»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது காக்க..காக்க... இதனால் இந்திக் காரர்களையும் கோலிவுட்டை நோக்கிஓடி வரச் செய்துள்ளது.

பிரம்மாண்டப் படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள படங்களிலேயே மிக அதிகமான லாபம்ஈட்டித் தந்துள்ள படம் இது தானாம். ஆள வந்தான் கொடுத்த பயங்கர அடியால் சுருண்டு போய் கிடந்ததாணுவுக்கு இந்தப் படம் மறுவாழ்வு தந்துள்ளது.

கேரளத்திலும் இந்தப் படம் சக்கைபோடு போடுகிறதாம். கேரளாவுக்கு இதுவரை எந்தத் தமிழ்ப படமும் 14பிரிண்டுகள் போடப்பட்டது இல்லையாம். முதல்முறையாக காக்க.. காக்க.. இந்தச் சாதனையை முறியடித்துள்ளது.

இதையடுத்து இந்தப் படத்தை இயக்கிய கெளதமை வைத்தே அடுத்த படத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளார்தாணு. அதற்கு முன் தெலுங்கில் இதே படத்தை கெளதமை வைத்து தாணு எடுப்பார் என்று தெரிகிறது.

இந் நிலையில் தான் இந்தியில் இருந்து பெரோஸ் கான் சென்னை வந்திறங்கி தாணுவைப் பார்த்துப்பேசியிருக்கிறார். காக்க. காக்கவைப் பார்த்து பிரமித்துவிட்டதாகவும், இதை தனது மகன் பர்தீன் கானை வைத்துஇந்தியில் எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக இந்தி உரிமையை தனக்குத் தருமாறும் கேட்டிருக்கிறார்.

இதையடுத்து பெரும் தொகைக்கு படத்தின் உரிமையை அவருக்கு விற்றுள்ளார் தாணு. இந்தியிலும் இந்தப்படத்தை கெளதமே இயக்குவார்கள் என்கிறார்கள். படத்தை மும்பையில் மட்டுமல்லாது, சென்னையிலும் படமாக்கமுடிவு செய்துள்ளாராம் பெரோஸ்கான்.

கெளதமின் முதல் படமான மின்னலே மிக சாப்டான கதையாக இருந்தது. அதற்கு அப்படியே தலைகீழாகபோலீஸ்- ரெளடிகள் என்கெளண்டர்களை வைத்து ஹாலிவுட் தர கேமரா வொர்க்குடன் காக்க... காக்கவைத்தந்துள்ளார்.

இந்தப் படத்தின் வெற்றிக்கு கதையை விட சூர்யாவின் நடிப்பும் தான் முழுக்க முழுக்கக் காரணம் என்கிறார்கள்.குறுகுறு பார்வை, கோபம், முரட்டுத்தனம், இயல்பு, அழுகை என காட்சிக்கு காட்சி மனிதர் பின்னி எடுத்திருக்கிறார்.

காக்க.. காக்கவில் பாண்டிசேரி அருகே இருப்பதாக ஒரு ஏரியில் அமைந்துள்ள உட்-ஹவுஸைக் காட்டுகிறார்கள்.இது உண்மையில் இலங்கையில் நுவேலி என்ற இடத்தில் ஏரியில் செட்- போட்டு எடுக்கப்பட்டதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil