இந்தி சந்திரமுகி கஜோல்! சந்திரமுகியின் இந்திப் பதிப்பில் ஜோதிகா நடித்த வேடத்தில் கஜோல் நடிக்கவுள்ளார். அவரது கணவராக அஜய் தேவகனும், ரஜினி நடித்த மனோதத்துவ டாக்டர் வேடத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளார். மலையாளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மணிச்சித்திரத்தாழ் என்ற சூப்பர்ஹிட் படம், ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத் திரையுலகில் வரலாறு காணாத வசூலை வாரி அள்ளிய அப்படத்தில் விஷ்ணுவர்த்தன், ரமேஷ் அரவிந்த், செளந்தர்யா ஆகியோர் நடித்திருந்தனர். பி.வாசு அப்படத்தை இயக்கியிருந்தார். பாபாவுக்குப் பிறகு நல்ல கதையைத் தேடி வந்த ரஜினிகாந்த், ஆப்தமித்ராவைப் பார்த்த உடனேயே இம்ப்ரஸ் ஆகி, ஆப்தமித்ராவை தமிழில் உருவாக்க முடிவு செய்தார். பி.வாசு இயக்கத்தில், சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சந்திரமுகியாக உருவான ஆப்தமித்ரா, தமிழில் பெரும் சாதனை படைத்தது. ரஜினி படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் வசூலை வாரிக் கொட்டிய சந்திரமுகி ரஜினியின் இமேஜையும் தூக்கி நிறுத்தியது. ரஜினியின் நடிப்பை விட ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. இப்போது சந்திரமுகி இந்திக்கும் போகிறது. இந்திப் படத்தையும் வாசுவே இயக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து தீவிர பரிசீலனை நடந்து வந்தது. தற்போது முக்கிய நடிகர்கள் யார் என்பது இறுதியாகி விட்டது. ரஜினி வேடத்தில் அமிதாப்பும், பிரபு நடித்த வேடத்தில் அஜய் தேவகனும், ஜோதிகா வேடத்தில் கஜோலும் நடிக்கவுள்ளனர். இந்தத் தகவல்களை செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த வாசு தெரிவித்தார். சந்திரமுகியைப் போலவே இந்தி சந்திரமுகியும் மிகப் பெரும் வெற்றியைப் பெறும். அமிதாப்பச்சன் இப்படத்திற்கு பெரும் பலமாக இருப்பார். கஜோல் நல்ல நடிகை, அவர் இப்படத்தில் ஜோதிகாவின் வேடத்தில் நடிக்கவுள்ளார். அவரது நிஜ கணவர் அஜய் தேவகனே இப்படத்தில் கஜோலின் கணவராகவும் நடிக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம் என்றார் வாசு. முதலில் கஜோல் வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை போடலாமா என்று யோசித்துள்ளார்கள். அமிதாப்பச்சன் படம் என்பதால் ஐஸ் தட்டாமல் ஒத்துக் கொள்வார் என்று நினைத்துள்ளார்கள். ஆனால் அவரது கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் ஏற்படவே, அஜய்-கஜோல் ஜோடியையே இப்படத்திலும் போட முடிவு செய்து அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஜோதிகா அளவுக்கு கஜோல் இந்தி ரசிகர்களை பயமுறுத்துவாரா என்பது படம் வந்தால் தெரியும்!

By Staff
சந்திரமுகியின் இந்திப் பதிப்பில் ஜோதிகா நடித்த வேடத்தில் கஜோல் நடிக்கவுள்ளார். அவரது கணவராக அஜய் தேவகனும், ரஜினி நடித்த மனோதத்துவ டாக்டர் வேடத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளார்.

மலையாளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மணிச்சித்திரத்தாழ் என்ற சூப்பர்ஹிட் படம், ஆப்தமித்ரா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. கன்னடத் திரையுலகில் வரலாறு காணாத வசூலை வாரி அள்ளிய அப்படத்தில் விஷ்ணுவர்த்தன், ரமேஷ் அரவிந்த், செளந்தர்யா ஆகியோர் நடித்திருந்தனர். பி.வாசு அப்படத்தை இயக்கியிருந்தார்.

பாபாவுக்குப் பிறகு நல்ல கதையைத் தேடி வந்த ரஜினிகாந்த், ஆப்தமித்ராவைப் பார்த்த உடனேயே இம்ப்ரஸ் ஆகி, ஆப்தமித்ராவை தமிழில் உருவாக்க முடிவு செய்தார். பி.வாசு இயக்கத்தில், சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் சந்திரமுகியாக உருவான ஆப்தமித்ரா, தமிழில் பெரும் சாதனை படைத்தது.

ரஜினி படங்களிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரும் வசூலை வாரிக் கொட்டிய சந்திரமுகி ரஜினியின் இமேஜையும் தூக்கி நிறுத்தியது. ரஜினியின் நடிப்பை விட ஜோதிகாவின் அட்டகாசமான நடிப்பு படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.

இப்போது சந்திரமுகி இந்திக்கும் போகிறது. இந்திப் படத்தையும் வாசுவே இயக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்து தீவிர பரிசீலனை நடந்து வந்தது. தற்போது முக்கிய நடிகர்கள் யார் என்பது இறுதியாகி விட்டது.

ரஜினி வேடத்தில் அமிதாப்பும், பிரபு நடித்த வேடத்தில் அஜய் தேவகனும், ஜோதிகா வேடத்தில் கஜோலும் நடிக்கவுள்ளனர்.

இந்தத் தகவல்களை செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த வாசு தெரிவித்தார். சந்திரமுகியைப் போலவே இந்தி சந்திரமுகியும் மிகப் பெரும் வெற்றியைப் பெறும். அமிதாப்பச்சன் இப்படத்திற்கு பெரும் பலமாக இருப்பார்.

கஜோல் நல்ல நடிகை, அவர் இப்படத்தில் ஜோதிகாவின் வேடத்தில் நடிக்கவுள்ளார். அவரது நிஜ கணவர் அஜய் தேவகனே இப்படத்தில் கஜோலின் கணவராகவும் நடிக்கிறார்.

இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.

விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குகிறோம் என்றார் வாசு. முதலில் கஜோல் வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராயை போடலாமா என்று யோசித்துள்ளார்கள். அமிதாப்பச்சன் படம் என்பதால் ஐஸ் தட்டாமல் ஒத்துக் கொள்வார் என்று நினைத்துள்ளார்கள்.

ஆனால் அவரது கால்ஷீட் கிடைப்பதில் தாமதம் ஏற்படவே, அஜய்-கஜோல் ஜோடியையே இப்படத்திலும் போட முடிவு செய்து அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

ஜோதிகா அளவுக்கு கஜோல் இந்தி ரசிகர்களை பயமுறுத்துவாரா என்பது படம் வந்தால் தெரியும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X