் கொஞ்ச நாளாக டான்ஸ் ஏதும் ஆடாமல் வீட்டில் இருந்து பார்த்தார். முடியவில்லை. கேட்டால் கணவரின் வருமானம் போதவில்லை என்கிறார். ஆடிய காலும்....பாடிய வாயும் சும்மா இருக்குமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil