»   »  பூர்ணிதாவின் அம்மாவும், பானுவின் அப்பாவும்!

பூர்ணிதாவின் அம்மாவும், பானுவின் அப்பாவும்!

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டின் சின்னப் பொண்ணு பூர்ணிதாவின் அம்மா சினிமாவில் நடிக்க படு ஆர்வமாக இருக்கிறாராம்.அதேபோல தாமிரபரணி படத்தின் ஹீரோயின் பானுவின் அப்பாவுக்கும் ஒரு சீனிலாவது தலையைக் காட்டிவேண்டும் என தவிப்பாய் இருக்கிறாராம்.

குட்டிப் பாப்பாவாக இருந்தபோது பேபி கல்யாணியாகவும், இப்போது பூர்ணிதாகவும் வலம் வரும் பூர்ணிதாவைநடிகையாக ஷேப் செய்த பெருமை அவரது அம்மாவுக்குத்தான்.

அப்பாவை விட பூர்ணிதாவின் அம்மாவுக்குத் தான், தனது மகளை நாயகியாக்க வேண்டும் என்ற துடிப்புஜாஸ்தியாக இருந்ததாம். அவரே ஒரு டான்ஸர் என்பதால் மகளுக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்து, நடிப்பும்சொல்லித் தந்தாராம்.

எப்படி டான்ஸ் ஆடினால் இந்தக் காலத்து சனங்களுக்குப் பிடிக்கும் என்ற நாடித் துடிப்பை அறிந்து அதற்கேற்பதனது மகளை டிரெய்ன் செய்துள்ளார் பூர்ணிதாவின் அம்மா.

இரண்டு பேரையும் நிற்க வைத்துப் பார்த்தால் அக்கா, தங்கச்சி போல தான் தெரியும். இதை பலரும் தன்னிடம்சொல்லியுள்ளதாக வெட்கப் பூ பூக்கிறார் பூர்ணிதாவின் மம்மி.

மகளை முன்னணி ஹீரோயினாக்காமல் விட மாட்டேன் என படு தீவிரமாக இருக்கும் அவருக்குஅவருக்குள்ளும் ஒரு நடிகையாகி விட வேண்டும் என்ற ஆசைப் பூ மலர ஆரம்பித்துள்ளதாம்.

எனவே பூர்ணிதாவைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம், அப்படியே எனக்கும் நல்லதா ஒரு ரோல் இருந்தாகொடுங்களேன் என்று உரிமையாக கேட்கிறாராம்.

இதேபோல தாமிரபரணி நாயகி பானுவின் அப்பாவுக்கும் நடிகராகி விட வேண்டும் என்ற தீராத ஆசை. நல்லகட்டுமஸ்தாக, பாடிகார்ட் ரேஞ்சில் இருக்கும் பானுவின் அப்பா வர்கீஸுக்கு தமிழ் சினிமாவில் தானும்தலையைக் காட்டிப்புடணும் என தீவிரமாக உள்ளார்.

மகளுடன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவர்தான் துணைக்கு வருகிறார். வர்ற இடத்தில் சேரைப் போட்டு குந்தாமல்,அங்குமிங்குமாக உலவிக் கொண்டிருப்பாராம்.

அத்தோடு தனது மகளைத் தேடி வரும் தயா>ப்பாளர்களிடம், தனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுஇம்சித்து வருகிறாராம்.

தாமிரபரணியை முடித்த கையோடு மலையாளத்துக்குத் திரும்பிய பானு அங்கு கோல் என்ற படத்தில் நடித்துவருகிறாராம். அதை முடித்து விட்டு மறுபடியம் தமிழுக்கு விஜயம் செய்வாராம்.

கல்யாணி, பானு இரண்டு பேருமே மலையாளிகள் என்பது சைட் நியூஸ்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil