twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசந்தியும், லட்சுமியும், பின்னே கலாபவன் மணியும்!

    |

    சென்னை: தமிழ் சினிமாவால் வெறும் வில்லனாகவும், கோமாளித்தனமான காமெடியனாகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்ட, ஆனால் நிஜத்தில் சகலகலா வல்லவன்.. கலாபவன் மணி.

    இவரது திரையுலக வாழ்க்கையை இரண்டாகப் பிரிக்கலாம். வசந்தியும், லட்சுமியும் பின்னே, ஞானும் படத்திற்கு முன்பு, பின்பு என.

    மலையாளத் திரையுலகில் ஜாம்பவான்களாக கருதப்பட்ட மோகன்லால், மம்முட்டி ஆகிய இருவருக்கும் கடும் போட்டியாளராக கலாபவன் மணி பிறப்பெடுத்தது இந்தப் படத்தில்தான்.

    1999ல்

    1999ல்

    1999ம் ஆண்டு வெளியான படம் வசந்தியும், லட்சுமியும். பார்வையற்ற பாடகராக இதில் நடித்திருந்தார் மணி. நடித்திருந்தார் என்பதை விட வாழ்ந்திருந்தார் என்று சொல்வதுதான் மணியின் திறமைக்கு மரியாதையாக இருக்கும்.

    தூக்கி நிறுத்திய திறமை

    தூக்கி நிறுத்திய திறமை

    அதுவரை சிறு சிறு வேடங்களில் வந்து போய்க் கொண்டிருந்த மணியை, இந்தப்படம்தான் ஒரு திறமையாளராக தூக்கி நிறுத்தியது. கலாபவன் மணியின் நடிப்பைப் பார்த்து பலரும் மிரண்ட படம் வசந்தியும் லட்சுமியும்.

    காவேரி -பிரவீனா

    காவேரி -பிரவீனா

    இப்படத்தில் கலாபவன் மணியுடன் காவேரி, பிரவீனா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த பிரவீனாதான் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமானவள் தொடரில் தாய் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

    தேசிய விருது

    தேசிய விருது

    இந்தப் படத்தில் கலாபவன் மணியின் நடிப்பு மொழிகளைத் தாண்டியும் பெரும் பாராட்டுப் பெற்றது ஒரு திறமையாளராக மணிக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவம் ஆகும். இப்படத்துக்காக தேசிய ஜூரி விருதை வென்றார் மணி. இப்படத்திற்கும் 2 விருதுகள் கிடைத்தன.

    தமிழிலும் காசி

    தமிழிலும் காசி

    பின்னர் இப்படம் தமிழில் விக்ரம் நடிக்க காசி என்ற பெயரில் ரீமேக் ஆனது. விக்ரம் கலாபவன் மணிக்கு ஈடாக நடிக்கவில்லை என்றாலும் கூட தனது பாணியில் அந்த பாத்திரத்துக்கு வலு சேர்த்திருந்தார். தொடர்ந்து கன்னடம், மலையாளம் என இப்படம் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது.

    அருமையான பாடகர்

    அருமையான பாடகர்

    கலாபவன் மணி ஒரு நடிகர் மட்டுமல்ல, நல்ல குணச்சித்திர நடிகர், அட்டகாசமான வில்லன், அருமையான காமெடியன், அற்புதமான பாடகர் என பல அவதாரம் கொண்டவர்.

    நாடன் பாடல்கள்

    நாடன் பாடல்கள்

    இவரது நாடன் பாடல்கள் அதாவது நாட்டுப் புற பாட்டுகள் கேரளத்தில் மிகப் பிரபலம். அப்படி அட்டகாசமாக பாடுவார் நாட்டுப் புறப் பாடல்களை. இசையமைக்கவும் செய்வார்.

    கலாபவன் மணி மறைவு.. மலையாளத்துக்கு மட்டுமல்ல கலையுலகுக்கும் ஒரு இழப்புதான்.

    English summary
    Vasanthiyum Lakshmimiyum Pinna Njaanum was the masterpiece of Kalabhavan Mani. He got the National jury award for the movie. And the movie was later remade in Tamil as Kasi with Vikram in the lead role.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X